என் மலர்
இந்தியா

திரிணாமுல் கட்சிக்குள் பூசல்?.. எம்.பி.களின் தனிப்பட்ட Chat -களை கசியவிட்ட பாஜக - வலுக்கும் கண்டனம்
- பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
- தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அங்கு எவ்வளவு முயன்றும் மீடேற முடியவில்லை. அடுத்த வருடம் மேற்கு வங்காளத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக தனது வேலையை தொடங்கி உள்ளது.
அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் கீர்த்தி ஆசாத் இருவடையேயான தனிப்பட்ட வாட்ஸ்அப் chat-களின் ஸ்க்ரீன் ஷாட்களை பாஜக தலைவர் அமித் மாளவியா கசிய விட்டுள்ளார். இதோடு, தேர்தல் ஆணையத்தில் வைத்து திரிணாமுல் எம்பிக்கள் இருவர் சண்டையிட்டு கொண்ட வீடியோவையும் பாஜக தலைவர் அமித் மாளவியா பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட chat-களில் கல்யாண் பானர்ஜி, சொந்த கட்சியில் இருக்கும் மற்றொரு பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவர் குறித்து குறை கூறுகிறார். அவரை கீர்த்தி ஆசாத் சமாதானப்படுத்துகிறார். அந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு கல்யாண் பானர்ஜி ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த சாட்-இல் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இவ்வாறு கட்சியின் தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.
அவர் கூறியதாவது, "வெளியிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள் எங்களை அவமானப்படுத்தியுள்ளன, சங்கடப்படுத்தியுள்ளன. இது நடந்திருக்கக்கூடாது. ஒவ்வொரு கட்சியின் உள் தனியுரிமையை பராமரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.






