என் மலர்
கிரிக்கெட் (Cricket)
கம்பி வேலிக்கு வெளியே நின்று கட்டிப்பிடி வைத்தியம் கேட்ட ரசிகர்.. வைரலாகும் ரோகித்-ன் Cute வீடியோ
- இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
- இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரிகளில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.
இந்நிலையில் வீரர்களின் பயிற்சியை பார்க்க வந்த ரசிகர்கள் கம்பி வேலி போட்டிருந்ததற்கு வெளியே நின்று பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோகித், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை பக்கத்தில் சென்று சந்தித்தார். அப்போது ஒரு ரசிகர் ரோகித் சர்மாவை கட்டியணைக்க வேண்டும் என தெரிவித்தார்.
உடனே ரோகித், கம்பி வேலி மத்தியில் இருக்கும் போது எப்படி கட்டியணைப்பது என யோசித்தாவறு நிற்க, உடனே பரவாயில்லை என்பது போல கம்பி வேலியுடன் சேர்ந்து அந்த ரசிகரை கட்டியணைத்தார். உடனே ரசிகர் மற்றும் ரோகித் சிரித்தவாறு அந்த இடத்தில் இருந்து விலகி சென்றனர்.
இந்த வீடியோ Cute-ஆ இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.