என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸி. வீராங்கனையை பின்னுக்குத்தள்ளி ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த தீப்தி சர்மா
- ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
- தீப்தி சர்மா தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளது.
இவர் தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால் 732 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாகூர் 3 இடங்களை சரிந்து 14-வது இடத்தில் உள்ளார். ராதா யாதவ் 15-வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஜெர்மையா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா 1 இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் 15-வது இடத்தில் உள்ளார்.






