search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் குழந்தைகள் விளையாட ரெயில் சேவை
    X

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அருங்காட்சிய வளாகத்தில் குழந்தைகள் விளையாடி பொழுதுபோக்குவதற்கான தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் குழந்தைகள் விளையாட ரெயில் சேவை

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது.
    • தினமும் இந்த அருங்காட்சி யகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

    தஞ்சை நகரின் மையப் பகுதியில் இருக்கும் பழமையான பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்தார்.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது. கலெக்டர் முயற்சியால் இந்த அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெற்றது.

    கடந்த ஜனவரி மாதம் இந்த அருங்காட்சியகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    இதில், வேளாண்துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக் காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த செயற்கை முறையில் தத்ரூபமான காட்சிகள், அரியவகை பறவைகள் பூங்கா 7டி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    தினமும் இந்த அருங்காட்சி யகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் அருங்காட்சியகத்தில் கூடுதல் அம்சமாக குழந்தைகள் விளையாடி பொழுதை போக்குவதற்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த ரெயில் சேவையை நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    இன்னும் சில நாட்களில் பள்ளி தேர்வு முடிந்து கோடை விடுமுறை வரவுள்ளது.

    தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருங்காட்சியகத்துக்கு வருவர். தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    Next Story
    ×