என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Batting Rankings"

    • ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
    • இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சார்பில் பெண்கள் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிரடியாக 10 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    33வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா தற்போது 23வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடம் பிடித்துள்ளார்.

    தீப்தி சர்மா பந்துவீச்சு தரவரிசையிலும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் குவித்ததால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • இந்திய வீரர்கள் யாரும் டாப் 10 இடத்திற்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2 இடங்கள் முன்னேறி 816 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் குவித்ததால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 10 இடத்திற்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். 3-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் உள்ளார்.

    ×