என் மலர்
நீங்கள் தேடியது "rankings"
- ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அந்த வகையில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 3-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தில் இருக்கும் பேட்டர்கள் ஒரு இடம் பின் தங்கினர். மற்றபடி பேட்டர் தரவரிசையில் மாற்றமில்லை.
அதேபோல் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றபடி இதிலும் மாற்றமில்லை.
ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 5 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு வீரரான ஓமர்சாய் 19 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.
- டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 2வது இடத்துக்கு முன்னேறினார்.
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.
துபாய்:
ஐ.சி.சி. சார்பில் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த 6 ஆண்டாக டாப்-10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா, ஒரு இடம் முன்னேறி, 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தானின் சாடியா (746) விட 8 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.
பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் தொடர்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா 12-வது இடம் பிடித்துள்ளார்.
- டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 3 இந்தியர்கள் உள்ளனர்.
- பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை.
துபாய்:
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முடிந்துள்ளது.
இந்நிலையில், புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீர்ர ஜோ ரூட் மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேறி விராட் கோலியை தாண்டி 6-வது இடத்திலும், விராட் கோலி (ஒரு இடம் சரிந்து) 8-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. பும்ரா மற்றும் ஜடேஜா மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகின்றனர்.

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வேரே (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் நீடிக்கின்றனர். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளார். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-வது இடத்தில் தொடருகிறார். குரோஷியா வீரர் மரின் சிலிச் 2 இடம் சரிந்து 7-வது இடம் பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 2 இடம் ஏற்றம் கண்டு 8-வது இடமும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 2 இடம் சறுக்கி 9-வது இடமும், விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய செர்பியா வீரர் ஜோகோவிச் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடமும் பெற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், விம்பிள்டன் பட்டம் வென்ற ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6 இடம் முன்னேறி 4-வது இடமும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 5-வது இடமும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-வது இடமும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 4 இடம் சரிந்து 7-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் சறுக்கி 8-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 9-வது இடமும், ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜெஸ் 3 இடம் முன்னேறி 10-வது இடமும் பிடித்துள்ளனர். விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார். #SerenaWilliams #Tamilnews






