search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரவரிசை"

    • பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
    • பந்து வீச்சாளர் தரவரிசையிலும் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 5-வது இடத்தில் தொடருகிறார்.

    இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 2 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென், இந்தியாவின் தீப்தி ஷர்மா மாற்றமின்றி நீடிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 10-வது இடமும், ராதா யாதவ் 15-வது இடமும் , பூஜா வஸ்ட்ராகர் 23-வது இடமும் , ஸ்ரேயங்கா பட்டீல் 60-வது இடமும் வகிக்கிறார்கள்.

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.

    • தாய்லாந்து ஓபன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
    • ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி முதலிடம் பிடித்தனர்.

    புதுடெல்லி:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்ராஜ்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், தாய்லாந்து ஓபன் தொடரில் வெற்றிபெற்ற நிலையில், ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன ஜோடிக்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தாய்லாந்து ஓபன் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    • 2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
    • 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகை யான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடமும் பிடித்துள்ளார். அவர் நீட் தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்றி ருந்தார். இந்த இரண்டு மாணவிகளும் சேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் அரசு ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் 715 மதிப்பெண்களு டன் 3-ம் இடத்தையும், மாணவன் காவியரசு 705 மதிப்பெண்களுடன் 7-ம் இடத்தையும் பிடித்தனர்.

    இது குறித்து மாணவி கிருத்திகா கூறுகையில், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். டாக்டர் ஆக வேண்டும் என லட்சியமாக இருந்தது. இதனால் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்தேன்.

    ஆசிரியர்கள், ஆசிரி யைகள், நன்கு பயிற்சி அளித்தனர். மேலும் பெற்றோர், என்னை ஊக்கு வித்தனர். இதனால் என்னால் வெற்றி பெற முடிந்தது. அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    • ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

    ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார். 

    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளிடம் இருந்த ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன.
    • அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவி–களின் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தில் இருந்து இடம் பிடித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கைக்கான -2022 விண்ணப்பங்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளிடம் இருந்த ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன.

    இதையடுத்து கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்து.

    இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவி–களின் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 பேர் சேலம் மாவட்டத்தில் இருந்து இடம் பிடித்துள்ளனர்.

    அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரோகித் 198.50 கட் ஆப் மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கரண்ராஜ் 6-ம் இடம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷா 8-ம் இடம் பிடித்தனர்.

    ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி 934 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். #ViratKohli #ICC

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 149, 51 ரன்கள் எடுத்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

    934 புள்ளிகளுடன் கோலி முதலிடமும், 929 புள்ளி என்ற சிறிய வித்தியாசத்துடன் ஸ்மித் இரண்டாம் இடமும், ரூட் 865 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர்களில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    125 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 
    ×