என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி போலீசார்"

    • டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது
    • வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை" என கூறியிருந்தனர்.

    அதில், டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் வங்காள மொழியை வங்கதேச' மொழி என குறிப்பிட்டுள்ளனர்.

    வங்காள மொழி எங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மொழி. தேசிய கீதம், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி.

    வங்காள மொழியை வங்கதேச மொழியாக குறிப்பிடுவது தேச விரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது.

    இது இந்தியா முழுவதும் வங்காள மொழி பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்" என்று பதித்துள்ளார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கண்டன பதிவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்கதேச மொழி" என்று குறிப்பிட்டுள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் ஏற்படுத்துவதாகும்.

    இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை அவை அம்பலப்படுத்துகின்றன.

    இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்காள மொழிக்கும் மக்களுக்கும் மம்தா பானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார். இதற்கு சரியான பதிலடி கொடுக்காமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்ல விடமாட்டார்.

    • காரின் எண் மூலம் அதன் உரிமையாளரின் முகவரி அரியானாவில் குருகிராமில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு போலீசார் சென்று உள்ளனர்.
    • காரில் இருந்தவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு இச்சம்பவம் நடந்துள்ளது.

    வடமேற்கு டெல்லியின் மங்கோல புரியில் நேற்று இரவு 11.30 மணியளவில் அங்குள்ள முக்கிய சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளினார். அப்போது காரில் மற்றொரு வாலிபரும் இருந்தார். அந்த பெண்ணை காருக்குள் ஏற்றி கொண்டு சென்றனர். அப்பெண்ணுக்கு யாரும் உதவ முன் வரவில்லை. பரபரப்பான சாலையில் இளம்பெண் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்த கார் வாடகை கார் என்பது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமராவில் கடைசியாக அந்த கார் குருகிராமில் காணப்பட்டதும் தெரிந்தது. காரின் எண் மூலம் அதன் உரிமையாளரின் முகவரி அரியானாவில் குருகிராமில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு போலீசார் சென்று உள்ளனர். அந்த கார், ரோகினி பகுதி முதல் விகாஸ்புரி வரை செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது காரில் இருந்தவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு இச்சம்பவம் நடந்துள்ளது.

    • ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர் சுக்தேவ் சிங் கோகமெடி.

    கடந்த 5-ம் தேதி சுக்தேவ் சிங் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுக்தேவ் சிங் கோகமெடியும், அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் பலியாகினர்.

    துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இச்சம்பவம் அங்கு ராஜபுத்திர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையைக் கண்டித்து ராஜஸ்தான் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் போராட்டம் நடந்தது.

    போராட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டு டயர்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்தால் ராஜஸ்தானில் பதற்றம் நிலவியது.

    இதையடுத்து, சுக்தேவ் சிங் கொலையில் தொடர்புடைய நபர்களை தேடிவந்தனர்.

    இந்நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை போலீசார் சண்டிகரில் கைது செய்தனர்.

    ராஜஸ்தான் போலீசாரின் கூட்டு நடவடிக்கை காரணமாக ரோகித் ரத்தோர், நிதின் பவுஜி உள்பட 3 குற்றவாளிகளை சண்டிகரில் இருந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஆசிப் என்ற இளைஞர் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய ராயல் என்பீல்டு பைக்கில் வந்துள்ளார்.
    • தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை அவரது தந்தையுடன் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.

    டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய பைக்கில் வந்த இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கோவப்பட்ட இளைஞர் தடுத்த போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை அவரது தந்தையுடன் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.

    ஆசிப் என்ற இளைஞர் ராயல் என்பீல்டு பைக்கில் வந்துள்ளார். போலீசார் அவரது பைக்கை சோதனை செய்தபோது விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சரை அவர் பொருத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

    உடனே ஆசிப் அவரது தந்தை ரியாசுதீனுக்கு போன் செய்து வரவழைத்து பைக்கை எடுத்துச்செல்ல முயன்றுள்ளார். இதனை அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது ரியாசுதீன் போலீசை பிடிக்க ஆசிப் அவரை தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த சில போலீசாரையும் அவர் தாக்கியுள்ளார்.

    இதனையடுத்து, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட பல பிரிவுகளில் தந்தை, மகன் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இளைஞர் தாக்கியதில் காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ×