search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய போது எடுத்த படம். அருகில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் உள்ளனர்.

    ஆறுமுகநேரியில் நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி கணேசன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் குப்பையை அகற்றும் பணிக்கான எந்திரத்தை இயக்கி வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    ஆறுமுகநேரியில் நீண்ட காலமாக இருந்து வந்த குப்பைமேடு பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ரூ.1.44 கோடி செலவில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டும் இடத்தை மாற்றுவ தற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீத பாண்டியன், அவைத் தலைவர் சிசுபாலன், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×