என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியர்"

    • ஓடிச் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் மோதி இழுத்து செல்லப்பட்டார்.
    • பைக் ஓட்டி வந்த தீபக் (21) என்ற இளைஞரும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்

    பெங்களூருவில் மதிய உணவிற்காக வெளியே சென்ற வங்கி ஊழியர் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இறந்தவர் லக்கேரே அருகே உள்ள கெம்பேகவுடா லேஅவுட்டில் வசிக்கும் யோகேஸ்வரி (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் ராஜாஜிநகரில் உள்ள HDFC வங்கியில் பணிபுரிந்தார். திங்கட்கிழமை, மதியம் 12:30 மணியளவில், யோகேஸ்வரி தனது சக ஊழியருடன் அருகிலுள்ள உணவகத்திற்கு மதிய உணவு வாங்க சென்றுள்ளார்.



    உணவு வாங்கிக்கொண்டு இருவரும் ராஜ்குமார் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனத்தைக் கண்டு அவரது சக ஊழியர் பாதியிலேயே நின்றுவிட்டார். ஆனால், யோகேஸ்வரி வாகனத்தின் வேகத்தைக் கணிக்கத் தவறி ஓடிச் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் மோதி இழுத்து செல்லப்பட்டார்.

    தலையில் பலத்த காயமடைந்த அவரைமீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சக ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அதிக ரத்த இழப்பு காரணமாக உயிரிழந்தார். இதனிடையே பைக் ஓட்டி வந்த தீபக் (21) என்ற இளைஞரும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 


    • HDFC வங்கி தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
    • லேப்டாப்பை தூக்கி அடிக்கவும் முயற்சித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு HDFC வங்கியில், வங்கி ஊழியர், வாடிக்கையாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்தா என்ற ஊழியர் வீடியோவில் தனது சாதியை சொல்லி, "நான் ஒரு தாக்கூர்" என்று திரும்பத் திரும்பக் கூறி, என்னிடம் பிரச்சனை செய்யாதே என்று எச்சரிப்பதும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    உடன் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் தலையிட்டு அவரை அமைதிப்படுத்தினாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லேப்டாப்பை தூக்கி அடிக்கவும் முயற்சித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்த செயலிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் ஊழியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தனியார் வங்கியிடம் இருந்து பொறுப்புக்கூறவும் வலியுறுத்தியுள்ளனர்.

    ஆனால் எதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக HDFC வங்கி தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

    ×