ஓவர் சவுண்ட் எழுப்பிய ராயல் என்பீல்டு பைக்.. தடுத்த போலீசை போட்டு பொளந்த அப்பா, மகன்

ஆசிப் என்ற இளைஞர் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய ராயல் என்பீல்டு பைக்கில் வந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை அவரது தந்தையுடன் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.
ஓவர் சவுண்ட் எழுப்பிய ராயல் என்பீல்டு பைக்.. தடுத்த போலீசை போட்டு பொளந்த அப்பா, மகன்
Published on

டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய பைக்கில் வந்த இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கோவப்பட்ட இளைஞர் தடுத்த போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை அவரது தந்தையுடன் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.

ஆசிப் என்ற இளைஞர் ராயல் என்பீல்டு பைக்கில் வந்துள்ளார். போலீசார் அவரது பைக்கை சோதனை செய்தபோது விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சரை அவர் பொருத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

உடனே ஆசிப் அவரது தந்தை ரியாசுதீனுக்கு போன் செய்து வரவழைத்து பைக்கை எடுத்துச்செல்ல முயன்றுள்ளார். இதனை அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது ரியாசுதீன் போலீசை பிடிக்க ஆசிப் அவரை தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த சில போலீசாரையும் அவர் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட பல பிரிவுகளில் தந்தை, மகன் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இளைஞர் தாக்கியதில் காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com