search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருங்காட்சியகம்"

    • இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் இதை உருவாக்கியுள்ளார்
    • தன்னுடைய இந்த படைப்புக்கு ‘காமெடியன்’ என அவர் பெயர் சூட்டினார்

    எல்லாவற்றையும் கலைநயத்தோடு பார்க்க வேண்டும் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் தற்போது நடந்துள்ள இந்த சமபவம் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. அதாவது, சுவரில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

    இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவரது கலைப்படைப்படைப்புதான் இது. அமெரிக்காவின் நியூயார்க் ஏல மையத்தில் சுவற்றில் டக்ட் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது.

     

    மொரிசியோ கட்டெலன்

    இதன் ஆரம்ப விலையாக 8,00,000 டாலரில் ஏலம் தொடங்கிய நிலையில் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, அந்த வாழைப்பழத்தை வாங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி ஆகும். இந்த ஏல விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி பேசுபொருளாகியுள்ளது.

    ஜஸ்டின் சன்

     

     

    இந்த படைப்பை உருவாக்கிய கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வித்தியாசமான படைப்புக்களை உருவாக்குபவர். கடந்த 2016ம் ஆண்டு தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.

    அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள  அருங்காட்சியகத்தில் வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி அதை பார்வைக்கு வைத்தார்.

    தன்னுடைய இந்த படைப்புக்கு 'காமெடியன்' என அவர் பெயர் சூட்டினார். அவரது இந்த படைப்பு ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஏலத்தில் எடுக்கப்பட்ட வாழைப்பழம் மக்களின் பார்வைக்காகத் தொடர்ந்து அதே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்கள், அனைவரும் அந்த வாழைப்பழத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    ஆனால் ஒருநாள் அந்தக் கண்காட்சிக்கு வந்த பிரபல கலைஞர் டேவிட் டதுனா, வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆனால் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் வேறொரு வாழைப்பழம் ஒட்டிவைக்கப்பட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கண்காட்சி முடிந்ததும் அந்த வாழைப்பழம் ஏலம் எடுக்கப்பட்டவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே சுவற்றில் வாழைப்பழத்தை டக்ட் டேப் போட்டு ஒட்டுவது [ காமெடியன்] தனது அறிவுசார் உடைமை என்ற உரிமத்தை கட்டெலன் வாங்கி வைத்தார். இதனால் தற்போது அதேபோன்று சுவற்றில் டக்ட் டேப் போட்டு அவர் ஒட்டிய வாழைப்பழமே தற்போது நியூயார்க் ஏலத்தில் ரூ.52 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

    இந்த படைப்பின் சாராம்சம் வாழைப்பழத்தில் இல்லை என்றும் அந்த ஐடியா தான் இதில் விஷயமே என்று கட்டெலன் கூறுகிறார். இது கலை, மீம்ஸ் மற்றும் கிரிப்டோ உலகங்களை இணைக்கும் படைப்பு என்று வாங்கியவர் தெரிவித்துள்ளார். 

    • நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லமான அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின் நினைவுகள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் என்றார்.


    போராட்டத்தின்போது ஷேக் ஹசீனாவின் பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை சேகரித்து வருகிறேன்.
    • பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம்.

    அபுதாபி:

    அபுதாபியில் வசிக்கும் அமீரகத்தை சேர்ந்த ராஷித் யூசுப் அல் ஹம்மாதி தனது வீட்டையே அருங்காட்சியகமாக மாற்றி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அபுதாபியின் அல் பலா பகுதியில் உள்ள எனது வீட்டில் பாரம்பரிய பொருட்களை சேகரித்து அருங்காட்சியமாக மாற்றியுள்ளேன். இந்த அருங்காட்சியகம் மறைந்த அமீரகத்தின் நிறுவன அதிபர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனது தந்தை ஷேக் ஜாயித் கூறிய பல்வேறு கருத்துகள் குறித்து அடிக்கடி நினைவுகூர்வார்.

    இதன் அடிப்படையில் பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை சேகரித்து வருகிறேன். தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பாரம்பரிய பொருட்கள் இங்கு உள்ளன. இதில் 1923-ம் ஆண்டை சேர்ந்த கார் உள்ளிட்ட 17 பழங்கால கார்கள், 100 ஆண்டு பழமையான புத்தகம், பாஸ்போர்ட், தொலைக்காட்சி, வாசனை திரவிய வகைகள், பாரம்பரிய வீடுகளின் டிசைன்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

    இதனை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார சிறப்பு நடுகற்கள் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உலக மரபு வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சங்ககாலத்தில் இருந்தே வீரச்செயல் செய்தவர்க ளுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் சங்க காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்கள் அழிந்துபோயின. கி.பி 6-ம் நூற்றாண்டு தொடங்கி 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர், வாணர் கால நடுகற்கள் நமக்கு கிடைக்கி ன்றன. தர்மபுரி, செங்கம் பகுதிகளில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த வா ணர்க ளின் நடு கற்கள் அதி கம் கிடை க்கி ன்றன.

    9-ம் நூற்றா ண்டுக்கு பின் சோழர்கள், வாண கோவ ரையர்கள், குறுநில நாடுகளில் நடுக ற்கள் கிடைக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் வைக்க ப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்களில் கல்வெட்டுகள் காணப்ப டுகின்றன. மன்னரின் பெயர், ஆட்சி ஆண்டு, வீரச்செயல் செய்த வீரனின் பெயர், தந்தையின் பெயர், ஊர், எதற்காக இற ந்தான் போன்ற விவரங்கள் கல்வெ ட்டில் பொறிக்கப்ப ட்டன.

    தொறுபூசல் எனப்படும் கால்நடைகளை கவர்தல், மீட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. 15-ம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டு வெட்டும் வழக்கம் குறைந்து போனது. இன்றும் கூட சில பிரிவுகளில் இறப்பின்போது கல்லெடுக்கும் வழக்கம் உள்ளது.

    நடுகல்லில் பல வகைகள் உள்ளது. நினைவுக்கல், வீரக்கல், நவகண்டம், அரிக ண்டம், சதிகல், புலிகுத்திப்ப ட்டான் கல், ஆநிரைக்கல் என அமைக்கப்பட்டது. இது மிக பழமையான கி.மு. 4-ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்காப்பியர் இலக்கிய விதிப்படி எழுதப்பட்ட முதல் நடுதல் புள்ளிமான் கோம்பை (தேனி) தாதா பட்டி (திண்டுக்கல்) உள்ளி ட்ட 69 நடுகற்களின் புகைப்ப டங்கள் காட்சி ப்படுத்தப்ப ட்டுள்ளன. இந்த கண்கா ட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறி ப்பிட்ட என்னை கவர்ந்த கல்வெட்டு என்கிற கல்வெட்டின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    • மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.
    • மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.

    மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் இன்று முதல் பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள்உள்பட பலர் பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட் கள் உள்ளன. அந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி தற்போது முழுமையான கைராட்டை கண்காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் குடிசைத்தொழிலாக வருமானம் ஈட்டவும், வீட்டில் தங்களது துணி களை நெய்து கொள்ளவும் ஒரு கருவியாகத் திகழ்ந்தது இந்த கைராட்டை ஆகும்.

    நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சி யின் நோக்கமாகும் என்று மாவட்ட அரசு அருங்காட்சி யக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்தார். இந்தக்கண்காட்சியை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள்உள்பட பலர் பார்வையிட்டனர்.

    • சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்
    • கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சிய கத்தில் ஏராளமான அரிய பொருட்கள் உள்ளன. இந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தமாதம் கலைநயம் மிக்க பாரம்பரிய விளக்குகள் கண்காட்சிகள் இடம்பெற்றன.

    கலை ஆர்வம் மிக்க நமது முன்னோர்கள் செம்பிலும், பித்தளையிலும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் வீட்டு உபயோக பொருள்களை வடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக விளக்குகளில் பல்வேறு வகையான விளக்குகளை பயன்படுத்தி உள்ளனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விளக்குகளை பார்ப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கு என்று கூறினர். ஆனால் உண்மையில் இவை கஜ லட்சுமி விளக்குகள் என்று சொல்லப்படுகின்றன.2 யானைகளுக்கு நடுவில் அம்மன் உள்ளது. கஜம் என்பது சமஸ்கிருதத்தில் யானையை குறிக்கும். 19-ம் நூற்றாண்டில் இந்த மாதிரியான விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ள விளக்குகள் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சியின் நோக்கம் என்று கன்னியாகுமரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
    • பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம் மற்றும் கோபத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் தீன்மூர்த்தி பவன் வளாகத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் உள்ளது.

    இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, தீன்மூர்த்தி பவனில் தங்கியிருந்தார். அவர் மறைந்த பிறகு அங்கு நூலகமும், விடுதலை போராட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறித்து அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு நினைவு சின்னமாக மாற்றப்பட்டது.

    இதற்கிடையே நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி கடந்த மாதம் நடந்த அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர், பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில் நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியதாவது:-

    நேருவையும், அவரது பாரம்பரியத்தையும் மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது, அழிப்பது என்ற ஒற்றை புள்ளி நிகழ்ச்சி நிரலை மோடி கொண்டிருக்கிறார்.

    பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம் மற்றும் கோபத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது. நேரு பாரம்பரியத்தை மோடி அரசு அழித்து வருகிறது. இதுவே அவரது அரசின் செயல் திட்டம் ஆகும்.

    சுதந்திர போராட்டத்தில் நேருவின் மாபெரும் பங்களிப்புகள், இந்திய தேசிய அரசின் ஜனநாயக, மதச்சார் பற்ற அரசியல், தாராளவாத அடித்தளங்களை கட்டியெ ழுப்புவதில் அவர் செய்த மகத்தான சாதனைகள் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

    இடைவிடாத தாக்குதல் இருந்த போதிலும் நேருவின் பாரம்பரியம், உலகம் காணும் வகையில் வாழும். அவர் வரும் தலைமுறைகளுக்கும் ஊக்கமளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தஞ்சை பெரியகோவிலை கட்டி மாமன்னன் ராசராச சோழன், கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் என பிற்கால சோழர்களின் பங்களிப்பு என தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை உண்டு. சோழர்களின் போர் வெற்றி, கோவில் பணிகள், சமுதாய பணிகள், கலைத்திறன் என எல்லாவற்றையும் விளக்கக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைய உள்ளது.ஏற்கனவே பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவின்போது சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட காலம் தான் நடைபெற்றது. தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது. பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதாக அருங்காட்சி யகத்திற்கு வந்து பார்ப்பதற்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது. விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலின்பேரில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், தஞ்சை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.
    • வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை வழங்கி உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    பெங்களூரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சாஸ்தா ரமேஷ். இவர் தான் வரைந்த இந்திய பாரம்பரிய ஓவியங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜிடம் வழங்கினார். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    மாணவர் சாஸ்தா ரமேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க வந்தபோது இங்குள்ள சிற்பங்களைப் பார்த்து இதே போன்று பாரம்பரியம் மிக்க ஓவியங்களை வரைய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி, இந்திய பாரம்பரிய ஓவியங்களான 13 வகையான மயில்களை வாட்டர் கலரில் வரைந்து, புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.

    இந்த ஓவியப் புத்தகம் நியூயார்க் நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த 13 வகையான ஓவியங்களில், பல நூறு ஆண்டுகள் பழமையான வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கி உள்ளார். இதைத் தொடர்ந்து ஓவிய ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்திய பாரம்பரிய ஓவியங்களைப் பற்றியும், வகுப்புகள் எடுக்கவும், இது பற்றிய புத்தகம் எழுதவும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பன்னீர்செல்வம், அருங்காட்சியக பணியாளர்கள் பெருமாள், செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் போது 13 வகையான ஓவியங்கள் குறித்து அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி பெற்று வரும் 3-ம் ஆண்டு வரலாற்று மாணவ, மாணவிகளுக்கு சாஸ்தா ரமேஷ் விளக்கம் அளித்தார்.

    • தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சாவூர் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலம் அருகில் உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் ஏற்கெனவே தேர்வு செய்து, துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் காண்பித்துள்ளார்.

    இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது என துறைச் செயலர் கூறியதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாநகரில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பாக இருக்கிறது.

    இந்த இடத்துக்கு வருவதற்கான வழிகள் குறித்து விரிவான ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.

    ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

    இதை மேலும் ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்பட்டு, முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அருங்காட்சியகம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகரன், டி. கே. ஜி. நீலமேகம், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தாசில்தார் சக்திவேல், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் முத்துக்குமார், தஞ்சாவூர் அரசு அருங்கா ட்சியம் காப்பாட்சியர் (பொ) சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளவைகள் குறித்து கலெக்டர் எடுத்து கூறினார்.
    • தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு நடத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

    நில அளவீட்டு துறை காட்சியறை, கைவினைப் பொருட்கள் காட்சியறை, ராஜாளி பூங்கா உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தார். அவருக்கு அருங்காட்சி யகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து விதமான அம்சங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் எடுத்துக் கூறினார்.

    மேலும் அருங்காட்சி யத்தை தினமும் வரும் சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் எண்ணிக்கை குறித்தும் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் அரண்மனை, பூம்புகார் விற்பனை நிலையம், தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது சுற்றுலா வளர்ச்சி மேலாண் இயக்குனர் கீதா, துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், அருங்காட்சியக நிர்வாக அலுவலர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×