என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
    X

    தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    • டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது
    • வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை" என கூறியிருந்தனர்.

    அதில், டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் வங்காள மொழியை வங்கதேச' மொழி என குறிப்பிட்டுள்ளனர்.

    வங்காள மொழி எங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மொழி. தேசிய கீதம், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி.

    வங்காள மொழியை வங்கதேச மொழியாக குறிப்பிடுவது தேச விரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது.

    இது இந்தியா முழுவதும் வங்காள மொழி பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்" என்று பதித்துள்ளார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கண்டன பதிவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்கதேச மொழி" என்று குறிப்பிட்டுள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் ஏற்படுத்துவதாகும்.

    இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை அவை அம்பலப்படுத்துகின்றன.

    இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்காள மொழிக்கும் மக்களுக்கும் மம்தா பானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார். இதற்கு சரியான பதிலடி கொடுக்காமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்ல விடமாட்டார்.

    Next Story
    ×