என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rabindranath tagore"

    • உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
    • தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார்.

    நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அருங்காட்சியகத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

    ஒரு பார்வையாளர் தனது குடும்பத்துடன் அருங்காட்சியகத்திற்கு வந்தபோது, வாகன நிறுத்துமிடக் கட்டணம் தொடர்பாக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், பார்வையாளர் ஒரு அலுவலக அறையில் பூட்டப்பட்டு ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு கும்பல் அருங்காட்சியக வளாகத்திற்குள் புகுந்து அதன் அரங்கத்தை சூறையாடியதுடன், இயக்குநரையும் தாக்கியது.

    இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த, தொல்லியல் துறை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

    தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார். இந்த மாளிகை இப்போது அவரின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கலாச்சார பாரம்பரிய தளமாகவும், அருங்காட்சியகமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படம் கொடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. #PMModi #RabindranathTagore
    கொல்கத்தா:

    வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்திநிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35,000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேச பவன் என்ற பெயரில் புதிய அரங்கம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது.

    இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேச பவனை திறந்து வைத்தனர். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். 

    மேலும், விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

    பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி திரும்பிக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்தார். அவர் தான் வைத்திருந்த ரவீந்திரநாத் தாகூர் படத்தை பிர்தமர் மோடிக்கு பரிசளித்தார்.

    அவரும் அதை வாங்கி பார்த்துவிட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தார். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PMModi #RabindranathTagore
    ×