search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இப்படியா எங்களை அலையவிடுவது..? நாய் போன்று குரைத்து அதிகாரியிடம் மனு அளித்த மேற்கு வங்காள நபர்
    X

    இப்படியா எங்களை அலையவிடுவது..? நாய் போன்று குரைத்து அதிகாரியிடம் மனு அளித்த மேற்கு வங்காள நபர்

    • ரேசன் கார்டில் தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம்.
    • அதிகாரிகள் செய்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகாந்தி தத்தா வேதனை

    கொல்கத்தா:

    நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ரேசன் கார்டில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

    ஸ்ரீகாந்தி தத்தா என்ற என்ற நபர், ரேசன் கார்டில் தன் பெயரை தவறுதலாக பிரின்ட் செய்யப்பட்டதை சரிசெய்யும்படி, அரசு அதிகாரியின் வாகனத்தை துரத்திச் சென்று நாய் போன்று குரைத்தார். தனது புகாரை ஏற்று பெயரை சரிசெய்யும்படி அந்த அதிகாரியிடம் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ஸ்ரீகாந்தி தத்தாவின் பெயரில் உள்ள தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம். குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். அதனால்தான் ஆத்திரத்தில் நாய் போன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குரைத்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "பெயரை திருத்துவதற்காக மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக விண்ணப்பித்தபோது ஸ்ரீகாந்தி குத்தா என பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள் செய்த இந்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் விண்ணப்பிக்க சென்றபோது, வட்டார வளர்ச்சி இணை அதிகாரியைப் பார்த்ததும் அவர் முன்னால் நாயைப் போல் குரைக்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு இதுபோன்று பெயரை திருத்தம் செய்வதற்காக எத்தனை முறைதான் அலைவது?" என கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×