என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரசிகர்"
+2
- அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கினார்.
- முன்னதாக டோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சென்னை பயணம் செய்தார்.
இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்த நிலையில், எம்.எஸ். டோனியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர் ஒருவர் டெல்லியில் இருந்து 1200 கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்து ராஞ்சி வந்தடைந்தார். ராஞ்சியில் உள்ள எம்.எஸ். டோனியின் வீட்டு வாசலில் கூடாரம் அமைத்து தங்கிய ரசிகர், டோனினை சந்திக்காமல் வீடு திரும்புவதில்லை என்ற கணக்கில் அங்கேயே தங்க ஆரம்பித்தார்.
டெல்லியை சேர்ந்த கௌரவ் குமார், தனது சைக்கிள் பயணம் மற்றும் எம்.எஸ். டோனியை பார்க்கும் ஆசை மற்றும் அதற்கான முயற்சி உள்ளிட்ட தகதவல்களை தனது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அதன் மூலம் டோனிக்கு எப்படியும் தகவல் கிடைத்து, அவரை பார்க்க முடியும் என்று அவர் கணக்கிட்டு இருந்தார்.
கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை எம்.எஸ். டோனியை சந்திக்க அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கிய நிலையில் கௌரவ் குமார் ஒருவழியாக எம்.எஸ். டோனியை சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "நான் டெல்லியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து டோனியை சந்திக்க திட்டமிட்டேன், ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லி வந்துவிட்டேன்."
"தற்போது டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு பயணம் செய்தேன். அங்கு 5-6 நாட்கள் காத்திருந்த பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்ககு. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் அடுத்த பயணத்தை துவங்க தயாராகி இருக்கிறேன்," என பேசியுள்ளார்.
- தன்னை இந்திய ரசிகர்கள் தாக்கியதாக தெரிவித்து பரபரப்பை கிளம்பினார்
- டைகர் ராபி வங்கதேசத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. இந்த போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்ட டைகர் ராபி என்ற வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் தன்னை இந்திய ரசிகர்கள் தாக்கியதாக தெரிவித்து பரபரப்பை கிளம்பினார். மைதானத்தில் இருந்து டைகர் ராபி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
VIDEO | Bangladesh cricket team's 'super fan' Tiger Roby was allegedly beaten up by some people during the India-Bangladesh second Test match being played at Kanpur's Green Park stadium. He was taken to hospital by the police.#INDvsBAN #INDvsBANTEST pic.twitter.com/Tk5fOCLBTJ
— Moij Gugarman (@gugarman_moij) September 27, 2024
ஆனால் டைகர் ராபி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள டைகர் ராபி 12 நாள் மெடிக்கல் விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இந்தியா- வங்கதேசம் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளுக்கு புலி வேடம் போட்டு சென்று வந்துள்ளார். சென்னையில் நடந்த போட்டிக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது.
எனவே தற்போது டைகர் ராபி வங்கதேசத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் நாடுகடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், டைகர் ராபியின் 12 நாள் மெடிக்கல் வீசா இன்றுடன் [செப்டம்பர் 29] முடியவடைவதால் அவர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
- என்னோடு அரை நிர்வாணமாக நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்.
- ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?
பிரபல இந்தி நடிகையான திரிப்தி டிம்ரி 'அனிமல்' படத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார். அனிமல் படம் ஆணாதிக்க சிந்தனையுள்ள படம் என்றும், பெண் வெறுப்பை ஊக்குவிக்கிறது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த படத்தில் திரிப்தி டிம்ரி நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் 'அனிமல், பேட் நியூஸ்' போன்ற படங்களில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் நடித்துள்ள உங்களை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்.
இதனால் காட்டமான திரிப்தி டிம்ரி ரசிகருக்கு பதில் அளித்து கூறும்போது, ''நான் இதுமாதிரி நடித்தேன் என்பது சரி. ஆனால் என்னோடு அரை நிர்வாணமாக உதட்டோடு உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள். அவர் ஆண் என்பதாலா? ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?
ஆபாச காட்சிகளில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எப்படி எடை போடுவீர்கள். ஒருவரை அவமதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும் பார்ப்பதை விட்டுவிடுங்கள்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்.
- பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரரான ஹரிஸ் ரவுப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ரசிகரை தாக்க முயல்வது போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன் என ஹரிஸ் ராஃப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் இப்போது வீடியோ வெளியானதால், நிலைமையை நிவர்த்தி செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பொது நபர்களாக, பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன். மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் தொழில்களைப் பொருட்படுத்தாமல் மரியாதை காட்டுவது முக்கியம்.
- இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
- இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரிகளில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.
இந்நிலையில் வீரர்களின் பயிற்சியை பார்க்க வந்த ரசிகர்கள் கம்பி வேலி போட்டிருந்ததற்கு வெளியே நின்று பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோகித், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை பக்கத்தில் சென்று சந்தித்தார். அப்போது ஒரு ரசிகர் ரோகித் சர்மாவை கட்டியணைக்க வேண்டும் என தெரிவித்தார்.
உடனே ரோகித், கம்பி வேலி மத்தியில் இருக்கும் போது எப்படி கட்டியணைப்பது என யோசித்தாவறு நிற்க, உடனே பரவாயில்லை என்பது போல கம்பி வேலியுடன் சேர்ந்து அந்த ரசிகரை கட்டியணைத்தார். உடனே ரசிகர் மற்றும் ரோகித் சிரித்தவாறு அந்த இடத்தில் இருந்து விலகி சென்றனர்.
இந்த வீடியோ Cute-ஆ இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.
- தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்'படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.
தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூரை அடுத்த ஜடையனூரை சேர்ந்த விஜய் ரசிகரான கதிர்வேல் என்பவர் கில்லி படம் மீண்டும் திரைக்கு வந்த மகிழ்ச்சியில் விஜய்யை பற்றி 10 ஆயிரம் வரிகள் கொண்ட ஒரு முழு கவிதையை 36 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.
விஜய் ரசிகரின் இந்த சாதனையை கேரள மாநிலத்தை சேர்ந்த யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்து விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறது.
- குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
- இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முல்லாப்பூர்:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை போராடியது.
இறுதியில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த பாதகையில் ரோகித் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மேலும் அதில் எங்களுக்கு ஐபிஎல் கோப்பை வேண்டாம் டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர்.
- வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஒரு நபராக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற சாதாரண உள்ளூர் தொடரில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக நடுவர் முன்பிருந்த ஸ்டம்பை எட்டி உதைத்து பிடுங்கி எறிந்த ஷாகிப் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
அந்த நிலைமையில் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக நடுவர்களிடம் கூறிய ஷாகிப் அல் ஹசன் அவருக்கு அவுட் கொடுக்குமாறு கேட்டு வாங்கியது மற்றுமொரு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்டவரை விட 1.50 லட்சம் வாக்குகள் பெற்று சாகிப் எம்.பி. ஆனார். இந்நிலையில் ரசிகர் ஒருவரை சாகிப் கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்றதுமே எங்களை மறந்து திமிராக நடந்து கொள்கிறீர்களா நீங்கள் எல்லாம் மனிதரா என்று ரசிகர்கள் தற்போது அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
- வாட்ஸ் அப்-பில் இரண்டு நடிகர்களின் படம் வைப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டது
- தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிகுமாரை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பவன் கல்யாண் ரசிகர்.
அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஹரிகுமார். இவர் பிரபல நடிகரான பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக உள்ளார்.
ஓவியர்களான இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் அத்திலிக்கு வேலை தேடி வந்தனர். நேற்று மாலை இருவரும் வேலை முடிந்து மது குடித்தனர். அப்போது ஹரிக்குமாரின் செல்போனில் நடிகர் பிரபாசின் படம் வைத்து இருந்தார்.
இதனைக் கண்ட கிஷோர் உன்னுடைய ஸ்டேட்டஸில் நடிகர் பவன் கல்யாண் படத்தை வைக்க வேண்டும் என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார் இரும்பு கம்பி மற்றும் கற்களால் கிஷோரை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரி குமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.
- ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.
இந்த விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.80 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.70 ஆயிரம் என 40 பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் எருது விடும் விழாவில் சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.
மேலும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்