என் மலர்
நீங்கள் தேடியது "மேற்கு வங்காளம்"
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.
- 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக 12 பேர் பலியானார்கள். ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தல் செய்தியை அனுப்பி இருக்கிறார்.
அனைத்துத் துறையும் உயர்நிலை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது.
- டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது
- வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை" என கூறியிருந்தனர்.
அதில், டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் வங்காள மொழியை வங்கதேச' மொழி என குறிப்பிட்டுள்ளனர்.
வங்காள மொழி எங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மொழி. தேசிய கீதம், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி.
வங்காள மொழியை வங்கதேச மொழியாக குறிப்பிடுவது தேச விரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது.
இது இந்தியா முழுவதும் வங்காள மொழி பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்" என்று பதித்துள்ளார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கண்டன பதிவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்கதேச மொழி" என்று குறிப்பிட்டுள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் ஏற்படுத்துவதாகும்.
இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை அவை அம்பலப்படுத்துகின்றன.
இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்காள மொழிக்கும் மக்களுக்கும் மம்தா பானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார். இதற்கு சரியான பதிலடி கொடுக்காமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்ல விடமாட்டார்.
- கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள மாநில அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.
- கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி நிதி.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் காளி பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் ஏராளமான கமிட்டிகள் உருவாகும். அந்த கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள மாநில அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு துர்க்கை பூஜைகளுக்காக மட்டும் ஒவ்வொரு கமிட்டிக்கும் தலா ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு துர்க்கை பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.1.10 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஆண்டு துர்க்கை பூஜைக்கு மேற்கு வங்காள மாநில அரசு ரூ.400 கோடி செலவிட உள்ளது.
கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- தினமும் காலையில் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி, கடையின் பூட்டைத் திறந்துவிட்டு வேலைக்குச் செல்வார்.
- கடைக்காரர்கள் யாரும் இல்லாமலேயே இங்கு டீ விற்கப்படுகிறது.
தேநீர் பிரியர்கள் காலையிலோ அல்லது மாலையிலோ வழக்கமான தேநீர் அரட்டைகளைத் ஒருபோதும் தவறவிட விரும்புவது இல்லை. தேநீர் மற்றும் தேநீர் குடித்தபடியே அரட்டை அடிப்பது என இந்த இரண்டும் அவர்களுக்கு ரொம்ப முக்கியம்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் ஒரு டீக்கடை கடைக்காரர் இல்லாமல் இயங்கி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் சம்பூரில் உள்ள ஒரு சந்தில் அமைந்துள்ள இந்த சிறிய டீக்கடை ஊழியர்களை கொண்டிருக்கவில்லை. இது சம்பளம் வழங்குவதில்லை. ஆனால் இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற கப் டீயை வழங்கி உள்ளது.
தினமும் காலையில் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி, கடையின் பூட்டைத் திறந்துவிட்டு வேலைக்குச் செல்வார். காலை முதல் மாலை 7 மணி வரை பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் உள்ளூர்வாசிகள் என கடைக்கு வரும் எல்லோரும் மாறி மாறி பார்த்துக்கொள்கின்றனர்.
கடைக்கு வருபவர்களே தேநீர் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள், பணம் வசூலிக்கிறார்கள், சுத்தம் செய்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு ரூபாயை கூட எதிர்பார்க்காமல் செய்கிறார்கள்.
கடைக்காரர்கள் யாரும் இல்லாமலேயே இங்கு டீ விற்கப்படுகிறது. எனினும், அவர்கள் குடித்த டீக்கான பணத்தை அங்குள்ள பணப்பெட்டியில் தவறாமல் போட்டுவிடுகிறார்கள்.
இது முழுக்க முழுக்க நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையில் இயங்குகிறது.
- வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
- 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர்.
வக்பு சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒரு கும்பல் அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
இந்த நிலையில் முர்ஷிதாபாத்தில் தந்தை- மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர் எஜ்நஐ குறிப்பிடத்தக்கது.
- முர்ஷிதாபாத் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தனர்.
- வன்முறையால் பாதிக்கப்பட்ட மால்டா மாவட்டத்திற்கு கவர்னர் அனந்த போஸ் நேற்று சென்றார்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அதன்பின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் தந்தை, மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சுதி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் பகுதிகளில் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, முர்ஷிதாபாத் வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க மேற்குவங்க போலீசார் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மால்டா மற்றும் முர்ஷிதாபாத் பகுதிக்கு கவர்னர் அனந்த போஸ் நேற்று ரெயிலில் சென்றார். அங்கு தற்காலிக முகாம்களில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசிய அவர், வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
வன்முறை பாதித்த பகுதிகளில் தேசிய மகளிர் ஆணைய தலைவி விஜயா ரஹாத்கர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
- பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
- தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அங்கு எவ்வளவு முயன்றும் மீடேற முடியவில்லை. அடுத்த வருடம் மேற்கு வங்காளத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக தனது வேலையை தொடங்கி உள்ளது.
அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் கீர்த்தி ஆசாத் இருவடையேயான தனிப்பட்ட வாட்ஸ்அப் chat-களின் ஸ்க்ரீன் ஷாட்களை பாஜக தலைவர் அமித் மாளவியா கசிய விட்டுள்ளார். இதோடு, தேர்தல் ஆணையத்தில் வைத்து திரிணாமுல் எம்பிக்கள் இருவர் சண்டையிட்டு கொண்ட வீடியோவையும் பாஜக தலைவர் அமித் மாளவியா பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட chat-களில் கல்யாண் பானர்ஜி, சொந்த கட்சியில் இருக்கும் மற்றொரு பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவர் குறித்து குறை கூறுகிறார். அவரை கீர்த்தி ஆசாத் சமாதானப்படுத்துகிறார். அந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு கல்யாண் பானர்ஜி ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த சாட்-இல் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இவ்வாறு கட்சியின் தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.
அவர் கூறியதாவது, "வெளியிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள் எங்களை அவமானப்படுத்தியுள்ளன, சங்கடப்படுத்தியுள்ளன. இது நடந்திருக்கக்கூடாது. ஒவ்வொரு கட்சியின் உள் தனியுரிமையை பராமரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
- புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்
புதுடெல்லி:
மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியானதும், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். விரைவில் புதிய ஆளுநர் பதவியேற்க உள்ளார்.
- ரேசன் கார்டில் தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம்.
- அதிகாரிகள் செய்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகாந்தி தத்தா வேதனை
கொல்கத்தா:
நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ரேசன் கார்டில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.
ஸ்ரீகாந்தி தத்தா என்ற என்ற நபர், ரேசன் கார்டில் தன் பெயரை தவறுதலாக பிரின்ட் செய்யப்பட்டதை சரிசெய்யும்படி, அரசு அதிகாரியின் வாகனத்தை துரத்திச் சென்று நாய் போன்று குரைத்தார். தனது புகாரை ஏற்று பெயரை சரிசெய்யும்படி அந்த அதிகாரியிடம் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்ரீகாந்தி தத்தாவின் பெயரில் உள்ள தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம். குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். அதனால்தான் ஆத்திரத்தில் நாய் போன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குரைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "பெயரை திருத்துவதற்காக மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக விண்ணப்பித்தபோது ஸ்ரீகாந்தி குத்தா என பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள் செய்த இந்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் விண்ணப்பிக்க சென்றபோது, வட்டார வளர்ச்சி இணை அதிகாரியைப் பார்த்ததும் அவர் முன்னால் நாயைப் போல் குரைக்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு இதுபோன்று பெயரை திருத்தம் செய்வதற்காக எத்தனை முறைதான் அலைவது?" என கேள்வி எழுப்பினார்.
- ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் முன்முகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிதான்
- ஒவ்வொருவருக்கும் லட்சுமணன் ரேகை எனப்படும் எல்லை உள்ளது. அதை தாண்டக்கூடாது
இந்தியாவில் பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களுக்கும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் கவர்னர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கும் முன்னாள் கவர்னர் ஜெக்தீப் தன்கர் இடையே கடும் மோதல் இருந்தது. பின்னர் ஒரு வழியாக ஜெக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு மாற்றலாகி சென்றார்.
தற்போது சி.வி. ஆனந்தா போஸ் மேற்கு வங்காள மாநில கவர்னராக இருந்து வருகிறார். இவருக்கும் மம்தாவுக்கும் இடையிலும் மோதல் போக்கு இருந்து வருகிறது.
ஆளுநருக்கு அதிகாரம் அதிகமா? முதல்வருக்கு அதிகமா? என்ற விவாதம் மேலோங்கி நிற்கும் நிலையில், பிடிஐ செய்தி நிறுவனம் சி.வி. ஆனந்தா போஸிடம் பேட்டி கண்டது.
அப்போது சி.வி. ஆனந்தா போஸ் கூறியதாவது:-
கவர்னரின் மதிப்பிற்குரிய அரசியல் சாசனத்தின்படி முதலமைச்சர், கவர்னரின் சகா. ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் முன்முகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிதான். நியமனம் செய்யப்பட்ட கவர்னர் அல்ல.
ஒரு கவர்னராக, நான் மாநில அரசு என்ன செய்கிறதோ, அதற்கு ஒத்துழைப்பேன், ஆனால், என்ன செய்தாலும் அதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டேன். ஒவ்வொருவரும் அவர்களுடைய களத்தில் பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் லட்சுமணன் ரேகை என்படும் எல்லை உள்ளது. அதை தாண்டக்கூடாது. மேலும், முக்கியமானது. மற்றவர்களுக்காக லட்சுமணன் ரேகை தீட்டக்கூடாது. அதுதான் கூட்டாட்சி தத்துவம்'' என்றார்.
முன்னதாக, மம்தா பானர்ஜி அரசியலமைப்பு விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியலமைப்பு அல்லாத செயலுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார்
- பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்து வரும் நிலையில், பல்வேறு செயல்களில் தொடர்ந்து குறுக்கிட்டால், ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் போன்ற விவகாரங்களிலும் தலையிடுகிறார். பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம். மாநில அரசின் நிர்வாகத்தை முடக்க நினைக்கும்ஆளுநருக்கு எதிராக, ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இங்கே ஒரு கவுரவ கவர்னர் உட்கார்ந்து இருக்கிறார். அவர் கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியாக பார்ப்பேன் என்கிறார். நடுராத்திரியில் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்படுவதை எங்கேயாவது கேட்டிருப்பீர்களா?. ஒரேநாள் இரவில் முன்னாள் ஐ.பி.எஸ், முன்னாள் நீதிபதியை கொண்டு வந்துள்ளார். தன்னை ஜமீன்தார் என்று நினைத்து எல்லாவற்றையும் செய்கிறார்.
உங்களுடைய கட்டளைக்கு ஏதாவது கல்லூரி, பல்கலைக்கழகங்கள் கீழ் படிந்தால், நிதி வழங்குவதில் முட்டுக்கட்டை ஏற்படுத்துவேன். அதன்பின் துணை வேந்தருக்கு எப்படி சம்பளம் வழங்குகிறீர்கள் என்று பார்ப்போம். பேராசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பீர்கள் என்று பார்க்கிறேன். இங்கே ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி உண்டு. இதில் சமரசம் கிடையாது'' எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஏழு பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்களை மாநில அரசின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் நியமித்தார். இதில் இருந்து மோதல் போக்கு அதிகமாகியுள்ளது.
- மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.
- மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்காள எம்.எல்.ஏ.-க்கள் சம்பளம் குறைவாக இருந்தது.
மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
எனினும், முதலமைச்சரின் வருவாயில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்து இருந்தார்.
"மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்று உயர்த்தப்படுகிறது" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.






