search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW"

    • பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.
    • மோட்டார்சைக்கிள்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எதிர்கால மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிம்பலில் மவுன்ட் செய்யக்கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வழங்க இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.

    காப்புரிமை விவரங்களின் படி எல்.இ.டி. ஹெட்லைட் 3-ஆக்சிஸ் கிம்பலில் மவுன்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவு துறையில் கேமரா ஆடினாலும், காட்சிகள் ஆடாமல் பார்த்துக் கொள்ளவே கிம்பல் பயன்படுத்தப்படுகிறது. இதே பாணியை பி.எம்.டபிள்யூ. தனது மோட்டார்சைக்கிள் மாடல்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.

     


    மோட்டார்சைக்கிள் எந்த பக்கம் திரும்பினாலும் அல்லது கடுமையாக பிரேகிங் செய்யும் போதும் பி.எம்.டபிள்யூ. சிஸ்டத்தில் எல்.இ.டி. ஹெட்லைட் எந்த பக்கமும் அசையாது. இதுதவிர ஹெட்லைட் கார்னெரில் மட்டும் ஒளியை பாய்ச்சும். இதனால் ரைடிங்கின் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும்.

    இந்த ஹெட்லைட் சிஸ்டம் முழுவதும் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் (IMU) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதே போன்ற யூனிட் தான் மோட்டார்சைக்கிளின் இதர பாதுகாப்பு வசதிகளான கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னெரிங் ஏ.பி.எஸ். உள்ளிட்டவைகளையும் கட்டுப்படுத்துகிறது. புதிய கிம்பல் ஹெட்லைட் சிஸ்டம் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்யும் எதிர்கால GS சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • முந்தைய கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது.
    • புதிய கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பி.எம்.டபிள்யூ. இந்திய சந்தையில் தனது 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. M காரின் விலை ரூ. 78 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் கிடைத்த நிலையில், இந்த வெர்ஷன் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடல்- மினரல் வைட், டான்சனைட் புளூ, ஸ்கை ஸ்கிரேப்பர் கிரே மற்றும் கார்பன் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை இரட்டை 12.3 இன்ச் ஸ்கிரீன்கள்- ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர்வியூ கேமரா, பார்க் அசிஸ்ட், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட்போன் ஹோல்டர், பேடில் ஷிஃப்டர்கள், பானரோமிக் சன்ரூஃப், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் கம்ஃபர்ட், கம்ஃபர்ட் பிளஸ், ஸ்போர்ட் , இகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் என ஐந்துவித டிரைவிங் மோட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • டூத்லெஸ்.ஏஎம்ஜி எனும் ஐடி-யை கொண்ட பயனர் ஒரு வீடியோவை பதிவிட்டார்
    • இன்ஸ்டாகிராம் ஹேண்டிலை பிஎம்டபிள்யூ_சுகமான டிரைவிங் என மாற்றுவீர்களா என BMW கேட்டது

    சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல "டிரெண்டிங்" ஆகி பிரபலமாக உள்ளன.

    அவ்வகையில் சில மாதங்களாக, தாங்கள் பதிவிடும் வீடியோக்களை சில பிரபலங்கள் அல்லது பிரபல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் "கமென்ட்" செய்தாக வேண்டும் எனும் பிடிவாதக்காரர்களின் வீடியோ பரவி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் "டூத்லெஸ்.ஏஎம்ஜி" எனும் ஐடி-யை கொண்ட ஒரு பயனர், தான் வைத்திருக்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி (Mercedes-AMG) காரை குறித்து பதிவிட்டுள்ள வீடியோவை பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் பார்த்து, கமென்ட் பதிவிட்டால், தனது மெர்சிடிஸ் காரை விற்று விட்டு பிஎம்டபிள்யூ எம்340ஐ (BMW M340i) ரக காரை வாங்குவேன் என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்த பிஎம்டபிள்யூ நிர்வாகம் "நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் ஹேண்டில் பெயரையும் மாற்றி பிஎம்டபிள்யூ_சுகமான டிரைவிங் என மாற்றுவீர்களா?" என கேள்வி எழுப்பியிருந்தது.

    மிக பெரிய கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ ஒரு பயனரின் வீடியோவிற்கு உடனடியாக பதிலளித்தது இணையத்தில் பாராட்டப்படுகிறது.

    ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனம் பதிலளித்ததனால், அந்த பயனர் வாக்களித்தபடி தனது மெர்சிடிஸ் காரை விற்று பிஎம்டபிள்யூ காரை வாங்கினாரா எனும் விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.

    இந்த கேள்வி-பதில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    • இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 582 கி.மீ. ரேன்ஜ் வழங்கும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 8-வது தலைமுறை 5 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காருடன் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் முற்றிலும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் பி.எம்.டபிள்யூ. கார் மாடல் என்ற பெருமையை புதிய 5 சீரிஸ் மாடல் பெற இருக்கிறது.

    புதிய 5 சீரிஸ் காரின் லாங்-வீல்பேஸ் வெர்ஷன் G60 5 சீரிஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 5 சீரிஸ் LWB மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட கிரில், மெல்லிய டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் LWB 5175mm நீளமும், 1520mm உயரம், வீல்பேஸ் 3105mm அளவில் உள்ளது.

     


    இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 520Li அல்லது 530Li, 520Ld வெர்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், டீசல் என்ஜின்கள் வழங்கப்படும். இவற்றுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. i5 மாடல் இ-டிரைவ்40 வடிவில் கிடைக்கும் என்றும் இதில் 340 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மோட்டார் மற்றும் 81.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று பி.எம்.டபிள்யூ. தெரிவித்துள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல்கள் பண்டிகை காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • இந்த காரில் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    • இந்த தொழில்நுட்பம் ஓட்டுனர்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது 7 சீரிஸ் மாடல்களில் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. 2024 ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் 7 சீரிஸ் மாடல்களில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மாடல்கள் அதிகபட்சம் மணிக்கு 96.5 கிலோமீட்டர் வேகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்.

    7 சீரிஸ் மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. i7 எலெக்ட்ரிக் செடான் மாடல்களிலும் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது இந்த தொழில்நுட்பம் ஓட்டுனர்களுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று தெரிகிறது.

    தானியங்கி முறையில் செல்வதோடு, கார் விபத்தில் சிக்குவதை பெருமளவுக்கு தடுக்கவும் லெவல் 3 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் உதவும். இதற்காக இந்த காரில் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை அதிக வெளிச்சம் நிறைந்த பகல் நேரங்கள் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மற்றும் i7 எலெக்ட்ரிக் செடான் மாடல்களில் அதிநவீன சென்சார்கள், ரேடார், 3D Lidar மற்றும் அல்ட்ராசோனிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சென்சார்கள் 2024 பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் மற்றும் i7 மாடல்களை அனைத்து விதமான வானிலைகளின் போதும் அருகில் உள்ள பொருட்களை துல்லியமாக கண்டறிய உதவும்.

    புதிய சென்சார்கள் வழங்கப்படுவதால், பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது 7 சீரிஸ் மற்றும் i7 செடான் மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. 

    • விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி வெற்றி படமாக மாறியது.
    • மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியதோடு, வசூலில் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் வினோத் குமார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாக வழங்கி இருக்கிறார். மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

    • புதிய X4 மாடலில் டூயல் டோன் தீம், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது.
    • 2023 பி.எம்.டபிள்யூ. X4 M40i மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது X4 M40i மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. X4 M40i மாடலின் விலை ரூ. 96 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இந்திய சந்தையில் X4 மாடல் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. இதன் முந்தைய வெர்ஷன் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் இரட்டை L வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், கிளாஸி பிளாக் கிரில், ஸ்கிட் பிளேட், ORVM-கள், 20 இன்ச் அலாய் வீல், ராப்-அரவுண்ட் 2 பீஸ் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     

    புதிய X4 மாடலில் டூயல் டோன் தீம், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், 12.3 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ரிக்லைனிங் ரியர் சீட்கள், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 பி.எம்.டபிள்யூ. X4 M40i மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 382 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் உள்ளது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஆடம்பர கார் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல்கள் M70 எக்ஸ் டிரைவ் மற்றும் 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட் என்று அழைக்கப்படுகின்றன.

    இதில் பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ்டிரைவ் மாடலில் முழுமையாக இலுமினேட் செய்யப்பட்ட முன்புற கிரில், செங்குத்தான ஸ்லாட்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், மெல்லிய எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டூயல் டோன் பெயின்ட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

     

    இந்த காரில் டூயல்-மோட்டார் செட்டப் உள்ளது. இவற்றுடன் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள மோட்டார்கள் ஒருங்கிணைந்து 657 ஹெச்.பி. வரையிலான பவர், 1100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ் டிரைவ் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 740d M ஸ்போர்ட் மாடல் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

     

    பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 286 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ் டிரைவ் ரூ. 2 கோடியே 50 லட்சம்

    பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட் ரூ. 1 கோடியே 81 லட்சம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பி.எம்.டபிள்யூ. iX1 மாடல் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
    • பி.எம்.டபிள்யூ. iX1 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.

    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் தனது iX1 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 66 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிமுகத்தை தொடர்ந்து, இதன் விற்பனை துவங்கியது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடலான iX1 விற்பனை துவங்கிய சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது. முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. iX1 இந்த ஆண்டுக்கான யூனிட்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளது.

     

     

    இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. iX1 மாடல்: ஆல்பைன் வைட், ஸ்பேஸ் சில்வர், பிளாக் சஃபையர் மற்றும் ஸ்டாம் பே என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 10.7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், M ஸ்போர்ட் லெதர் ஸ்டீரிங் வீல், புளூ ரிங் ஃபினிஷர் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. iX1 மாடலில் ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஆக்டிவ் முன்புற இருக்கைகள், மசாஜ் வசதி, ஆம்பியண்ட் லைட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டூயல் ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், பவர் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரில் 66.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டூயல் மோட்டார்கள் உள்ளன.

    இவை 309 ஹெச்.பி. பவர், 494 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்று இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    • புதிய பி.எம்.டபிள்யூ. iX1 மாடல் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • பி.எம்.டபிள்யூ. iX1 மாடலில் ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் தனது X1 எஸ்.யு.வி. மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் கார் iX1 என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 66 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய iX1 மாடல் இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    இது முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தியா கொண்டுவரப்படுகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. iX1 மாடலுக்கான முன்பதிவு பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் வலைதளத்தில் பிரத்யேகமாக நடைபெறுகிறது. வினியோகம் அக்டோபர் மாதம் துவங்குகிறது. டிசைனை பொருத்தவரை புதிய பி.எம்.டபிள்யூ. iX1 மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட கிட்னி கிரில், அடாப்டிவ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புளூ நிற அக்செண்ட்கள் உள்ளன.

     

    புதிய பி.எம்.டபிள்யூ. iX1 மாடல்: ஆல்பைன் வைட், ஸ்பேஸ் சில்வர், பிளாக் சஃபையர் மற்றும் ஸ்டாம் பே என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் iX1 மாடலில் 10.7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், M ஸ்போர்ட் லெதர் ஸ்டீரிங் வீல், புளூ ரிங் ஃபினிஷர் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. iX1 மாடலில் ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஆக்டிவ் முன்புற இருக்கைகள், மசாஜ் வசதி, ஆம்பியண்ட் லைட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டூயல் ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், பவர் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரில் 66.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டூயல் மோட்டார்கள் உள்ளன.

    இவை 309 ஹெச்.பி. பவர், 494 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்று இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    • புதிய 2 சீரிஸ் கிரான் கூப் எம் பெர்ஃபார்மன்ஸ் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • புதிய பி.எம்.டபிள்யூ. 2 சீரிஸ் மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது.

    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் தனது 220i எம் பெர்ஃபார்மன்ஸ் எடிஷன் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் இந்தியாவில் செப்டம்பர் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் பிளாக் சஃபையர் மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது.

    இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்பதிவு பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது.

     

    புதிய 2 சீரிஸ் கிரான் கூப் எம் பெர்ஃபார்மன்ஸ் மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் வழங்கப்படும் மோட்டார் 173 ஹெச்.பி. பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.1 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொருத்தவரை இதன் வெளிப்புறம் எம் மாடல்களில் வழக்கமாக வழங்கப்படும் விசேஷ டிசைன் கொண்ட முன்புற கிரில், அல்கான்ட்ரா லெதர் கவர் கொண்ட கியர் செலக்டர் மற்றும் எம் பெர்ஃபார்மன்ஸ் பாகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    • பிஎம்டபிள்யூ G310 R மாடல் முன்னதாக டிரிபில் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் நிறங்களில் கிடைத்தது.
    • பிஎம்டபிள்யூ G310 R மாடலிலும் 313சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது G310 R மோட்டார்சைக்கிளின் புதிய நிற வேரியன்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிறம் ஸ்டைல் பேஷன் என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் டிரிபில் பிளாக், பேஷன் மற்றும் ஸ்போர்ட் போன்ற நிறங்களுடன் இணைகிறது.

    புதிய நிறம் தவிர பிஎம்டபிள்யூ G310 R அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் சிங்கில்-பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன கவுல், மஸ்குலர் பியூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட்கள், என்ஜின் கவுல், ஸ்டெப்-அப் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் மற்றும் 5 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     

    ஹார்டுவேரை பொருத்தவரை 41 மில்லிமீட்டர் அளவில் அப்சைடு டவுன் போர்க்குகள், பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 300 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 240 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ G310 R மாடலிலும் 313சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 ஹெச்பி பவர் மற்றும் 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் E20 ரக எரிபொருள் மற்றும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் டியூனிங் செய்யப்பட்டு உள்ளது. 

    ×