search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் சிரட்டை"

    பரமத்தி வேலூர் பகுதிகளில் தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கபிலர்மலை, பரமத்தி, கந்தம்பாளையம், மணியனூர், நல்லூர், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், செல்லப்பம்பாளையம், கபிலக் குறிச்சி, கவுண்டம் பாளையம், சிறுநல்லி கோவில், கொத்தமங்கலம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கைகளை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். 

    வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சிரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×