என் மலர்
நீங்கள் தேடியது "Tata Sierra"
- 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம்.
- என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா சியரா சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நவம்பர் 25-ந்தேதி (அதாவது இன்று) விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாடா சியரா மாடலின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் என்றும் அடுத்த மாதம் 16ந்தேதி முதல் முன்பதிவு ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் டாடா சியரா டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டாடா சியரா காரில் 168hp பவர், 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 165hp பவர், 280Nm டார்க் வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் TGD-i டர்போ-பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படலாம். இந்த என்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படலாம்.
வெளிப்புறத்தில், 2025 டாடா சியரா மாடலில், மேல்புறத்தில் சியரா எழுத்துக்களுடன் கூடிய முழு கருப்பு கிரில், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஃபேசியாவில் லைட் பார், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இத்துடன் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், முன் கதவுகளில் சியரா எழுத்துக்கள், பெரிய அலாய் வீல்கள், கனெக்ட்டெட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பின்புற பம்பரில் நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை உள்ளன.
உள்புறம், இந்த மாடல் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஒளிரும் டாடா லோகோ, டேஷ்போர்டில் மூன்று-திரை அமைப்பு, ஏசி கண்ட்ரோல்களுக்கான டச் செயல்பாடு, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, புதிய சென்டர் கன்சோல், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் ஒரு இயங்கும் டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம்.
- தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கார் கம்பெனிகளில் முன்னோடியாக திகழ்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம். இந்த மாடலை வெளிவந்ததில் இருந்தே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
இதுவரை இந்தியாவில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட சியாரா யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. சியாரா கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட மால்கள் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் சார்பில் அவர்களது சியாரா EV கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா சியாரா EV கான்செப்ட் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான வடிவிலேயே காட்சியளித்தது.
வருகிற 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சியெரா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, இதே காரின் பெட்ரோல்/ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களையும் விற்பனைக்கு கொண்டுவர டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






