என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Woman doctor murder"
- போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்தது.
- போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் இன்னும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், "எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணி நிறுத்தம் தொடரும். பெண் டாக்டருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினர்.
இது குறித்து போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, "கொல்கத்தா காவல் ஆணையாளர், சுகாதார செயலாளர், சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோரை இன்று மாலை 5 மணிக்குள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அரசிடம் கேட்டு கொண்டோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் பூர்த்தியாகவில்லை."
"இதோடு நாங்கள் பணிநீக்கம் செய்யக் கோரிய மாநில சுகாதாரத் துறை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த மின்னஞ்சலில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இது எங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அதிகபட்சம் பத்து பேர் மட்டுமே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஏற்க தக்கதல்ல. இதனால், எங்களுடைய பணி நிறுத்தம் தொடரும்," என்று தெரிவித்தார்.
- மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.
- அவரது [மம்தா] குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் இன்னும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதை கைவிட்டுவிட்டு எதிர்வரும் துர்கா பூஜா பண்டிகையில் கவனம் செலுத்தும்படி மம்தா பானர்ஜி கூறியுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தாய் மம்தாவின் கருத்தை சாடியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, நாங்கள் இதுவரை எங்கள் மகளுடன் துர்கா பூஜா பண்டிகையை கொண்டாடி வந்தோம். ஆனால் இனி வரும் வருடங்கள் அனைத்திலும் அது நடக்கப்போவதில்லை. அவரது [மம்தா] குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் எனது மகளை அவர்கள் கொலை செய்தார்கள், இப்போது அந்த கொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்தையும் ஒடுக்க பார்கிறார்கள் என்று பெண் மருத்துவரின் தாய் வேதனை தெரிவித்துள்ளார்.
- கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் தொடர்ந்து அரசு மற்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு.
- பணம் தர முன்வந்ததாகவும், தாங்கள் அதை மறுத்ததாகவும் பெற்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் உலுக்கியது. தற்போது பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க போலீசார் தொடக்கத்தில் இருந்தே தங்கள் மகள் கொலையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பணம் தர முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இழப்பீடு தொடர்பாக பணம் தருவதாக பெண் டாக்டரின் பெற்றோரிடம் கூறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பெண் டாக்டர் குடும்பத்தினருக்கு பணம் (இழப்பீடு) கொடுக்க நான் ஒருபோதும் முன்வரவில்லை. அவதூறைத் தவிர இது வேறு ஏதுமில்லை. பெற்றோர்கள் பெண் டாக்டர் நினைவாக
ஏதாவது செய்ய விரும்பினால், அரசு அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதை மட்டும்தான் தெரிவித்தேன்.
இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் முன்வந்தார். ஆனால், துர்கா பூஜையின்போது சட்டம் ஒழுங்கை பற்றி நன்கு அறிந்தவர் எங்களுக்கு தேவை" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாக பெண் டாக்டரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் "முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா?.
நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். மேலும், உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் எனவும் தெரிவித்தார். நீதி கிடைத்த பிறகு உங்களுடைய அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தோம்" என்றனர்.
பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
- சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது.
- மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடா்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின்போது மேற்கு வங்காள அரசை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியது. முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்தது, வன் முறை தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தது. டாக்டர்கள் பாதுகாப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.
கடந்த விசாரணையின்போது பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து மேற்கு வங்காள போலீசை சாடியது.
இந்த நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் தொடங்கியது.
சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதுவரை என்ன விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை தனது அறிக்கையில் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.
இதேபோல மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'டாக்டர்கள் போராட்டத்தில் 23 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த 2 அறிக்கையை வைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தொடங்கியது. பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எப்போது பதிவு செய்யப்பட்டது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பிற்பகல் 2.55 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று, இறப்பு சான்றிதழ் 1.45 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் மேற்கு வங்காள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபில் தெரிவித்தார். வீடியோ பதிவுகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.
சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது 'பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான தடயவியல் மாதிரிகள் மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மாதிரிகளை அனுப்ப விசாரணை நிறுவனமான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது என்றார்.
இதை தொடர்ந்து வரு கிற 17-ந்தேதி விசாரணையின் புதிய நிலை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.
- பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட தொடர்பான விசாரணை நிலை அறிக்கை உச்சநீதிமன்றம் தாக்கல்.
- டாக்டர்கள் போராட்டத்தால் 23 நோயாளிகள் உயிரிழந்துள்ள என மேற்கு வங்க சுகாதாரத்துறை அறிக்கை.
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் பயிற்சி டாக்டர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வந்தது. அப்போது மேற்கு வங்க சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படடது. அந்த அறிக்கையில் பெண் டாக்டர் கொலையை கண்டித்து மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிஐஎஸ்எஃப்-க்கு தேவையைான அனைத்தையும் இன்றைக்குள் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தடயவியல் மாதிரிகளை எய்ம்ஸ் மருத்துவனைக்கு அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளன எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ந்தேதி புதிய விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வெண்டும் என உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
- தீபம் ஏற்றி நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.
- நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பது போராடுவதற்கு தைரியத்தை கொடுத்துள்ளது- பெற்றோர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெண் டாக்டர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கொல்கத்தா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களில் தீபம் ஏற்றி நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறும்போது "நாம் நீதியை எளிதாக பெற முடியாது. அதை பறிக்க வேண்டும். எல்லோருடைய உதவியும் இல்லாமல் இது சாத்தியமில்லை. நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பது போராடுவதற்கு தைரியத்தை கொடுத்துள்ளது" என்றார்.
பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
- போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த மாதம் 9-ந்தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடினர். தற்போது இரவை மீட்டெடுப்போம் என போரட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண் மருத்துவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "போலீசார் முழுமையான விசாரணையின்றி வழக்கை முடிக்க முயற்சித்தனர். போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர். எங்களை உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும்போது காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. மகள் கொலைக்கு பிறகு போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களிடம் பணத்தை கொடுக்க முயன்றார். நாங்கள் உடனடியாக அதை மறுத்தோம்" எனத் தெரிவித்தனர்.
பெண் டாக்டர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், கொல்கத்தா காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.
- சந்தீப் கோஷிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை மேற்கொண்டிருந்தது.
- அவரது வீட்டிலும் சோதனை நடத்தியிருந்தது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உளள் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் முதல்வராக இருந்த காலத்தில் நிதி முறைகேடு மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தீப் கோஷிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியது. அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில் "இது முடிவுக்கான ஆரம்பம்" என மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக விவரமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு, ஆளுநர் மூலமாக, தங்களுடைய மகள் கொலை வழக்கில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியதாக ராஜ்பவன் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 9-ந்தேதி மருத்துவமனை செமினார் அறையில் பெண் டாக்டர் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
- சஞ்சய் ராய் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவனது வக்கீல் கவிதா சர்க்கார் சில விவரங்களைத் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
- சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும்போது மயக்க நிலையிலிருந்த பெண் மீது முழுவதுமாக ரத்தம் படிந்திருந்தது .
கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் சிபிஐ பல கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறது. சிசிடிவி காட்சிகளில் அடிப்படையிலும், சஞ்சய் ராயின் ப்ளூ டூத் ஹெட் செட் ஆனது சம்பவம் நடத்த மருத்துவமனையின் செமினார் ஹாலில் கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையிலும் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் சஞ்சய் ராய் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவனது வக்கீல் கவிதா சர்க்கார் சில விவரங்களைத் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையான பாலிகிராப் டெஸ்ட் நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சஞ்சய் ராயிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பெண்ணை கொலை செய்த பிறகு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு , நீங்கள் கேட்கும் கேள்வியை தவறு, நான் கொலை செய்யவே இல்லை என்று சஞ்சய் ராய் தெரிவித்தார். மேலும் உண்மை கண்டறியும் சோதனையில், தான் செமினார் ஹாலுக்குள் செல்லும்போதே அந்த பெண் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறியதும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
அந்த பாலிகிராப் டெஸ்ட் அறிக்கைப்படி, சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும்போது மயக்க நிலையிலிருந்த பெண் மீது முழுவதுமாக ரத்தம் படிந்திருந்தது .எனவே பயத்தில் நான் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்று சஞ்சய் ராய் தெரிவித்தார் என்று கவிதா சர்க்கார் கூறியுள்ளார்.
ஏன் முதலிலேயே தான் நிரபராதி என்று கல்கத்தா போலீஸ் கைது செய்தபோது சஞ்சய் ராய் சொல்லவில்லை என்று கேள்விக்கு பதிலளித்த கவிதா சர்க்கார், அப்போது சஞ்சய் ராய் பயத்திலிருந்ததாகவும், தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராய் எளிதாக செமினார் ஹாலுக்குள் நுழைய முடிந்தது என்றால் அவருக்கு முன்பாகவே அந்த இடத்திலிருந்த பாதுகாப்பு குறைபாட்டை யாரோ பயன்படுத்தியுள்ளனர் என்று அர்த்தம். எனவே உண்மையான குற்றவாளி வேறு எங்கோ ஒளிந்துள்ளான் என்று கவிதா சர்க்கார் தெரிவித்துள்ளார்.
- கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- சிபிஐ இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயற்சி டாக்டர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செயப்பட்டார். இந்த சம்பவத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மேற்கு வங்க அரசு உதவுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஒப்பந்த ஊழியரான சஞ்சய் ராய் என்பவர்தான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய் ராய் இடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் வழக்கமாக ரொட்டி (roti-sabzi) வழங்கப்படும். ஆனால் தனக்கு ரொட்டி வேண்டாம். முட்டை நூடுல்ஸ் (egg chowmein) வேண்டும் என அடம்பிடித்ததாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் கண்டிக்கவே, வேறு வழியில்லாமல் ரொட்டி சாப்பிட்ட ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக சிறையில் அனைத்து கைதிகளுக்கும் ரொட்டிதான் வழங்கப்படும். அந்த வகையில் அவருக்கும் வழங்கப்பட்டது. அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தூங்குவதற்கு கூடுதல் நேரம் கேட்டதாகவும், முணுமுணுத்துக் கொண்டே இருந்ததாகவும், சில நாட்களில் சகஜ நிலைக்கு வந்ததாகவும் நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- why the West Bengal government hasn't done anything for implementing the stringent rules and regulations BJP
- பெண்கள் பாதுகாப்பிற்கான கடுமையான விதிகள் இருக்கும்போது அதை ஏன் அமல்படுத்தவில்லை- பாஜக
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணையில் நடத்தி வருகிறது. அதேவேளையில் பெண்களை இது போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாப்பாகவும், மீண்டும் இத்தகைய குற்றங்கள் நடைபெறாத வண்ணம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கவும் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார்.
மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் முதல் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை எனக்கூறி 2-வது முறையாக நேற்று கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள். கேள்விக்கு பதில் அளியுங்கள் என மேற்கு வங்காள மாநில பாஜக துணைத் தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் "பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளை அமல்படுத்த மேற்கு வங்காள அரசு ஏதும் செய்யாதது குறித்து மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும். கடிதம் எழுதுவரை நிறுத்துங்கள். கேள்விக்கு பதில் அளியுங்கள். நீங்கள் தான் பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு 2-வது முறையாக எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இது போன்ற முக்கியமான பிரச்னைக்கு உங்களிடமிருந்து பதில் வரவில்லை. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து ஆகஸ்ட் 25-ம் தேதி பதில் கிடைத்தது. ஆனால், எனது கடிதத்தில் எழுப்பப்பட்ட பிரச்சனையின் தீவிரத்தன்மை அதில் கவனிக்கப்படவில்லை.
மேலும், அந்த பதிலில் கவனிக்கப்படாத அதேசமயம் எங்கள் மாநிலம் ஏற்கனவே எடுத்த சில முயற்சிகளை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (FTSCs) தொடர்பாக, 10 பிரத்யேக போக்சோ (POCSO) நீதிமன்றங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, மாநிலம் முழுவதும் 88 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 62 போக்சோ நீதிமன்றங்கள் முழு மாநில நிதியுதவியில் இயங்கி வருகின்றன. வழக்குகளைக் கண்காணித்தல் மற்றும் முடித்துவைப்பது ஆகியவை முற்றிலும் நீதிமன்றங்களின் வசம் இருக்கிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளை மட்டுமே விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் முதன்மை அதிகாரிகளாக நியமிக்க முடியும். ஆனால், வழக்குகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நிரந்தர நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் கவனித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு அளவில் ஆய்வு மற்றும் அதன் பிறகான பொருத்தமான நடவடிக்கை தேவை. இதற்கு தங்களின் தலையீடு அவசியம். இவை தவிர, ஹெல்ப்லைன் எண் 112, 1098 ஆகியவை மாநிலத்தில் திருப்திகரமாகச் செயல்படுகின்றன.
கூடுதலாக, அவசரகால சூழ்நிலைகளில் ஹெல்ப்லைன் எண் 100 பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, விசாரணை அதிகாரிகளால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்குகளைத் தீர்ப்பதற்கான கட்டாய ஏற்பாடுகளுடன், பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு முன்மாதிரியான கடுமையான தண்டனை மற்றும் கடுமையான மத்திய சட்டத்தைப் பரிசீலிக்குமாறு தங்களை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த விஷயம், தங்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- பெண் டாக்டர் கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். குற்றவாளியை தூக்கிலிட நாங்கள் விரும்புகிறோம்.
- ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு உருவாக்காதது ஏன்?
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.
அதேநேரம் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசை, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். ஆனால் சட்டம் கொண்டு வராமல், பா.ஜனதாவினர் முழு அடைப்பு நடத்தியதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணியின் 27-வது நிறுவன தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
மேற்குவங்க மாநிலம் எரிந்தால் அதன்பின் அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் எரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எங்கள் அரசுக்கு எதிராக பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் கடந்த 2014-ம் ஆண்டு முதலே சதியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசை சீர்குலைக்க எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
பெண் டாக்டர் கொலைக்கு எதிராக போராடும் டாக்டர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை.
இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் இருக்கிறது. எனவே நோயாளிகளின் துயரை கருத்தில் கொண்டு, டாக்டர்கள் படிப்படியாக பணிக்கு திரும்ப வேண்டும்.
பெண் டாக்டர் கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். குற்றவாளியை தூக்கிலிட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு உருவாக்காதது ஏன்?
என்னிடம் அதிகாரம் இருந்தால், ஒரு வாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவேன்.
அடுத்த வாரம் சட்டசபை தொடரை நடத்தி, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவோம். பின்னர் அதை கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால், கவர்னர் மாளிகைக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்துவோம்.
நாங்கள் இந்த முழு அடைப்பை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த தினத்தை அந்த டாக்டருக்கு அர்ப்பணிக்கிறோம். நாங்கள் நீதி கேட்கிறோம், பா.ஜனதா முழு அடைப்பை நடத்துகிறது. பிணத்தின் மீது அரசியல் செய்கிறது.
மணிப்பூரில் நடந்த சம்பவங்களுக்காக பதவி விலகாத பிரதமர் மோடிக்கு எதிராகத்தான் முதலில் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்