search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank employee"

    • சுதன்ராஜ், விஷ்ணு ஆகியோர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தனர்.
    • விபத்தில் சுதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திசையன்விளை:

    வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை. இவரது மகன் சுதன்ராஜ் (வயது 28). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). உறவினர்களான இவர்கள் 2 பேரும் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை விஷ்ணு ஓட்டி சென்றார்.

    மோட்டார் சைக்கிள் மீது மோதல்

    மன்னார்புரம் வள்ளியூர் சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சுதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணுவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காரை ஓட்டிவந்த கும்பிகுளத்தை சேர்ந்த சங்கர் (34) என்பவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடனை வசூலிக்க சென்ற வங்கி ஊழியரை தாக்கிய கும்பல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(34). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இந்த வங்கியில் அல்லிநகரம் சிட்டுதெருவைசேர்ந்த சுப்ரமணியன் மகன் சதீஸ்குமார் வீட்டுக்கடன் வாங்கியிருந்தார்.

    அந்த கடனுக்கான தொகையை சரியாக கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது சரியான பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். சம்பவத்தன்று மேலாளர் மணிகண்டன் அவரது வீடடிற்கு சென்றபோது சுப்ரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மணிகண்டன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிளை வழிமறித்து சாவியை பிடுங்கி தகராறு செய்தனர்.

    மதுரை

    மதுரை அன்சாரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோசப் லியோன் (40). வங்கி ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் மகபூப்பாளையம் வாய்க்கால் கரைக்கு வந்தார். குழந்தை மாரியம்மன் கோவில் அருகே, குடிபோதையில் இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சாவியை பிடுங்கி தகராறு செய்தனர்.

    இதை ஆரோக்கிய ஜோசப் லியோன் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதில் தொடர்பு டைய குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தி ல்குமார் உத்தரவிட்டார்.

    தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரசாத் ஆலோசனையின்பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அடங்கிய தனிப்படை அமைக்க ப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி எல்லீஸ் நகர் சலீம் மகன் முஸ்தபா (24), மகபூப்பா ளை யம், கோவில் பிள்ளை காலனி பொன்ராஜ் மகன் மணிமுத்து (24), எஸ்.எஸ். காலனி ஜோதி மகன் டேவிட் குமார் (24), அன்சாரி நகர் நூருதீன் சசுலி மகன் மவுலி ஆகியோரை கைது செய்த னர்.

    • மதன் குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அவரது மாமியார் லட்சுமி வீட்டில் தங்கி இருந்தார்.
    • உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புற்று மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன்(வயது27). இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி சரண்யாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு மதன் குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அவரது மாமியார் லட்சுமி வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் மதனின் வீ்ட்டை சுத்தம் செய்வதற்காக அவரது மாமியார் லட்சுமி, மனைவியின் தங்கை சந்தியா ஆகியோர் சந்தை ப்பேட்டையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

    மேலும் அதில் இருந்த 14½ பவுன் நகைகள், 3 ஜோடி கொலுசு, 2 பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் ராஜவேல் வரவழை க்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை அவர் பதிவுசெய்தார். இது குறித்து மதன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • வரதட்சணை கேட்டு மனைவியை வங்கி ஊழியர் கொடுமைப்படுத்தினார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமராஜர் வாசகசாலை தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 21). இவருக்கும், சென்னையில் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் மாரியப்பன் (33) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர் தனது மனைவியுடன் 7 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

    அவர் நீண்ட நாட்களாக மனைவியை அழைத்துச் செல்ல வராததால் வந்து அழைத்துச் செல்லும்படி பவித்ராவின் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது மேலும் 10 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் கொடுத்தால் தான் மனைவியை அழைத்துச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கடந்த 4.7.2021 அன்று ராஜபாளையம் மகளிர் போலீசில் பவித்ரா புகார் செய்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மாரியப்பன் தனது மனைவியை ஒரு மாதத்தில் அழைத்துச் செல்வதாக கூறினார். ஆனால் அதன் பிறகு அவர் மனைவியை அழைத்துச் செல்லவில்லை.

    இதைத்தொடர்ந்து பவித்ரா ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    அதன்படி ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம், பவித்ராவின் கணவர் மாரியப்பன், அவரது பெற்றோர் சுப்பையா, பொன்னுத்தாய் மற்றும் உறவினர் மஞ்சுளா தேவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவையாறு அருகே லாரி மோதி வங்கி ஊழியர் பலியானார்.
    திருவையாறு:

    அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 26). 

    இவர் அரியலூரில் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் வேலை சம்மந்தமாக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று கும்பகோணம் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். 

    திருவையாறு சர்ச் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. 


    இதில் தலையில் பலத்த காயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நெல்லையில் வங்கி ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் சியோன் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது62). இவர் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் கிளார்க்காக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நளினி (54) தாழையூத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஜான்சி ராணி, சொரூபராணி (26) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

    ஜான்சிராணி கணவருடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.சொரூபராணியின் கணவர் வினோதன் தாழையூத்தில் வசித்து வருகிறார். சொரூபராணி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு சாமுவேல் ஒரு அறையிலும், அவரது மனைவி நளினி மற்றும் மகள் சொரூபராணி ஆகியோர் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு சாமுவேல் எழுந்து சென்றார்.அதற்குள் ஒரு வாலிபர் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியுடன் வீட்டிற்குள் நுழைந்தார். சாமுவேல் சத்தம் போடவே, அவரை இரும்பு கம்பியால் தாக்கி துணியால் வாயை கட்டினான்.

    சாமுவேலின் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் மகள் வந்தனர். அவர்களை அந்த நபர் அரிவாளை காட்டி மிரட்டி நகை அணிந்துள்ளார்களா? என்று தேடினான். ஆனால் அவர்கள் நகைகள் எதுவும் அணியவில்லை. இதனால் அவர்களை அருகில் உள்ள அறைக்குள் தள்ளி கதவை பூட்டினான்.

    சத்தம் போட்டால் சாமு வேலை கொலை செய்து விடுவதாக மிரட்டினான். பின்னர் சாமுவேலின் வாய்க்கட்டை அவிழ்த்து நகை-பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டினான். சாமுவேல் பதில் சொல்லாததால் அவரது கையில் அரிவாளால் வெட்டினான். மேலும் இரும்பு கம்பியாலும் சரமாரி தாக்கினான். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    பின்னர் அந்த மர்ம நபர் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து நகை-பணத்தை தேடினான். அங்கு மறைத்து வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்தையும், தங்க மோதிரம், கம்மல் ஆகியவற்றை திருடினான். மேலும் பீரோவில் இருந்த ‘செக்’ புக்கையும் எடுத்து கொண்டு தப்பியோடி விட்டான்.



    பின்பு சாமுவேல் அறை கதவை திறந்து மனைவி, மகளை மீட்டு வீட்டிற்கு வெளியே வந்து கொள்ளை நடந்த விபரத்தை அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமி‌ஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிமுருகன், கோல்டன் விஜய் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் மோப்பம் பிடித்தப்படி ஓடி ரோட்டில் சென்று நின்று விட்டது. இந்த கொள்ளை குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×