என் மலர்
நீங்கள் தேடியது "கிரிக்கெட் மைதானம்"
- இலங்கையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
- வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகி உள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதில் பதுல்லா மாவட்டத்தில் அதிக அளவாக பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக கொழும்பு கிரிக்கெட் மைதானத்தை அவசரகால பேரிடர் முகாமாக மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
ஆபத்தான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 3,000 மக்களை இங்கு தங்க வைத்து, அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
- வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ஒருவர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிகுரியில் ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உள்ளதாக அறிவித்தார்.
சில தினங்கள் முன் முதல்வர் மம்தா பானர்ஜி ரிச்சாவுக்கு மாநில காவல்துறையில் டிஎஸ்பி வேலை வழங்கியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மம்தா கூறுகையில், "வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
கிரிக்கெட் பிரியர்களுக்கு அவரது பெயரில் ஒரு மைதானத்தை பரிசளிக்க விரும்புகிறோம்.
இப்போது, ரிச்சாவின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) தங்கப் பெண்ணுக்கு ரூ.34 லட்சம் நிதி வெகுமதியையும், தங்க முலாம் பூசப்பட்ட மட்டை மற்றும் பந்தையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
- இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது.
ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,121 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புனேவிலிருந்து உயர்தர கருப்பு மண்ணைப் பயன்படுத்தி இந்த மைதானத்தின் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 40,000 இருக்கைகள் உள்ளது.
இந்த மைதான கட்டுமானத்தின் ஆரம்பச் செலவு ரூ.740 கோடியாக மதிப்பிடப்பட்டது, ஆனால் நவீன வசதிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டதால் ரூ.1,121 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்.
- பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இ-மெயில் வந்துள்ளது.
மைதானத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதால் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
- கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மைதானம் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
உத்தர பிரதேசத்தில் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம், லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் ஆகியவற்றைத் தொடர்ந்து 3வதாக வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரஞ்சி டிராபி தொடரின் இன்று தொடங்கிய ஒரு போட்டியில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.
- டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.
புதுடெல்லி:
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கின.
இதில் ஒரு ஆட்டத்தில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன. டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.
அவர் ரஞ்சி தொடரில் ஆடுவதால் ரசிகர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக 3 கேலரிகள் திறந்து விடப்பட்டது. அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து டெல்லி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பீல்டிங்கின்போது விராட் கோலி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அத்துடன் அவர் விராட் கோலியை நோக்கி ஒடி அவரது காலில் விழுந்தார். உடனே அவரை விரட்டி சென்ற பாதுகாவலர்கள் தூக்கி நிறுத்தினர். விராட் கோலி, பாதுகாவலர்களிடம் அவரை ஒன்றும் செய்யாமல் பத்திரமாக அழைத்து செல்லுமாறு கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.
- இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்கப்படும் என்று 2024 திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.72 ஏக்கரில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கோவை ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
- பாம்பிடம் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு வீரர்கள் சென்றனர்.
- பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
கவுகாத்தி:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 7-வது ஓவரின்போது மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நடுவரிடம் தெரிவித்தனர்.

மேலும் பாம்பு இருந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் சென்றனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், கம்பி ஒன்றின் உதவியுடன் பாம்பை பிடித்து சென்றனர். இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
- ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி கணேசன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் குப்பையை அகற்றும் பணிக்கான எந்திரத்தை இயக்கி வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
ஆறுமுகநேரியில் நீண்ட காலமாக இருந்து வந்த குப்பைமேடு பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ரூ.1.44 கோடி செலவில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டும் இடத்தை மாற்றுவ தற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீத பாண்டியன், அவைத் தலைவர் சிசுபாலன், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






