என் மலர்
நீங்கள் தேடியது "TataMotors"
- டர்போ-பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
- மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதுவரவு மாடலான சியரா விலை குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளது. ஏற்கனவே இந்த காரின் சில வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரு வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சியரா அக்கம்ப்ளிஷ்டு (Accomplished) மற்றும் அக்கம்ப்ளிஷ்டு+ (Accomplished +) வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலை முறையே ரூ. 17.99 லட்சம் மற்றும் ரூ. 20.29 லட்சம் ஆகும்.
அக்கம்ப்ளிஷ்டு மற்றும் அக்கம்ப்ளிஷ்டு + ஆகிய இரண்டு வகைகளும் டாடாவின் டைரக்ட் இன்ஜெக்டெட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் வழங்கப்படுகின்றன. டீசல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதே நேரத்தில் டர்போ-பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
கூடுதலாக, அக்கம்ப்ளிஷ்டு வேரியண்ட் வாங்குபவர்களுக்கு 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வடிவத்தில் மூன்றாவது பவர்டிரெயின் ஆப்ஷனும் வழங்குகிறது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த டாப் வேரியண்ட்கள், குறைந்த வேரியண்ட்களில் இருந்து தனித்து நிற்கும் பிரீமியம் வசதி மற்றும் சவுகரிய அம்சங்களை உள்ளடக்கிய விரிவான உபகரணப் பட்டியலில் இருந்தும் பயன் அடைகின்றன. உபகரணங்களைப் பொறுத்தவரை, லெவல் 2 ADAS, 12-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டம், மெமரி செயல்பாட்டுடன் கூடிய பவர்டு டிரைவர் இருக்கை, பவர்டு டெயில்கேட், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் iRA கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அடங்கும்.
இந்திய சந்தையில் புதிய டாடா சியரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி விக்டோரிஸ், ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுக்கு போட்டியாக அமைகிறது.
- டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு ரூ.85 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.
- இந்த தள்ளுபடி நகரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
டாடா நிறுவனம், ஆண்டு இறுதியை முன்னிட்டு தனது கார் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன்படி நடப்பு உற்பத்தி ஆண்டு ஹேரியர், சஃபாரி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இதில் ரொக்க தள்ளுபடி ரூ.75 ஆயிரம் வரை பெறலாம்.
இந்திய சந்தையில் ஹேரியர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.14 லட்சம் முதல் ரூ.25.24 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சஃபாரி மாடலின் விலை ரூ.14.66 லட்சம் முதல் ரூ.25.96 லட்சம் வரை ஆகும். இதுபோல் டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு ரூ.85 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.5 லட்சம் முதல் துவங்குகிறது.
டாடா பஞ்ச் காருக்கு ரூ.75 ஆயிரம் வரையிலும் (ஷோரூம் விலை ரூ.5.5 லட்சம் முதல்), டியாகோ, டிகோர் கார்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையிலும் (டியாகோ ரூ.4.57 லட்சம் முதல், டிகோர் ரூ.5.49 லட்சம் முதல்), நெக்சான் (ரூ.7.99 லட்சம் முதல்) மற்றும் கர்வுக்கு (ரூ.9.65 லட்சம் முதல்) ரூ.50 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி சலுகை பெறலாம். இந்த தள்ளுபடி நகரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
- முதன்முறையாக இந்திய மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்தது.
- இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியாரா கார், மகளிர் உலக கோப்பை வென்ற ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
- பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.
டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 2017 ஆம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக (CFO) பதவி வகித்து வருகிறார்.







