என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengali"

    • கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
    • அடுத்ததாக கமல் மற்றும் ரஜினி இணைந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கமல் மற்றும் ரஜினி இணைந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பிரபல பெங்காலி நடிகை மீது தனது தந்தைக்கு காதல் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் பெங்காலி மொழியை படித்து கற்றுக் கொண்டதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். " சினிமாவுக்காக எல்லாம் அவர் பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. அப்போது அபர்ணா சென் மீது அவருக்கு காதல். அதனால் தான் ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜீயின் பெயர் அபர்ணா என்று வைத்தார்" என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இந்த காணொளி இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

    • டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது
    • வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை" என கூறியிருந்தனர்.

    அதில், டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்கதேச மொழி என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் வங்காள மொழியை வங்கதேச' மொழி என குறிப்பிட்டுள்ளனர்.

    வங்காள மொழி எங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மொழி. தேசிய கீதம், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி.

    வங்காள மொழியை வங்கதேச மொழியாக குறிப்பிடுவது தேச விரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது.

    இது இந்தியா முழுவதும் வங்காள மொழி பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்" என்று பதித்துள்ளார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கண்டன பதிவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்கதேச மொழி" என்று குறிப்பிட்டுள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் ஏற்படுத்துவதாகும்.

    இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை அவை அம்பலப்படுத்துகின்றன.

    இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்காள மொழிக்கும் மக்களுக்கும் மம்தா பானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார். இதற்கு சரியான பதிலடி கொடுக்காமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்ல விடமாட்டார்.

    • பாஜக "ஜெய் ஸ்ரீ ராம்" என்பதற்கு பதிலாக "ஜெய் மா காளி" என்ற கோஷங்களை எழுப்ப தொடங்கியுள்ளது.
    • நாங்கள் பாதிப் போரில் வென்றுவிட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினார்.

    மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வா உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில்  ஜூலை 21 கொல்கத்தாவின் தர்மதாலாவில் நடந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    ஒடிசா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    இது வங்காளி சமூகத்திற்கு எதிரான சதி என்றும், மேற்கு வங்கம் இதை பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், "வங்காள மொழி மீதான பாஜகவின் பயங்கரவாதத்திற்கு எதிராக மற்றொரு மொழி இயக்கம் நடத்தப்படும். ஜூலை 27 முதல், வங்காளிகள், வங்காள மொழி மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளத்தில் ஒரு இயக்கம் தொடங்கும்" என்று தெரிவித்தார்  

    தேர்தல் நெருங்குவதால் சமீப காலமாக பாஜக "ஜெய் ஸ்ரீ ராம்" என்பதற்கு பதிலாக "ஜெய் மா காளி" என்ற கோஷங்களை எழுப்ப தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், "ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு பதிலாக ஜெய் மா காளி கோஷத்தை எழுப்ப வைத்தபோதே, நாங்கள் பாதிப் போரில் வென்றுவிட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினார். 

    சமீப காலமாக தென்னிந்தியாவில் இந்தி, பெங்காலி மற்றும் ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருவது தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி: 

    தென்னிந்தியாவில் இந்தி, பெங்காலி மற்றும் ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் வட இந்தியாவில் தென்னிந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் வருகிறதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிப்பது: தமிழர்களும், மலையாளிகளும் கணிசமான அளவு கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தென்னிந்தியர்கள் ஒருகாலத்தில் அதிக அளவில் மகாராஷ்டிராவுக்கு இடம்பெயர்ந்தனர். குறிப்பாக மும்பைக்கு சென்றனர். ஆனால் தற்போது கர்நாடகாவுக்கு அதிகம் செல்கின்றனர்.

    கேரளாவில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதிக்கு இடம்பெயரும் மலையாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குர்கானில் தமிழர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியேறும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இந்தி மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறி உள்ளனர். தென்னிந்தியாவில் நேபாளிகளின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் தமிழர்கள் குடியேறுவது 2001-ல் 8.2 லட்சமாக இருந்தது. இது 2011-ல் 7.8 லட்சமாக குறைந்தது. வட மாநிலங்களில் மலையாளிகள் குடியேறுவது 2001-ல் 8 லட்சமாக இருந்தது, இது 2011-ல் 7.2 லட்சமாக குறைந்திருக்கிறது. தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர்களின் எண்ணிக்கை 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
    ×