search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த சூர்யகுமார்
    X

    டி20 கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த சூர்யகுமார்

    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    Next Story
    ×