search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wax Statue"

    • சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார்.
    • மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சந்திரசேகர்-சுமா ஆகியோருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமா இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அதன்படி அவரது மனைவி சுமாவின் மெழுகு சிலை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் தனது வெள்ளி விழா திருமண ஆண்டை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தார். இதற்காக உறவினர்களை அழைத்தார்.

    விழாவில் இறந்த மனைவி சுமாவின் மெழுகு சிலையை வைத்திருந்தார். மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இறந்த சுமாவே நேரில் வந்து விட்டதாக கருதினர். பின்னர் தான் அது மெழுகு சிலை என்று தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

    மேலும் சந்திரசேகர் தனது மனைவியின் மெழுகு சிலை அருகே நின்று கொண்டார். அவர்களுக்கு அருகில் 2 மகள்களும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். இறந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை கணவர் கொண்டாடிய சம்பவம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தந்தை மீது அதீத பாசம் கொண்ட மகேஸ்வரி, தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில், செல்வராஜின் உருவத்தில் மெழுகு சிலையை உருவாக்க முடிவு செய்தார்.
    கள்ளக்குறிச்சி:

    குடும்பங்களில் தந்தை- மகள் பாசம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. அதனை வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. அந்த உணர்வுகளை பல தருணங்களை உணர்த்தி உள்ளன.
     
    அதன்படி தந்தையை இழந்த மகள் ஒருவர் தன் தந்தையின் உருவத்தை மெழுகுச்சிலையாக உருவாக்கி, அதன் முன் திருமணம் செய்துகொண்டார். இந்த உணர்வுப்பூர்வமான கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி பத்மாவதி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்வராஜ் உடல் நலக்குறைவால் இறந்தார்.

    இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    தந்தை மீது அதீத பாசம் கொண்ட மகேஸ்வரி, தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில், செல்வராஜின் உருவத்தில் மெழுகு சிலையை உருவாக்க முடிவு செய்தார். இதற்கு தாயார் பத்மாவதியும் சம்மதம் தெரிவித்தார்.

    அதன்படி ரூ.5 லட்சம் செலவில், அதற்கான வடிவமைப்பாளர்களைக்கொண்டு மெழுகு சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் செல்வராஜ் உருவ அமைப்பில் மெழுகுச்சிலையை உருவாக்கினர். அந்த சிலை முன் நேற்று புரோகிதர்களை கொண்டு, திருமண சடங்குகள் நடந்தன.

    தந்தை செல்வராஜ் உருவச்சிலை அருகில் தாயார் பத்மாவதி அமர, பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதன்பின்னர் மகேஸ்வரி. தந்தையின் உருவில் மெழுகு சிலை முன் நின்று திருமணம் செய்து கொண்டார்.

    தந்தையின் நினைவு ததும்பலில், மகேஸ்வரி தந்தையின் மெழுகு சிலையை உற்றுபார்க்க அவரது கண்கள் கலங்கியது. உடனே மகேஸ்வரியை திருமண வீட்டார் அனைவரும் சமாதானப்படுத்தினர். இந்த காட்சியை பார்த்த திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.



    இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. #PriyankaChopra #WaxStatue
    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்திற்கு, லண்டன் தவிர்த்து பல இடங்களிலும் அருங்காட்சியகங்கள் உள்ளன. இதில் வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு சிலைகளை வைக்கப்படுவது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது. 

    அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் முன்னாள் உலக அழகியும், உலக சினிமா நட்சத்திரமுமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அவர் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டபோது அணிந்திருந்த சிவப்பு நிற உடையில் அந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


    மேலும் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ், நிச்சயதார்த்தத்தின் போது பரிசளித்த வைர மோதிரம் போன்ற ஒரு மோதிரமும் அந்த மெழுகு சிலைக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்வையிட்டு மகிழ்ந்த பிரியங்கா சோப்ரா, தனது சமூக வலைத்தளத்தில், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களிலும் கூட என்னுடைய மெழுகு சிலை விரைவில் வைக்கப்பட உள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளார். #PriyankaChopra #WaxStatue #MadammeTussauds

    டெல்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. #SunnyAtTussauds #SunnyLeone
    பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் `வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். ஒரு சில இந்தி படங்களிலும் நடிக்கிறார். 

    இவரது வாழ்க்கை கதை இணைய தொடராக தயாராகி உள்ளது. சன்னிலியோன் இந்தி படங்களில் நடிப்பதற்கு அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகிறார்கள். 

    இந்த நிலையில் சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி உள்பட முன்னணி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது. 



    தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து சன்னிலியோன் கூறும்போது, ‘‘எனக்கு மெழுகு சிலை வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சிலையை பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. இந்த சிலையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உருவாக்க நிறைய பேர் பல நாட்கள் உழைத்து உள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். எனக்கு மகிழ்ச்சியான உணர்வை இந்த சிலை ஏற்படுத்தி உள்ளது. இதை கவுரவமாக கருதுகிறேன்’’ என்றார். #SunnyAtTussauds #SunnyLeone

    லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிலை வைக்கப்படுகிறது. அதற்காக தனது அளவீடுகளை கொடுக்க தீபிகா லண்டன் சென்றுள்ளார். #DeepikaPadunone #MadameTussauds
    உலகில் உள்ள பிரபலங்கள் பலரையும் கவுரவிக்கும் விதமாக மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுகிறது. அந்த வகையில் பத்மாவத் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகை தீபிகா படுகோனேவுக்கும் மேடம் துஸ்ஸாத்த்தில் சிலை வைக்கப்படுகிறது. 

    அதற்காக தனது அளவுகளை கொடுக்க தீபிகா லண்டன் சென்றுள்ளார். அடுத்த ஆண்டு வைக்கப்பட இருக்கும் தனது சிலைக்கான அளவீடுகளை கொடுத்த பின்னர், தீபிகா படுகோனே பேஸ்புக் நேரலையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது,

    `மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. நான் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கிறேன். ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். நான் சிறு வயதாக இருந்த போது ஒரு முறை எனது பெற்றோருடன் மேடம் துஸ்ஸாத்துக்கு வந்திருக்கிறேன். அந்த நியாபகங்கள் இன்னமும் என் நினைவில் நிற்கின்றன. அப்படி இருக்க மேடம் துஸ்ஸாத்தில் தனது சிலையும் வைக்கப்பட இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார். 



    இதற்கு முன்பாக, பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்டோருக்கு மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DeepikaPadunone #MadameTussauds

    இங்கிலாந்தின் மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #MadameTussaudsMuseum #Ramdev
    லண்டன்:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் லண்டனில் அமைந்துள்ளது. இங்கு உலக நாடுகளில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் மெழுகு சிலை இந்த அருங்காட்சியகத்தில் விரைவில் இடம் பெறவுள்ளது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லண்டன் சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யோகாவை உலகளவில் பிரபலப்படுத்தும் முயற்சியாக எனது மெழுகு சிலை நிறுவப்பட வேண்டும் என அவர்கள் கேட்டு கொண்டனர். ஆனால் நான் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன். இங்கு சிலை நிறுவப்படுவதன் மூலம் பல்வேறு நாட்டினர் யோகாவின் பெருமைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால் சிலை அமைக்க ஒப்புக் கொண்டேன். இதையடுத்து, எனது மெழுகு சிலை விரைவில் அமையவுள்ளது என தெரிவித்தார். #MadameTussaudsMuseum #Ramdev
    ×