என் மலர்
இந்தியா

வங்காளி மொழியினரை குறிவைக்கும் பாஜக பயங்கரவாதம் - மம்தா பானர்ஜி ஆவேசம்
- பாஜக "ஜெய் ஸ்ரீ ராம்" என்பதற்கு பதிலாக "ஜெய் மா காளி" என்ற கோஷங்களை எழுப்ப தொடங்கியுள்ளது.
- நாங்கள் பாதிப் போரில் வென்றுவிட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினார்.
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வா உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் ஜூலை 21 கொல்கத்தாவின் தர்மதாலாவில் நடந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
ஒடிசா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது வங்காளி சமூகத்திற்கு எதிரான சதி என்றும், மேற்கு வங்கம் இதை பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், "வங்காள மொழி மீதான பாஜகவின் பயங்கரவாதத்திற்கு எதிராக மற்றொரு மொழி இயக்கம் நடத்தப்படும். ஜூலை 27 முதல், வங்காளிகள், வங்காள மொழி மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளத்தில் ஒரு இயக்கம் தொடங்கும்" என்று தெரிவித்தார்
தேர்தல் நெருங்குவதால் சமீப காலமாக பாஜக "ஜெய் ஸ்ரீ ராம்" என்பதற்கு பதிலாக "ஜெய் மா காளி" என்ற கோஷங்களை எழுப்ப தொடங்கியுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், "ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு பதிலாக ஜெய் மா காளி கோஷத்தை எழுப்ப வைத்தபோதே, நாங்கள் பாதிப் போரில் வென்றுவிட்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினார்.






