என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ராஸ் ஐஐடி"

    • கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்தது.
    • ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது.

    2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் டெல்லி IIT பட்டியலில் டெல்லி IIT 123வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் 27 ரேங்க் முன்னேறி இந்த வருடம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    இந்த ஆண்டு தரவரிசையில் எட்டு புதிய கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

    இதன் மூலம், அமெரிக்கா (192), இங்கிலாந்து (90) மற்றும் சீனா (72) ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா நான்காவது அதிக பிரதிநிதித்துவ நாடாக மாறியுள்ளது.

    இதற்கிடையில், ஐஐடி பாம்பே 2025 ஆம் ஆண்டில் அதன் மிக உயர்ந்த தரவரிசையான 118 இலிருந்து 129 வது இடத்திற்குச் சரிந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    • மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தை பிடித்துள்ளது.

    மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இந்த தரவரிசை பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

    தொடர்ந்து, பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும், டில்லி ஐஐடி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன.

    பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டெல்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

    மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தையும், மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலை 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

    மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தை பிடித்தது. வேலூர் சிஎம்சி 3வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடமும் பிடித்தது.

    ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது.

    கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×