என் மலர்

  இது புதுசு

  ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில்
  X
  ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில்

  ரூ. 217 கோடியில் உருவான ரோல்ஸ் ராய்ஸ் கார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒற்றை வாடிக்கையாளருக்காக புது கார் மாடலை உருவாக்கி இருக்கிறது. இதனை யார் வாங்கி இருக்கிறார்கள் என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இரண்டவாது போட் டெயில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இத்தாலியில் நடைபெற்ற 2022 கான்கார்சோ எலிகன்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தன் குடும்பம், தந்தையின் வரலாற்றை போற்றும் வகையில், வாடிக்கையாளர் ஒருவர் இந்த காரை வாங்க ஆர்டர் கொடுத்து இருக்கிறார். மதர் ஆஃப் பியல் டிசைனில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

   ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில்

  புதிய போட் டெயில் மாடல் விலை 28 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 217 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஆனாலும், இது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முந்தைய போட் டெயில் மாடலுடன் ஒப்பிடும் போது, புது மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை யார் உருவாக்க சொன்னார்கள் என ரோர்ஸ் ராய்ஸ் இதுவரை தெரிவிக்கவில்லை.

  ஏராளமான பாரம்பரிய கார் மாடல்களை வாங்கி குவித்து வைத்து இருக்கும் நபர் தான் இந்த காரை வாங்கி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவர் தனியார் அருங்காட்சியகத்தை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாடிக்கையாளரின் தந்தை முத்துக்களை சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் புதிய போட் டெயில் மாடலை மதர் ஆப் பியல் தீமில் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
  Next Story
  ×