search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ananda bose"

    • மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் கூச்பெஹர் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறவேண்டாம் என தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவுறுத்தியது.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

    மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 3 தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    இதற்கிடையே, மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் நாளை கூச் பெஹர் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கவர்னரின் இந்தப் பயணம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. நன்னடத்தை விதிகள் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, கவர்னருக்கும் பொருந்தும் என்பதால் கவர்னர் இதனை மீறக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது.
    • வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன்.

    மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் "வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன். தேர்தலில் இந்த இரண்டிற்கும் முடிவு கட்ட வேண்டும். நான் மக்களுக்கான இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது" என்றார்.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு விவகாரங்களில் அம்மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ்க்கும், மாநில அரசுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    சந்தேஷ்காளி விவகாரித்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ் மேற்கு வங்காள கவர்னராக இன்று பதவியேற்கிறார்.
    • மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல பதவி வகித்தவர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார்.

    மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பொறுப்பேற்க உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    ×