என் மலர்
பைக்

வெளியீட்டுக்கு ரெடியாகும் டாப் 5 சூப்பர் பைக் மாடல்கள்
- RTX 300 என்பது 2-3 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.
- ராயல் என்ஃபீல்ட் 750சிசி மோட்டார்சைக்கிளை சோதித்துப் பார்த்து தயாரித்து வருகிறது.
2025-ம் ஆண்டு பிறந்தது முதல் தற்போது வரை இருசக்கர வாகன பிரியர்களுக்கான புதுவித மாடல்கள் குறைந்த அளவிலே வெளிவந்துள்ளது. பல்வேறு காரணங்களால் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் நிலைமை முற்றிலும் மாறப்போவது தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு இனி வரப்போக இருக்கும் பைக் மாடல்கள் குறித்து பார்ப்போம்...
சிஎஃப்மோட்டோ 450எம்டி (CFMoto 450MT)
சிஎஃப்மோட்டோ 450எம்டி என்பது சாகச பைக்கில் பிரபலமாக அறியப்படும் ஒன்றாகும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த மாடல் அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300 (TVS RTX 300)
இந்திய சந்தையில் புதிய RTX 300 என்பது 2-3 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும். இது டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆக வெளியாகும் என தெரிகிறது. மேலும், இது பிராண்டின் புதிய 300cc எஞ்சினைப் பயன்படுத்தும் முதல் மோட்டார்சைக்கிள் ஆக இருக்கும். இந்த பைக் முதன்முதலில் ஜனவரி 2025 இல் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 19-17-இன்ச் அலாய் வீல் அமைப்புடன் , டிவிஎஸ் பைக்கின் ஆஃப்-ரோடு சார்ந்த வேரியண்ட் வழங்கக்கூடும்.
பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் (BMW F 450 GS)
பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் கான்செப்ட் இந்தியாவில் முதன்முதலில் எக்ஸ்போ 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிஎம்டபிள்யூவின் மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலையில் பல சிலிண்டர் வகையாக இருக்கும். இந்த பைக்கின் தயாரிப்பு மாடல் சமீபத்தில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இது ஆஃப்-ரோடு-ரெடியாகத் தோன்றிய கான்செப்ட்டிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது இந்தியாவில் டிவிஎஸ்-ஆல் தயாரிக்கப்படும். மேலும் அதிகாரப்பூர்வ வெளியீடு இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 (Royal Enfield Himalayan 750)
உலகளவில் பிரபலமான ஹிமாலயன் பெயருக்கு விரைவில் 750 என்ற அடைமொழி கிடைக்கும். நீண்ட காலமாக ஒரு பெரிய ஹிமாலயன் பைக்கை ரைடர்கள் கோரி வந்த நிலையில், ராயல் என்ஃபீல்ட் 750சிசி மோட்டார்சைக்கிளை சோதித்துப் பார்த்து தயாரித்து வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் இதுவரை சில முறை சோதனைக்குள்ளாப்பட்டது. மேலும், 19-17 அங்குல ஸ்போக் வீல் கலவை மற்றும் அதிக எடை கொண்ட ஆஃப்-ரோடர் பைக்கை விட இது ஒரு டூரர் பைக் என்பது தெளிவாக தெரிகிறது.
கேடிஎம் 390 எஸ்எம்சி ஆர் (KTM 390 SMC R)
கேடிஎம் 390 எஸ்எம்சி ஆர் அதன் பெரும்பாலான கூறுகளை 390 எண்டிரோ ஆர் உடன் பகிர்ந்து கொள்ளும். ஆனால் வழக்கமான சூப்பர்மோட்டோ பாணியில், இரு முனைகளிலும் 17 அங்குல சக்கரங்களில் சாலை-சார்புடைய டயர்களுடன் சவாரி செய்யும். இது ஒரு ஸ்போர்ட்ர்ஸ் ரோட் பைக்கை தேடும் ரைடர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது ரூ. 3.36 லட்சம் விலை கொண்ட 390 எண்டிரோ ஆர்-ஐ விட மலிவு விலையில் கிடைக்க்கும். மேலும் அதிகாரப்பூர்வ வெளியீடு ஓரிரு மாதங்களில் நடைபெறும்.






