என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durga Pooja"

    • கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள மாநில அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.
    • கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி நிதி.

    நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் காளி பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் ஏராளமான கமிட்டிகள் உருவாகும். அந்த கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள மாநில அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு துர்க்கை பூஜைகளுக்காக மட்டும் ஒவ்வொரு கமிட்டிக்கும் தலா ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு துர்க்கை பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.1.10 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் இந்த ஆண்டு துர்க்கை பூஜைக்கு மேற்கு வங்காள மாநில அரசு ரூ.400 கோடி செலவிட உள்ளது.

    கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    • `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது.
    • துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரம் என்பது சித்தர்கள் கண்ட வழி.

    `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது. துர்க்கா என்னும் திருநாமம் அசுரர்-தடங்கல் வியாதி- பாவம் மற்றும் பயத்தை போக்கிடும் சக்தி வாய்ந்த எழுத்துக் கோர்வையாகும்.

    ராகு காலம் என்பதும், எமகண்டம் என்பதும் எந்த காரியமும் செய்யக்கூடாத நேரமென்றும், அந்த நேரங்களில் மேற்கொள்ளப்படும் காரியம் வெற்றி பெறாது என்றும் நம்மிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. எனவேதான், துர்க்கைக்கு ராகு கால பூஜை என்றதுமே பலருக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரமென்பது சித்தர்கள் கண்ட வழி.

    மாபெரும் பிரபஞ்ச சக்தியே துர்க்கை வடிவில் விளங்குகிறது. ராகு என்பதும், கேது என்பதும்கூட மிகச்சக்தி வாய்ந்த அம்சங்கள்தான். கிரகண காலங்களில் சூரியனையும், சந்திரனையும் இவை பிடிப்பதை அறிவோம்.

    இவ்வாறு கிரகண சமயங்களில் மட்டுமின்றி, ஒவ்வொரு கிழமையும், அந்த கிழமைக்குரிய கிரகத்தை குறிப்பிட்ட சில காலம் ராகுவும், கேதுவும் பிடிக்கின்றன. இப்படி பிடிக்கும் காலங்களே தினந்தோறும் ராகு காலம் என்னும் எமகண்டம் என்றும் நிர்ணயிக்கப்படுகின்றன.

    சக்தி வாய்ந்த ராகு, மகாசக்தியான துர்க்கையைப் பூஜித்து பலன் அடைந்ததாக நமது புராணங்களில் சான்றுள்ளது. எனவே ராகு காலத்தில் நாமும் துர்க்கையை வழிபட அதற்கு கைமேல் பலன் கிட்டும்.

    சக்தியில் நல்ல சக்தி, தீயசக்தி என்ற பேதம் இல்லை. எப்படி பயன்படுத்தப்படுகிறதோ, அதைப் பொறுத்தே சக்தியானது நல்ல சக்தியாகவோ, தீய சக்தியாகவோ பரிணாமிக்கிறது.

    ஆகவேதான் ஒவ்வொரு நாளும் மகா சக்தியான துர்க்கையை அந்த நாளுக்குரிய கிரகத்தை ராகு பீடிக்கும் நேரமான ராகு காலத்தில் பூஜை செய்வோமானால் அந்த பூஜைக்கு மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையை விட, அதிக அளவு செயல்வேகம் இருக்கும்.

    மற்ற நாட்களை விட, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜைக்கு உடனடி பலன் கிடைப்பதை சித்தர்களும் உபாசகர்களும் அனுபவப்பூர்வமாக கண்டறிந்து உள்ளனர். ஏனெனில், செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன், துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு பலன் அடைந்தவனாவான்.

    செவ்வாய்க்கிழமைக்கு மங்கள வாரம் என்பது ஒரு பெயராகும். மங்களகரமான மங்கள வாரத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்கஅரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப்பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்துக்கும் பயன்படுத்தி துர்க்கையை பூஜிக்க வேண்டும்.

    பூஜையின்போது சொல்வதற்கு `ஸ்ரீதுர்க்கா சந்திர கலாஸ்துதி' என்ற தோத்திரமாலை அனைவருக்கும் உதவக்கூடியது.

    தமிழில் `துர்க்காஷ்டகம்' ராகு கால துர்க்காஷ்டகம், `துக்க நிவாரண அஷ்டகம்', ரோக நிவாரண அஷ்டகம் ஆகியவை ஏற்றவையாக இருக்கும். தீபத்திலோ, கடத்திலோ, சித்திரத்திலோ, யந்திரத்திலோ அல்லது இதயத்திலோ துர்க்கையை வைத்து பூஜிக்கலாம்.

    நவக்கிரகங்களில் மிக வலிமை பொருந்திய ராகு பகவான், மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையை பூஜித்து, மகிழ்ச்சியான முகத்துடனும், நிறைந்த தனத்துடனும் விளங்குவதால்தான் மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜை செய்ய வேண்டுமென்று சித்தர்கள் சொல்கிறார்கள்.

    குறிப்பாக ராகு காலப் பிரீத்தி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, விவாகப் பிராப்தி, பீடைகள் விலகுதல், பகைகள் நீங்குதல், காரிய சித்தி ஆகிய நோக்கங்களுக்காக இப்பூஜை மேற்கொள்வது நல்லது.

    ராகு காலத்தில் திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள துர்க்காதேவியை வழிபடுவது சிறப்பு. நல்ல மஞ்சள் நிறத்துடன் கூடிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி இரு கிண்ணங்களாளகவும் எதிர்பபுறம் மடக்கி குழியாக்கி அவற்றை திரி விளக்குகளாக பயன்படுத்த வேண்டும்.

    சுத்தமான நல்லெண்ணை, நெய், தேங்காய் எண்ணை ஆகியவற்றைத்தான் தீபத்திற்கு பயன்படுத்த வேண்டும் ஆயுள் பலத்துக்காக செய்யப்படும் பூஜையின்போது வேண்டுமானால் இலுப்பை எண்ணையைப் பயன்படுத்தலாம்.

    ராகு காலத்தில் துர்க்கை சந்நிதியில் சுவாசினியை (முதிய சுமங்கலி பெண்களை) நமஸ்கரிக்கின்றவர்கள், எல்லா நலன்களையும் பெறுவார்கள். அங்கு சுவாசினிகளுக்கு தாம்பூலமம், தட்சிணையும் வழங்குகிறவர்கள் துர்க்கையின் அருளுக்குப் பாத்திரமாவார்கள்.

    துர்க்கை சந்நிதியில் கன்னிப் பெண்களுக்கு கால்களில் நலங்கிட்டு, கைகளில் வளையலிட்டு, பூச்சூட்டி, புத்தாடை வழங்கிய பூஜிப்பவர்கள் மற்றவர்களால் பூஜிக்க தகுந்த வாழ்க்கையை அடைவார்கள்.

    தில்லை அம்பலவாணர் (நடராஜர் சன்னதி)

    வடகிழக்கில் தெற்கு நோக்கி வெள்ளித்தேர் மற்றும் வாகன மண்டபம் அருகில் அறங்காவலர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

    அடுத்து, நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடராஜர் அபிஷேகம் திருவாதிரை உற்சவம்- மாணிக்கவாசகர் விழா சிறப்பு சொற்பொழிவுடன் திருவாசகம் ஓதப்பெற்று நடைபெற்று வருகிறது.

    • வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும்.

    இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும்.

    அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள்,

    அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும்

    மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • கவுமாரி - மயில்
    • நரசிம்மி - சிங்கம்

    இந்திராணி - யானை

    வைஷ்ணவி - கருடன்

    மகேஸ்வரி - ரிஷபம்

    கவுமாரி - மயில்

    வராகி - எருமை

    அபிராமி - அன்னம்

    நரசிம்மி - சிங்கம்

    சாமுண்டி - பூதம்

    • அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
    • ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

    இந்தப் பெயர்களை சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,

    அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

    • இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.
    • அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.

    நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.

    இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

    இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.

    புதன் கல்வி ,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.

    அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும்

    புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.

    புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.

    (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு) கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.

    அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை

    கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    • வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
    • பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

    புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்தல் வேண்டும்.

    வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.

    விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும்

    பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

    ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று

    காலை ஒன்பது மணிக்கு முன் பாறணை செய்தல் வேண்டும்.

    இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

    விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவு பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து

    நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்த,

    குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.

    தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.

    இவ்விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.

    நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள்

    சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள்

    என்று காரணாகமம் கூறுவதாக சொல்லப்படுகின்றது.

    • திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
    • கடின உழைப்பாளிகள் உழைப்பின் பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    நவராத்திரி முதலாம் நாள் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.

    அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.

    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.

    அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.

    சர்வ மங்களம் தருபவள்.

    தர்மத்தின் திருவுருவம்.

    கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    முதல் நாள் நைவேத்தியம்:- புளியோதரை.

    • தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
    • சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.

    மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.

    தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.

    ஓங்கார சொரூபமானவள்.

    சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

    வீரத்தை தருபவள்.

    இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.

    • இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
    • சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

    நவராத்திரி மூன்றாம் நாள் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும்.

    வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.

    சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.

    பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.

    தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.

    இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.

    இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

    மூன்றாம் நாள் நைவேத்தியம் :- தயிர்சாதம்.

    • பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.
    • தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

    நவராத்திரி நான்காம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும்.

    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.

    விஷ்ணு பத்தினியாவாள்.

    பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.

    தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

    நான்காம் நாள் நைவேத்தியம்:- கற்கண்டு சாதம்.

    • சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
    • இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஐந்தாம் நாளில் சக்தித்தாயை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும்.

    சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.

    தீயவற்றை சம்ஹரிப்பவள்.

    இவளின் வாகனம் கருடன்.

    மலர் வகைகளில் மனோரஞ்சிதம் அல்லது பாரிஜாதம் மலர்களையும்,

    இலைகளில் திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்

    இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஐந்தாம் நாள் நைவேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

    ×