என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepti Sharma"

    • இந்தியாவின் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் எடுத்துள்ளது.
    • நியூசிலாந்தின் அமெலியா கெரை ரூ.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.

    புதுடெல்லி:

    4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

    ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீராங்கனைகள் விவரம் வருமாறு:

    தீப்தி சர்மா: ரூ.3.20 கோடி- உபி வாரியர்ஸ்

    அமெலியா கெர்: ரூ.3 கோடி-மும்பை இந்தியன்ஸ்

    ஷிகா பாண்டே: ரூ.2.40 கோடி-உபி வாரியர்ஸ்

    சோபி டிவைன்: ரூ.2 கோடி- குஜராத் ஜெயண்ட்ஸ்

    மெக் லானிங்: ரூ.1.9 கோடி - உபி வாரியர்ஸ்

    • மகளிர் உலக கோப்பையில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
    • கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், மகளிர் உலக கோப்பையில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

    அந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்மிருதி மந்தனா,ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த அணியின் வீராங்கனைகள்:-

    ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வோர்ட் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் காப், ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, அன்னாபெல் சதர்லேண்ட், நாடின் டி கிளார்க், சித்ரா நவாஸ் (WK), அலனா கிங், சோபி எக்லெஸ்டோன்.

    • தரவரிசைப் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3வது இடத்துக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

    தற்போது நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் கடைசி இரு ஆட்டங்களிலும் மந்தனா அசத்தலாக ஆடி அரை சதங்கள் விளாசினார்.

    2வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் நாட் சீவர்பிரன்ட் உள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை ஆலிசா ஹீலி ஒரு நிலை உயர்ந்து 3ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 3 நிலை உயர்ந்து 15-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3 நிலை உயர்ந்து 669 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 778 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆஸி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 686 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய வீராங்கனை ஸ்நே ராணா 20-வது இடத்தில் உள்ளார்.

    • ஸ்மிரிதி மந்தனா 125 ரன் விளாசினார்.
    • ஒரு கட்டத்தில் 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடி ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 125 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தீப்தி ஷர்மா நேர்த்தியாக விளையாடினார். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் (6), ராதா யாதவ் (18), அருந்ததி ரெட்டி (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்தியா 289 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா உடன், ஷே்னே ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் இந்தியா இலக்கை நோக்கி முன்னேறியது. இந்தியா 42.2 ஓவரில் 354 ரன்கள் எடுத்திருந்தது. 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 42.3 ஆவது ஓவரில் தீப்தி ஷர்மா 58 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ராணா 46ஆவது ஓவரில் 35 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 47 ஓவரில் 369 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது, இதனால் ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    • ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
    • இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சார்பில் பெண்கள் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிரடியாக 10 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    33வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா தற்போது 23வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடம் பிடித்துள்ளார்.

    தீப்தி சர்மா பந்துவீச்சு தரவரிசையிலும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.

    • டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 2வது இடத்துக்கு முன்னேறினார்.
    • இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சார்பில் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த 6 ஆண்டாக டாப்-10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா, ஒரு இடம் முன்னேறி, 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தானின் சாடியா (746) விட 8 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.

    பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் தொடர்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா 12-வது இடம் பிடித்துள்ளார்.

    • தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார்.
    • இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக உ.பி. வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் மீது அந்த அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    குடும்ப அவசர நிலை எனக் கூறி ஆருஷியும் அவரது தாயாரும் தன்னிடம் இருந்து இருந்து பணம் வாங்கி ஏமாற்றியதாக தீப்தி சர்மா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆக்ராவில் உள்ள தனது குடியிருப்பில் புகுந்து தங்கம், வெள்ளி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் ரொக்கத்தை ஆருஷி கோயல் திருடிச் சென்றதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் உள்ளார்.
    • பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 3-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (753 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி மற்றும் தஹிலா இடம்பிடித்துள்ளனர்.

    முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மட்டுமே இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 11வது இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா 3-வது இடத்திலும், ரேணுகா சிங் 5-வது இடத்திலும் உள்ளார்.

    அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடம் பிடித்துள்ளார்.

    • இந்திய அணியின் மற்றொரு வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் மகளிர் டி20 போட்டியின் பந்து வீச்சாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 732 புள்ளிகளுடன் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.

    பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

    • இங்கிலாந்து வீராங்கனையான நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார்.
    • இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தீப்தி ஷர்மா 67 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரேனுகா சிங் 1 ரன்னிலும், கயக்வாட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 104.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி தடுமாறியது. இங்கிலாந்து வீராங்கனையான நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் இங்கிலாந்து அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 292 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
    • இந்தியாவின் தீப்தி சர்மா இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    மும்பை:

    பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 104.3 ஓவரில் 428 ரன்களில் ஆல் அவுட்டானது. சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதமடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    298 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் சார்லி தீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

    இந்தியாவின் தீப்தி சர்மா 4 விக்கெட்டும், பூஜா 3 விக்கெட்டும், கெய்க்வாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது.
    • சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார்.

    கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.இது முதல் முறையாக பேட் கம்மின்ஸ் பெறும் விருது ஆகும்.

    மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா சிறந்த வீராங்கனையாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

    ×