search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்"

    கன்டெய்னர் லாரிக்குள் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் வெளியே எடுத்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் தியேட்டர் பின்புறம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பவானி செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பி செல்வது வழக்கம். நேற்று மாலை ஒரு கன்டெய்னர் லாரி  இந்த பகுதியில் வளைந்து பவானி செல்ல திரும்பியது. 

    அப்போது சேலம் பக்கமிருந்து வந்த கார்  லாரியின் கீழ் பகுதிக்குள் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் இல்லை. இதனால் அந்த பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் 45 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  

    இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து நேரில் சென்றனர். மீட்பு வாகனம் மூலம் காரை வெளியில் எடுத்து, போக்குவரத்தை சீர் செய்தனர்.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு M3 மற்றும் M4 கார்களின் M50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் பிரத்யேக அப்டேட்கள் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. 1 சீரிஸ் மற்றும் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல்களையும் எடிஷன் கலர் விஷனில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் M4 50 ஜாரெ எடிஷன் மாடல்கள் - சான் மரினோ புளூ, கார்பன் பிலாக், இமோலா ரெட், மேகோ புளூ மற்றும் ஹேட்ச் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முன்புறம் 19 இன்ச் M ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள், பின்புறம் 20 இன்ச் 2 ஸ்போக் டிசைன் கொண்ட வீல் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த வீல்களை கோல்டு பிரான்ஸ் மேட் மற்றும் ஆர்பிட் மேட் பினிஷ் கொண்டுள்ளன.

     பி.எம்.டபிள்யூ. M50 ஜாரெ எடிஷன்

    உள்புறம் M4 ஜாரெ எடிஷன் ஸ்டாண்டர்டு M4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், உள்புறங்களில் விசேஷமாக ஸ்பெஷல் எடிஷனை குறிக்கும் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஸ்டாண்டர்டு M ஸ்போர்ட் ஹெட்ரெஸ்ட், ஆப்ஷனல் கார்பன் பைபர் பக்கெட் முன்புற இருக்கைகள் உள்ளன. 

    M3 ஜாரெ ஸ்பெஷல் எடிஷன் கார் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 500 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. பி.எம்.டபிள்யூ. M3 ஜாரெ எடிஷன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார்- லைம்ராக் கிரே, சினிபார் ரெட், டெக்னோ வைலண்ட், ஃபயர் ஆரஞ்சு மற்றும் இண்டர்லகோஸ் புளூ ஷேட்களில் கிடைக்கிறது. 
    கார் பயன்படுத்துவோர் அதன் மைலேஜை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியதில் இருந்தே பொது மக்கள் எரிபொருளை மிச்சம் பிடிக்கும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். அந்த வகையில் பெட்ரோல், டீசல் சார்ந்து இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவோர் அதில் அதிக மைலேஜ் பெற என்ன செய்ய வேண்டும் என தேட தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில், கார் பயன்படுத்துவோர் தங்களின் மைலேஜை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

    - கார் மைலேஜை அதிப்படுத்த முதலில் திராட்டிலில் கவனம் செலுத்த துவங்க வேண்டும். அந்த வகையில் திராட்டில் செய்யும் போது மென்மையாக செயல்பட வேண்டும். சட்டென திராட்டிலை முடுக்கும் போது காரின் மைலேஜ் குறையும். இதன் காரணமாக காரின் மைலேஜ் குறைய தொடங்கி விடும். கார் அக்செல்லரேட் செய்யும் போது, மென்மையாக திராட்டில் கொடுத்தால் காரின் எரிபொருள் குறைவாக எடுக்கப்பட்டு, காரில் அதிக மைலேஜ் கிடைக்கும்.

     கார்

    - சமீபத்திய அதிநவீன கார் மாடல்களில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கார் நீண்ட நொடிகள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால், என்ஜின் தானாக ஆப் ஆகி விடும். கார் பயன்படுத்துவோரில் பலர் இந்த அம்சத்தை தவிர்த்து கார்களை ஐடிலில் வைக்கின்றனர். இவ்வாறு செய்யும் போது காரின் எரிபொருள் வழக்கத்தை விட அதிகமாக செலவாகும்.

    - கார் பயன்படுத்துவோரில் பலர் கார்களை எடுத்து கொண்டு நீண்ட தூர பயணம் செல்லும் போது தான், டையர் பிரெஷர் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான செயல். கார்களின் டையர் பிரெஷரை சீரான இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் காற்றை சரியான அளவில் நிரப்பிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது கார்கள் அதிக மைலேஜ் வழங்கும். 

     கார்

    - கார்களின் மைலேஜை அதிகப்படுத்த முடிந்த வரை காரினை அதிகபட்ச கியரில் ஓட்ட வேண்டும். குறைந்த கியரில் வாகனம் ஓட்டும் போது அதிக எரிபொருள் செலவாகும். இது தவிர பெட்ரோல் கார்களின் ஆர்.பி.எம். அளவை 2 ஆயிரத்திலும், டீசல் கார்களில் ஆர்.பி.எம். அளவை 1,500-இல் தொடங்கி 1,700 வரை செட் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கார் மைலேஜ் அதிகரிக்கும்.

    - கார்களில் உள்ள குளிர்சாதன வசதி காரின் எரிபொருளை பெருமளவு குடிக்கும். ஆனால் ஏ.சி. இன்றி கண்ணாடியை திறந்த நிலையில், கார் ஓட்டும் போது மைலேஜ் குறைவதோடு அதன் இண்டீரியரும் பாதிக்கப்படும். முடிந்த வரை காரின் ஏ.சி.யை அதன் மிக குளிர்ந்த நிலையில் இயக்காமல் தேவைக்கு ஏற்ற அளவில் வைக்க வேண்டும். 
    ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடல் இந்திய விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனஅயூ 2021 வாக்கில் 1 லட்சத்து 08 யூனிட்கள் வரை விற்பனையாகி இருந்தது. 

    அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்டு உள்ள வென்யூ மாடல்களில் 18 சதவீத யூனிட்கள் புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்டு இருக்கிறது. 2021 ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் 2 லட்சத்து 50 ஆயிரம் எஸ்.யு.வி.க்களை விற்பனை செய்து இருந்தது. இதில் 42 சதவீத யூனிட்கள் ஹூண்டாய் வென்யூ மாடல் ஆகும். மேலும் இந்திய சந்தையில் இந்த பிரிவில் வென்யூ மாடல் மட்டும் 16.9 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டீசல் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், iMT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது டக்சன் மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி, முன்பதிவையும் அதிரடியாக நிறுத்தி இருக்கிறது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலில் முற்றிலும் புது டிசைன், ஏராளமான அம்சங்கள் மற்றும் அதீத சௌகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் புதிய கிரில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் புது பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீண்டாய் டக்சன்

    காரின் உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூ லின்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு டச் கண்ட்ரோல், ஆம்பிண்ட் லைட்டிங், இ பார்க்கிங் பிரேக், ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய 2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற ஆப்ஷ்ன்கள் வழங்கப்படலாம்.  
    நெசவு தொழிலாளி கார் மோதி இறந்தார்.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே ஆர்.பெத்தாம்பட்டி பகுதியைசேர்ந்தவர் துரைசாமி(வயது 49) நெசவு தொழிலாளி. இவர் தனது மொபட்டில் பெத்தாம் பட்டியிலிருந்து ஆட்டையாம்பட்டிக்கு சென்றார்.   

    எஸ் பாலம் வளைவில் அவர் ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக  எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பலியான துரைசாமிக்கு சுமதி என்ற மனைவியும், கோபி என்ற மகனும் சாந்தி என்ற மகளும் உள்ளனர். இன்று அதிகாலை 6 மணிக்கு நடந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துரைசாமியின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தன. இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    பலியான துரைசாமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்தியாவில் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்க முடிவு செய்து உள்ளது.


    ஆடம்பர கார் உற்பத்தியாளர்களில் முன்னணி நிறுவனம் போர்ஷே. இந்தியாவில் போர்ஷே நிறுவனம் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்குகிறது. போர்ஷே நிறுவனத்தின் முதல் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் மையம் ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ‘Porsche Approved' பெயரின் கீழ் இயங்க இருக்கின்றன.

    போக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக போர்ஷே அப்ரூவ்டு செண்டர், போக்வ்கேன் தாஸ் வெல்ட் ஆட்டோ மற்றும் ஆடி அப்ரூவ்டு பிளஸ் திட்டங்களின் வரிசையில் இணைகிறது. இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்திய கார்களை விற்பனை, வாங்குவது அல்லது எக்சேன்ஜ் செய்ய ஒற்றை தளமாக இவை மாறும். 

     போர்ஷே கார்

    போர்ஷே அப்ரூவ்டு மையங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் எக்சேன்ஜ் செய்வது போன்ற பணிகள் நடைபெறும். இதன் மூலம் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் வழங்குவதோடு, ஒரிஜினல் அக்சஸரீ, இன்சூரன்ஸ் மற்றும் நிதியுதவி உள்ளிட்டவைகளை வழங்கவும் போர்ஷே முடிவு செய்துள்ளது.

    போர்ஷே கார்களை புதிய முறையில் அனுபவிக்க வழி வகுக்கும் படி இந்த விற்பனை மையங்கள் செயல்படும் என போர்ஷே நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்த மற்ற தகவல்கள் விற்பனை மையம் துவங்கப்படும் போது அறிவிக்கப்படும் என போர்ஷே தெரிவித்துள்ளது.  
    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒற்றை வாடிக்கையாளருக்காக புது கார் மாடலை உருவாக்கி இருக்கிறது. இதனை யார் வாங்கி இருக்கிறார்கள் என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.



    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இரண்டவாது போட் டெயில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இத்தாலியில் நடைபெற்ற 2022 கான்கார்சோ எலிகன்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தன் குடும்பம், தந்தையின் வரலாற்றை போற்றும் வகையில், வாடிக்கையாளர் ஒருவர் இந்த காரை வாங்க ஆர்டர் கொடுத்து இருக்கிறார். மதர் ஆஃப் பியல் டிசைனில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில்

    புதிய போட் டெயில் மாடல் விலை 28 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 217 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஆனாலும், இது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முந்தைய போட் டெயில் மாடலுடன் ஒப்பிடும் போது, புது மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை யார் உருவாக்க சொன்னார்கள் என ரோர்ஸ் ராய்ஸ் இதுவரை தெரிவிக்கவில்லை.

    ஏராளமான பாரம்பரிய கார் மாடல்களை வாங்கி குவித்து வைத்து இருக்கும் நபர் தான் இந்த காரை வாங்கி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவர் தனியார் அருங்காட்சியகத்தை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாடிக்கையாளரின் தந்தை முத்துக்களை சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் புதிய போட் டெயில் மாடலை மதர் ஆப் பியல் தீமில் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 19 லேண்ட் ரோவர் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் இலவசமாக சரிசெய்து தரப்பட இருக்கின்றன.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2022 ரேன்ஜ் ரோவர் மாடல்களின் கிராஷ் சென்சார் சரியாக பொருத்தப்படவில்லை என்பதை கண்டறிந்து உள்ளது. இதனை சரி செய்யவில்லை எனில் மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருதுகிறது. 

    இதனால் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடல்களை ரிகால் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களில் 100 சதவீதம் கோளாறு உள்ளன. 

     ரேன்ஜ் ரோவர்

    இந்த கோளாறு காரணமாக காரின் முன்புற கிராஷ் சென்சார் செயலிழக்கலாம். இதனால் காரின் ஆக்டிவ் ரெசிஸ்டண்ட் சிஸ்டம்களும் சரியாக இயங்காமல் போகும். முன்புற கிராஷ் சென்சார்கள் இயங்காமல் போனால், காரணம் ஏர்பேக் சரியாக செயல்படாது. இது ஓட்டுனர் மட்டும் இன்றி காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கடும் காயங்களை ஏற்படுத்தி விடும்.

    இந்த கோளாறை ஏப்ரல் மாத வாக்கில் கண்டறிந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆலையில் இதுபற்றிய விசாரணையை நடத்தியது. அதன் பின் தற்போது கோளாறு பாதுகாப்பு விஷயத்தில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்களை ரிகால் செய்யும் நடவடிக்கையை ஜாகுவார் லேண்ட் ரோவர் மேற்கொண்டு வருகிறது. 
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M சீரிஸ் கார் மாடல் 540 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பந்தைய களத்திலும் புது சாதனை படைத்து அசத்தி இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பெர்பார்மன்ஸ் பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய M4 CSL மாடலில் அதிக செயல்திறன், சிறப்பான டிசைன் மற்றும் நர்பர்கிரிங் பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்ததில் அதிவேக கார் என்ற பட்டத்தை பெற்று இருக்கிறது. இந்த பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடல் 7 நிமிடங்கள் 20.207 நொடிகளில் கடந்துள்ளது. 

     பி.எம்.டபிள்யூ. M4 CSL

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். உலகளவில் இந்த கார் மொத்தத்தில் 1000 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் 3.0 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, ஸ்டிரெயிட் 6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 550 ஹெச்.பி. திறன், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய பி.எம்.டபிள்யூ. M4 CSL மணிக்கு அதிகபட்சமாக 307 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு மாடலை விட 110 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல்களும், பின்புறம் 22 இன்ச் வீல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மிஷெலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 R டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    எம்ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது கார் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.


    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் அதிக வெற்றிகளை வாரி குவித்து வருகிறது. கடந்த மாதம் இந்திய சந்தையில் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருப்பதாக எம்.ஜி. மோட்டார்ஸ் அறிவித்து இருந்தது. இந்தியாவில் சில மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ள நிலையில், இத்தகைய மைல்கல்லை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகவே பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களை அப்டேட் செய்ய இருக்கிறது. அப்டேட் மட்டுமின்றி புது எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளிலும் எம்.ஜி. நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் எம்.ஜி. ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. 

     எம்.ஜி. மோட்டார்ஸ் கார்

    ஹெக்டார் மாடலை தொடர்ந்து எம்.ஜி. குளோஸ்டர் பேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புது பேஸ்லிப்ட் மாடலில் ஸ்டைலிங் அப்டேட்கள் மற்றும் புது அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    இரு மாடல்கள் மட்டுமின்றி எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கான இரண்டாவது எம்.ஜி. எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் எம்.ஜி. ZS EV காரை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது அளவில் சிறிய கார் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
    மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காருக்கான விளம்பர படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ப்ரோடோடைப் வெர்ஷனில் பல முறை இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், நீண்ட காலம் சோதனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், முதல் முறையாக எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவை புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை என கூறப்படுகிறது. அதன்படி இந்த காரின் முன்புறம் மெல்லிய கிளாஸ் பிளாக் நிற கிரில், ரிடிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

     மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா
    Photo Courtesy: RushLane

    இத்துடன் J வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற பம்ப்பர்கள் பிளாக் இன்சர்ட் மற்றும் ஃபாக் லேம்ப்களை கொண்டுள்ளன. பக்கவாட்டில் பிரம்மாண்ட வீல் ஆர்ச்கள், நீண்ட சில்வர் நிற ரூஃப் ரெயில்கள் உள்ளன. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் ஸ்வில் ரக டூயல் டோன் டிசைன் வழங்கப்பட்டு உள்ளன. 

    புதிய தலைமுறை மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
    ×