என் மலர்
கார்

கார் வாங்க சூப்பர் சான்ஸ்... Year End ஆஃபர் அறிவித்த டாடா மோட்டார்ஸ்..!
- டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு ரூ.85 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.
- இந்த தள்ளுபடி நகரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
டாடா நிறுவனம், ஆண்டு இறுதியை முன்னிட்டு தனது கார் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன்படி நடப்பு உற்பத்தி ஆண்டு ஹேரியர், சஃபாரி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இதில் ரொக்க தள்ளுபடி ரூ.75 ஆயிரம் வரை பெறலாம்.
இந்திய சந்தையில் ஹேரியர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.14 லட்சம் முதல் ரூ.25.24 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சஃபாரி மாடலின் விலை ரூ.14.66 லட்சம் முதல் ரூ.25.96 லட்சம் வரை ஆகும். இதுபோல் டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு ரூ.85 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.5 லட்சம் முதல் துவங்குகிறது.
டாடா பஞ்ச் காருக்கு ரூ.75 ஆயிரம் வரையிலும் (ஷோரூம் விலை ரூ.5.5 லட்சம் முதல்), டியாகோ, டிகோர் கார்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையிலும் (டியாகோ ரூ.4.57 லட்சம் முதல், டிகோர் ரூ.5.49 லட்சம் முதல்), நெக்சான் (ரூ.7.99 லட்சம் முதல்) மற்றும் கர்வுக்கு (ரூ.9.65 லட்சம் முதல்) ரூ.50 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி சலுகை பெறலாம். இந்த தள்ளுபடி நகரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.






