என் மலர்
நீங்கள் தேடியது "மெழுகு சிலை"
- மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- அடுத்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்:
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நஹர்கர் கோட்டையில் உள்ள ஷீஸ் மஹாலில் மெழுகு சிலை செய்து வைக்கப்படும் என அந்தக் கண்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஹர்மன்பிரீத் கவுரின் மெழுகு சிலை திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஆடவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு இங்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலிருந்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்களின் உருவச் சிலைகளும் மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
- மெழுகு சிலைக்கு போஸ் கொடுக்கும் ஹீரோக்கள் எல்லாம் தனியாகவே தான் போஸ் கொடுப்பார்கள்.
பிரபலங்களின் உருவத்தை சிலையாக வடிவமைத்து லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் வைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்தியாவிலிருந்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்களின் உருவச் சிலைகளும் மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக தெலுங்கு நடிகர் ராம்சரணின் மெழுகு சிலையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு லண்டனில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
மெழுகு சிலைக்கு போஸ் கொடுக்கும் ஹீரோக்கள் எல்லாம் தனியாகவே தான் போஸ் கொடுப்பார்கள். ஆனால் நடிகர் ராம்சரண் தான் செல்லமாக வளர்க்கும் ரைம் என்கிற நாய்க்குட்டியை மடியில் அமர்த்தியபடி போஸ் கொடுத்திருந்தார். அவரது நாய்க்குட்டியுடன் அவரது மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் சோபாவில் நாய்க்குட்டியுடன் அமர்ந்திருக்கும் தனது மெழுகு சிலையுடன் அதே போன்ற போஸில் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த நாய்க்குட்டியையும் அமர வைத்தபடி போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
- சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார்.
- மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
பெங்களுரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சந்திரசேகர்-சுமா ஆகியோருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமா இறந்து விட்டார்.
இந்த நிலையில் சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அதன்படி அவரது மனைவி சுமாவின் மெழுகு சிலை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் தனது வெள்ளி விழா திருமண ஆண்டை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தார். இதற்காக உறவினர்களை அழைத்தார்.
விழாவில் இறந்த மனைவி சுமாவின் மெழுகு சிலையை வைத்திருந்தார். மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இறந்த சுமாவே நேரில் வந்து விட்டதாக கருதினர். பின்னர் தான் அது மெழுகு சிலை என்று தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
மேலும் சந்திரசேகர் தனது மனைவியின் மெழுகு சிலை அருகே நின்று கொண்டார். அவர்களுக்கு அருகில் 2 மகள்களும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். இறந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை கணவர் கொண்டாடிய சம்பவம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குடும்பங்களில் தந்தை- மகள் பாசம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. அதனை வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. அந்த உணர்வுகளை பல தருணங்களை உணர்த்தி உள்ளன.
அதன்படி தந்தையை இழந்த மகள் ஒருவர் தன் தந்தையின் உருவத்தை மெழுகுச்சிலையாக உருவாக்கி, அதன் முன் திருமணம் செய்துகொண்டார். இந்த உணர்வுப்பூர்வமான கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி பத்மாவதி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்வராஜ் உடல் நலக்குறைவால் இறந்தார்.
இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
தந்தை மீது அதீத பாசம் கொண்ட மகேஸ்வரி, தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில், செல்வராஜின் உருவத்தில் மெழுகு சிலையை உருவாக்க முடிவு செய்தார். இதற்கு தாயார் பத்மாவதியும் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி ரூ.5 லட்சம் செலவில், அதற்கான வடிவமைப்பாளர்களைக்கொண்டு மெழுகு சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் செல்வராஜ் உருவ அமைப்பில் மெழுகுச்சிலையை உருவாக்கினர். அந்த சிலை முன் நேற்று புரோகிதர்களை கொண்டு, திருமண சடங்குகள் நடந்தன.
தந்தை செல்வராஜ் உருவச்சிலை அருகில் தாயார் பத்மாவதி அமர, பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதன்பின்னர் மகேஸ்வரி. தந்தையின் உருவில் மெழுகு சிலை முன் நின்று திருமணம் செய்து கொண்டார்.
- அச்சு அசலாக தந்தையை போலவே இருக்கும் வகையில் சிலையை அமைத்தார்.
- பன்னீர்செல்வம் சிலையின் முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர்.
சேலம்:
சேலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய இயேசு ராஜா. சிவில் என்ஜினீயர். இவரது தந்தை பன்னீர்செல்வம். இவர் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார். அவர் உயிருடன் இருக்கும்போது தனது மகன் ஆரோக்கிய இயேசுராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்த ஆரோக்கிய இயேசுராஜா தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற எண்ணினார்.
இதையடுத்து தந்தைக்கு ரூ.5 லட்சம் செலவில் மெழுகுசிலை உருவாக்கினார். அச்சு அசலாக தந்தையை போலவே இருக்கும் வகையில் அந்த சிலையை அமைத்தார். அந்த சிலையை தனது வீட்டில் வைத்து வணங்கினார்.
இந்த நிலையில், ஆரோக்கிய இயேசு ராஜாவுக்கும் - ஜூலியட் லதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. மண்டபத்தில் இருக்கையில் தந்தையின் சிலையை அமர வைத்து திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது.
அப்போது பன்னீர்செல்வம் சிலையின் முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர். அதேபோல் உறவினர்களும் அந்த மெழுகு சிலை பார்த்து கண் கலங்கினர். பின்னர் அனைவரும் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வு திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
🤯 <-- Me when I saw my new wax figure at Madame Tussauds in NYC @nycwax (Coming to other locations soon!!) @TussaudsSydney@MTsSingapore@TussaudsBK@TussaudsHK@nycwax@MadameTussaudspic.twitter.com/XzRw9LjHJW
— PRIYANKA (@priyankachopra) February 7, 2019


டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. விராட் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை கண்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் 2013-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் வெற்றிகளை பாராட்டும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்காக விராட் கோலியின் உடல் அளவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்ரன் விராட் கோலியின் மெழுகு சிலையானது இன்று திறக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய விராட் கோலி, 'மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். என்னுடைய சிலையை மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாழ்நாள் நினைவுச்சின்னம் வழங்கிய மேடம் துசாட்ஸ் குழுவிற்கு நன்றி' எனக்குறிப்பிட்டிருந்தார்.
மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின், கபில் தேவ், உசைன் போல்ட், கால்பந்து வீரர் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #viratkholi #MadameTussaudsDelhi






