என் மலர்
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு எதிரொலி: ஆளுநர் மாளிகையில் மிகப்பெரிய தேடுதல் வேட்டை
- பாஜக குற்றவாளிகளுக்கு ஆளுநர் அடைக்கலம் கொடுப்பதாக குற்றச்சாட்டு.
- குற்றவாளிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தா போஸ், பாஜக குற்றவாளிகளுக்கு ராஜ் பவனில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர்களுடன் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் மிகப்பெரிய அளவில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மதியம் அந்த சோதனை நடத்தப்படுகிறது.
இதற்காக வடக்கு பெங்கால் சென்றிருந்த ஆளுநர், தனது பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகை திரும்புகிறார்.
ஆளுநர் மாளிகை முன்பு கொல்கத்தா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வீரர்கள் ஒன்றிணைந்து ஆளுநர் ஆனந்தா போஸ் தலைமையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளதா? என ஆளுநர் மாளிகை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.






