search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal Governor"

    • மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது.
    • வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன்.

    மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் "வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன். தேர்தலில் இந்த இரண்டிற்கும் முடிவு கட்ட வேண்டும். நான் மக்களுக்கான இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது" என்றார்.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு விவகாரங்களில் அம்மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ்க்கும், மாநில அரசுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    சந்தேஷ்காளி விவகாரித்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

    சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

    பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

    இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார். பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார்.

    கதர் ஆடை அணிந்து நாடு முழுவதும் சுற்றினார். காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார் பெரியார். கோட்சாவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    அண்ணாவும் காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கருணாநிதியும் காந்தி மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தார்.

    திராவிட இயக்கத்தின் மதிப்பு கொண்டவர் காந்தியின் பேரன் போபால கிருஷ்ண காந்தி. பெரியாரின் லட்சிய அரசியலை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது அண்ணா, கருணாநிதி என சொன்னவர் காந்தி பேரன்.

    காந்தியின் பேரன் திமுக அரசை பாராட்டி இருப்பது வாழ்நாளில் கிடைத்த மாபெரும் பெயர். தமிழக அரசே கருணாநிதி தான். திமுக ஆட்சியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கிறோம்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதி சாதனைகளை விளக்கும் விழாவாக நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.

    தொலைநோக்கு பார்வை, மக்கள் மீது பற்றும் கொண்ட தலைவராக கருணாநிதி இருந்தார். கருணாநிதி தொடாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். கருணாநிதி வகுத்த பாதையில் தான் அனைத்து துறையும் பயணிக்கிறது.

    உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

    தலைநகர் சென்னையில் உலகதரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். 25 ஏக்கர் பரப்பளவில், 5000 நபர்கள் அமரும் வகையில் மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்ஷன் சென்னை அமையவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி.
    • இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்றார் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

    சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

    பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறி பொது வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன் என கருணாநிதி எழுதினார்.

    நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை. கருணாநிதி சன்னதியில் உண்மையை பேச வேண்டும். தற்போது, இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    • இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள்.

    மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி.ஆனந்த போஸ். இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இசட் பிளஸ் பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 40 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஆனந்த போஸ் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவுக்கு செல்கிறார்.

    மேற்கு வங்கத்தில் சிபிஐ அமைப்புக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக உள்துறைக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி உள்ளார். #CBI #WestBengalGovernor
    கொல்கத்தா:

    சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



    சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினார். அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸ்  தொண்டர்களும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளை சிறைப்பிடித்தது மற்றும் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.

    இதையடுத்து,  தலைமைச் செயலாளர் மற்றும் மாநில டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கவர்னர் திரிபாதி ஆலோசனை நடத்தினார். நிலைமையை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், உள்துறைக்கு கவர்னர் திரிபாதி ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளார். #CBI #WestBengalGovernor
    ×