என் மலர்tooltip icon

    உலகம்

    டிட்வா புயல் எதிரொலி: பேரிடர் முகாமாக மாறும் இலங்கை கிரிக்கெட் மைதானம்
    X

    டிட்வா புயல் எதிரொலி: பேரிடர் முகாமாக மாறும் இலங்கை கிரிக்கெட் மைதானம்

    • இலங்கையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
    • வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகி உள்ளனர்.

    கொழும்பு:

    இலங்கையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

    வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதில் பதுல்லா மாவட்டத்தில் அதிக அளவாக பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக கொழும்பு கிரிக்கெட் மைதானத்தை அவசரகால பேரிடர் முகாமாக மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

    ஆபத்தான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 3,000 மக்களை இங்கு தங்க வைத்து, அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    Next Story
    ×