search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike"

    • பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.
    • அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்தவர் அசோக். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.

    இதனால் அடிக்கடி கைதாகி சிறைக்கு செல்வதை அசோக் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அசோக்கின் மனைவி அவரை விட்டு புரிந்துள்ளார்.

    சமீபத்தில் பெங்களூரு கிரி நகரில் ஒரு ஐடி ஊழியரின் பைக் ஒன்றை அசோக்கும் அவரது கூட்டாளி சதீசும் சேர்ந்து திருடியுள்ளனர்.

    இந்த வழக்கின் அசோக் மற்றும் சதீஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணையில் அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    "என் நண்பரின் மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பைக்கை திருடி விற்ற பணத்தை முழுவதும் அவரின் சிகிச்சைக்காக கொடுத்துவிட்டேன். என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்ற போது அந்த நண்பர் தான் எனக்கு ஆதரவு கொடுத்தார். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த உதவியை செய்ததாக" அசோக் தெரிவித்துள்ளார்.

    • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக சலுகையாக 20,000 ரூபாய் வர பிகாஸ் நிறுவனம் தள்ளுபடி வழங்குகிறது.
    • இந்த ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் செய்து ஓட்டினால் 120 கிலோ மீட்டர் வரை ஓட்ட முடியும்.

    எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனமான பிகாஸ் நிறுவனம் தனது ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆர்யூவி 350ஐ, ஆர்யூவி 350 ஈஎக்ஸ் மற்றும் ஆர்யூவி 350 மேக்ஸ் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது.

    விலை விபரங்கள்:

    • பிகாஸ் ஆர்யூவி 350 ஐ - ரூ.1.10 லட்சம்
    • பிகாஸ் ஆர்யூவி 350 ஈஎக்ஸ் - ரூ.1.25 லட்சம்
    • பிகாஸ் ஆர்யூவி 350 மேக்ஸ் - ரூ.1.35 லட்சம்

    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக சலுகையாக 20,000 ரூபாய் வர பிகாஸ் நிறுவனம் தள்ளுபடி வழங்குகிறது.

    இந்த பிகாஸ் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 4.69 பிஎச்பி பவரையும் 165 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 3 கிலோ வாட் ஹவர் லித்தியம் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்த ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் செய்து ஓட்டினால் 120 கிலோ மீட்டர் வரை ஓட்ட முடியும்.

    இந்த ஸ்கூட்டர் 500W சார்ஜருடன் வருகிறது. இது 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டரில் புளூடூத் இணைப்புடன் கூடிய 5-இன்ச் டிஜிட்டல் TFT டிஸ்ப்ளே உள்ளது. .

    பிகாஸ் ஆர்யூவி 350 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பிகாஸ் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

    தற்போது, இந்தியா முழுவதும் பிகாஸ் டீலர்ஷிப் கடைகள் சுமார் 100 இடங்களில் உள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் டீலர்ஷிப் கடைகளின் எண்ணிக்கையை 200 ஆக விரிவுபடுத்த பிகாஸ் திட்டமிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ 2.13 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமீப காலமாக பெண்களும் மோட்டார் சைக்கிளை விரும்பி ஓட்ட தொடங்கி உள்ளனர். இளம்பெண்கள் சிலர் உயர் ரக மோட்டார் சைக்கிள்களை அசத்தலாக ஓட்டி சென்ற காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் சிவப்பு நிற சேலை அணிந்த பெண் ஒருவர் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    ஜெட்டி பைக்கர்கேர்ள் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பைக் நிறத்திற்கு தகுந்தவாறு சிகப்பு நிற சேலை அணிந்து கொண்டு அந்த பெண் பைக் ஓட்டி செல்லும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது. இந்த பெண் தனது இரு கைகளையும் விட்டு விட்டு பைக் ஓட்டி செல்லும் காட்சிகளும், ஒரு கையில் பைக்கை ஓட்டியவாறே மற்றொரு கையில் சேலையின் முந்தானையை ஸ்டைலாக சுற்றிக்கொண்டு பைக் ஓட்டிய காட்சிகளும் அதில் உள்ளது.

    இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ 2.13 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






    • 7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

    உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாப்பூர் பகுதியில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

    7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில், ஹாப்பூர் போலீசார் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்களுக்கு 9,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கடந்தாண்டு இதே ஊரில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் 22,000 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது.
    • முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது R 1300 GS பிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய R 1300 GS மாடல் புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ R 1300 GS மாடல் லைட் வைட், GS டிராபி, ஆப்ஷன் GS டிரமான்டுனா மற்றும் டிரிபில் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     


    இவைதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன், எஞ்சின் மற்றும் பெரும்பாலான அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள எஞ்சின் 145 ஹெச்.பி. பவர், 149 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன்- இகோ, ரெயின், ரோட், என்டியூரோ போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பிரேக் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரெஷர் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    • தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
    • மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிக்க ஆசைப்பட்டு இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து வீடியோக்களை வெளியிட வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனாலும் தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கான்பூர் நகரின் நவாங்கஞ்ச் பகுதியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    அதில், நவீன மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் வாலிபர் திடீரென அந்த மோட்டார் சைக்கிள் மீது நின்று பயணம் செய்கிறார். அப்போது டைட்டானிக் படத்தில் கதாநாயகன் கப்பலில் நிற்பதை போன்று 'போஸ்' கொடுத்தவாறு மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உன்னாவ் போலீசார் அந்த வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    • அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது முற்றிலும் புதிய கான்செப்ட் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. R20 என அழைக்கப்படும் புதிய பைக் Concorso d'Eleganza Villa d'Este நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. R20 மாடலில் 2000சிசி ஏர்-ஆயில்-கூல்டு பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த பைக் அதிநவீன கிளாசிக் மோட்டார்சைக்கிள் போன்று காட்சியளிக்கிறது.

     


    இந்த மாடலில் அலுமினியம் ஃபியூவல் டேன்க் "ஹாட்டர் தன் பின்க்" நிறம் பூசப்பட்டுள்ளது. இத்துடன் பாலிஷ் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பி.எம்.டபிள்யூ. R20 மாடலில் அதிநவீன எல்.இ.டி. ஹெட்லைட், 3D முறையில் அச்சிடப்பட்ட அலுமினியம் ரிங் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல். வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் முன்புறம் 17 இன்ச் ஸ்போக் வீல், பின்புறம் 17 இன்ச் பிளாக் டிஸ்க் வீல் வழங்கப்படுகிறது.

     


    சஸ்பென்ஷனுக்கு இருபுறமும் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆலின்ஸ் பிளாக்லைன் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. 

    • லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.
    • காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்.

    மத்திய பிரதேசத்தில் ஓடும் சரக்கு லாரியில் இருந்து மூன்று பேர் பொருட்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் தேவாஸ்- ஷாஜாப்பூர் வழித்தடத்திற்கு இடையே சரக்கு லாரியில் இருந்து சிறிது தூரத்தில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.

    அந்த வீடியோவில், சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

    அப்போது, பின்னாள் பைக்கில் வந்த நபர் அவரது இரண்டு கூட்டாளியின் உதவியுடன் ஓடும் நிலையிலேயே பைக்கில் இருந்து லாரியில் ஏறுகிறார். இதேபோல், மற்றொரு நபரும் லாரியில் ஏறி இருவரும் சரக்குகளை மூடியிருந்த தார்பாயை கிழிக்கின்றனர்.

    பின்னர், லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.

    அதன்பிறகு, இருவரும் லாரியில் இருந்து இறங்கி, அந்த நபர் ஓட்டி வந்த பைக்கின் பின் இருக்கையில் கவனமாக இறங்கி அங்கிருந்து தப்பினர்.

    லாரி நகர்ந்ததும், சாலையில் கிடந்த சரக்கு மூட்டைகளை எடுக்க பைக்கை திருப்பினர். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் மக்சி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி பீம் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

    • 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.
    • ரைடர், எக்ஸ்டிரீம் 125 மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் 125சிசி பிரிவில் கடுமையான போட்டி உருவாகி உள்ளது. டி.வி.எஸ். மற்றும் ஹீரோ நிறுவனங்கள் முறையே ரைடர் மற்றும் எக்ஸ்டிரீம் 125R போன்ற மாடல்களை 125சிசி பிரிவில் விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பஜாஜ் பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய பைக்கில் சற்றே மெல்லிய டயர்கள், பின்புறம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதை கொண்டு இந்த பைக் வழக்கமான 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.

     


    இந்த பைக் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் எல்.இ.டி. ஹெட்லைட் வித்தியாசமான வடிவம், தடிமனான டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இருக்கைகள் ஸ்ப்லிட்-சீட் வடிவில் உள்ளன. இவற்றைக் கொண்டு பார்க்கும் போது, இந்த பைக் 125சிசி பிரிவில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    அந்த வரிசையில், இந்த பைக் 125 சிசி பிரிவில் டி.வி.எஸ். ரைடர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், புதிய பைக் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படலாம்.

    • இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் M 1000 XR மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த நிலையில், தற்போது S 1000 XR மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் விலை ரூ. 22.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தைக்கு முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட வடிவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

     


    இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது. பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலின் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக், கிராவிட்டி புளூ மெட்டாலிக் நிறங்களிலும், வைட் சாலிட் பெயின்ட் / மோட்டார்ஸ்போர்ட் (M பேக்கேஜ் உடன்) நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த பைக் உடன் டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    இதன் ஸ்டான்டர்டு வெர்ஷனில் ரைடர் மோட் ப்ரோ, ஹீட்டெட் க்ரிப், ஹெட்லைட் ப்ரோ மற்றும் அடாப்டிவ் டர்னிங் லைட், குரூயிஸ் கண்ட்ரோல், கீலெஸ் ரைட், யு.எஸ்.பி. சார்ஜர் மற்றும் டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிள் M பேக்கேஜ் உடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதில் பிரத்யேக நிற ஆப்ஷன், M ஸ்போர்ட் சீட், M லைட் வெயிட் பேட்டரி, M ஃபோர்ஜ் செய்யப்பட்ட வீல்கள், M என்டூரன்ஸ் செயின், M GPS லேப்ட்ரிகர், ஸ்போர்ட்ஸ் சைலன்சர், டின்ட் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் விண்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலில் 999 சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 168 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.

    இந்த பைக் - ரெயின், ரோட், டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என நான்குவித ரைடிங் மோட்களில் கிடைக்கிறது. இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவர் ரவீந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சரளா தேவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதால் மரம் முறிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் முறிந்து விழுந்த மரம் பல வாரங்களாக மெதுவாக சாய்ந்து வந்ததாகவும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தம்பதி மீது மரம் முறிந்து விழுந்த காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. 

    • இந்த பைக் மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
    • சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது 2024 பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பல்சர் F250 விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த பைக் பல்சர் NS400Z மாடலின் சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த பைக்கின் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தோற்றத்தில் இந்த பைக் அதன் 2023 வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த பைக் முற்றிலும் புதிய பிளாக் நிறம் பூசப்பட்டு ரெட் மற்றும் வைட் நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 2023 மற்றும் 2024 மாடல்களை வித்தியாசப்படுத்தும் வகையில் உள்ளது.

    இதுதவிர புதிய 2024 பைக்கில் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய F250 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பைக்கிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படுகிறது. இந்த பைக்- ரெயின், ரோட் மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    2024 பல்சர் F250 மாடலில் 259.07சிசி, ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    ×