என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக்கோப்பை: ஐசிசி வெளியிட்ட சிறந்த அணியில் இடம்பிடித்த 3 இந்திய வீராங்கனைகள்
- மகளிர் உலக கோப்பையில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
- கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், மகளிர் உலக கோப்பையில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
அந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்மிருதி மந்தனா,ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த அணியின் வீராங்கனைகள்:-
ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வோர்ட் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் காப், ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, அன்னாபெல் சதர்லேண்ட், நாடின் டி கிளார்க், சித்ரா நவாஸ் (WK), அலனா கிங், சோபி எக்லெஸ்டோன்.






