என் மலர்

  செய்திகள்

  தென்னிந்தியாவில் கணிசமாக உயர்ந்து வரும் வட இந்தியர்களின் எண்ணிக்கை
  X

  தென்னிந்தியாவில் கணிசமாக உயர்ந்து வரும் வட இந்தியர்களின் எண்ணிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீப காலமாக தென்னிந்தியாவில் இந்தி, பெங்காலி மற்றும் ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருவது தெரியவந்துள்ளது.

  புதுடெல்லி: 

  தென்னிந்தியாவில் இந்தி, பெங்காலி மற்றும் ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் வட இந்தியாவில் தென்னிந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் வருகிறதாகவும் கூறப்பட்டுள்ளது.

  இதுகுறித்து 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிப்பது: தமிழர்களும், மலையாளிகளும் கணிசமான அளவு கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தென்னிந்தியர்கள் ஒருகாலத்தில் அதிக அளவில் மகாராஷ்டிராவுக்கு இடம்பெயர்ந்தனர். குறிப்பாக மும்பைக்கு சென்றனர். ஆனால் தற்போது கர்நாடகாவுக்கு அதிகம் செல்கின்றனர்.

  கேரளாவில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதிக்கு இடம்பெயரும் மலையாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குர்கானில் தமிழர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. டெல்லியில் குடியேறும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

  தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இந்தி மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறி உள்ளனர். தென்னிந்தியாவில் நேபாளிகளின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் தமிழர்கள் குடியேறுவது 2001-ல் 8.2 லட்சமாக இருந்தது. இது 2011-ல் 7.8 லட்சமாக குறைந்தது. வட மாநிலங்களில் மலையாளிகள் குடியேறுவது 2001-ல் 8 லட்சமாக இருந்தது, இது 2011-ல் 7.2 லட்சமாக குறைந்திருக்கிறது. தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர்களின் எண்ணிக்கை 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
  Next Story
  ×