என் மலர்

  நீங்கள் தேடியது "jewel robbery"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதன் குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அவரது மாமியார் லட்சுமி வீட்டில் தங்கி இருந்தார்.
  • உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புற்று மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன்(வயது27). இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி சரண்யாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு மதன் குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அவரது மாமியார் லட்சுமி வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் மதனின் வீ்ட்டை சுத்தம் செய்வதற்காக அவரது மாமியார் லட்சுமி, மனைவியின் தங்கை சந்தியா ஆகியோர் சந்தை ப்பேட்டையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

  மேலும் அதில் இருந்த 14½ பவுன் நகைகள், 3 ஜோடி கொலுசு, 2 பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் ராஜவேல் வரவழை க்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை அவர் பதிவுசெய்தார். இது குறித்து மதன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூட்டை உடைத்து துணிகரம்
  • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை

  ஜோலார்பேட்டை:

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் ஊராட்சி சகல தெருவில் வசிப்பவர் சந்திரன் (வயது 67) இவர் போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

  இவரது மனைவி கலா (வயது 60) இவர்கள் இருவரும் கடந்த 27 -ந் தேதி சனிக்கிழமை இரவு கர்நாடக மாநில பெங்களூர் பகுதியில் நடைபெறும் தங்களுடைய உறவினர் உணவு விடுதி திறப்பு விழாவிற்கு பெங்களூர் சென்று விட்டனர்.

  இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் ரொக்க பணம் மற்றும் 10 பவுன் தங்க நகை அரை கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்று விட்டனைர்.

  இந்நிலையில் சந்திரன் உறவினர் நிகழ்ச்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பிய சந்திரனுக்கு நகைகள் திருடு போனது தெரியவந்தது.

  கேமராக்கள் ஆய்வு

  இதனையடுத்து சந்திரன் ஜோலார்பேட்டை போலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

  அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் விசாரணை
  • மர்ம கும்பலை தேடி வருகின்றனர்

  வந்தவாசி:

  வந்தவாசி அடுத்த சளூக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். மேஸ்திரி. இவரது மனைவி காயத்ரி (வயது 27). இவர் நேற்று வீட்டை பூட்டிக் கொண்டு நிலத்திற்கு சென்று விட்டார். பின்னர் மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக வீடு திரும்பினார்.

  அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து காயத்ரி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம கும்பல் பீரோவில் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி திருடி சென்றது தெரியவந்தது.

  இதையடுத்து காயத்ரி வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டிவனம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் நகையை ஹெல்மெட் கொள்ளையர் பறித்து சென்றனர்.

  விழுப்புரம்:

  திண்டிவனம் அருகே கீழ்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி, . இவர்கள், மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு , நேற்று இரவு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

  கீழ்மாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால், மோட்டார் சைக்கிளில் ெஹல்மெட் அணிந்து வந்த 2 பேர் , விஜயலட்சுமி அணிந்திருந்த, 10 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு, தப்பினர்.

  இதுகுறித்து வெள்ளி மேடு பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து ஹெல்மெட் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
  • இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

  கடலூர்:

  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சகுந்தலா (வயது 55). சம்பவத்தன்று இவர் சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சகுந்தலா, சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தியாகதுருகத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
  • வீட்டின் வராண்டாவில் செல்வியும், வீட்டில் உள்ள அறைகளில் மற்றவர்களும் தனித்தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

  கள்ளக்குறிச்சி: 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கப்பன் (வயது 62) இவர் நேற்று இரவு தனது மனைவி செல்வி (58), மகன் குமார், மருமகள் பிரபாவதி ஆகியோரருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வராண்டாவில் செல்வியும், வீட்டில் உள்ள அறைகளில் மற்றவர்களும் தனித்தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் மரக்கதவை கடப்பாரையால் நெம்பி திறந்து வீட்டில் படுத்து இருந்த செல்வின் கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் அதில் இருந்த தாலி, குண்டு உள்ளிட்ட 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். அப்போது செல்வியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் எழுந்து வருவதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

  விசாரணையில் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஜன்னல் திறந்திருந்ததாகவும், அந்த ஜன்னல் வழியாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் செல்வி வீட்டில் படுத்து இருந்ததை பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து செல்வி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது மரக்கதவில் இருந்த தாழ்பாளை திறந்து விட்டு மர்ம நபர்கள் வீட்டில் பதுங்கிக் கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து செல்வி மீண்டும் வந்து படுத்த பிறகு மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் இருந்த நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர் ராஜா கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தார். மேலும் இது குறித்து தியாகதுருகம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கதவை உடைத்து கைவரிசை
  • போலீசார் விசாரணை

  வேலூர்:

  வேலூர் அருகே உள்ள தெள்ளூர் ஜாமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 54). விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் கள் இவருடைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

  அங்கு பீரோவில் இருந்த செயின், மோதிரம் மற்றும் சிறுவர்களுக்கான நகை என மொத்தம் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

  வெளியூரில் இருந்து வீடு திரும்பிய அண்ணாமலை வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

  இது குறித்து அரியூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

  விவசாயி வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூட்டை உடைத்து கொள்ளையர்கள் துணிகரம்
  • போலீசார் விசாரணை

  ஆற்காடு:

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பாப்பேரி கிராமம் குளத்தங்கரை தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான பரசுராமன் என்பவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பரசுராமன் இவரது மனைவி இருவரும் வீட்டின் முன்பக்கம் கதவை பூட்டிக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர்.

  அப்போது அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து செயின் உட்பட 19 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர் வீட்டிற்கு திரும்பிய பரசுராமன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பரசுராமன் ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர் இதை அடுத்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கராபுரம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
  • அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

  கள்ளக்குறிச்சி: 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புத்திராம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி யடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றி ருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீ சார் வழக்குப்பதிந்து, கோவிலுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீன்சுருட்டி அருகே தங்கம் என நினைத்து அடகு கடையில் இருந்த நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள், அவை கவரிங் என்று தெரிந்ததால் முந்திரி காட்டில் வீசிச்சென்றனர்.
  மீன்சுருட்டி:

  அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(வயது 49). இவர் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீட்ைடயொட்டி மளிகைக்கடை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் அடகு கடையில் கவரிங் நகைகளை வைத்தும் அவர் விற்பனை செய்து வருகிறார்.

  இந்நிலையில் வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டில் தூங்க சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவசர, அவசரமாக அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த கவரிங் நகைகள் அனைத்தையும் தங்க நகைகள் என நினைத்த அவர்கள், தங்களுக்கு சரியான வேட்டை என்ற மகிழ்ச்சியில் அவற்றை திருடியுள்ளனர். பின்னர் நகைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு, அவற்றுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

  அப்போது சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன், வெளியே வந்து பார்த்தபோது அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கவரிங் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் கடை மற்றும் வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

  இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  இதில், நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களுக்கு, அவை தங்கமில்லை கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் ஆத்திரத்தில் அங்குள்ள முந்திரி காட்டுப்பகுதியில் கவரிங் நகைகளை வீசிச்சென்றது, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தூக்கி வீசப்பட்ட கவரிங் நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் போலீஸ் வேடத்தில் வந்து பெண்ணிடம் 21 பவுன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மதுரை:

  மதுரை காமராஜர் சாலை, கிருஷ்ணமூர்த்தி மனைவி பொற்செல்வி (வயது 54). இவர் நேற்று மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அங்கு 2 பேர் வந்தனர். “நாங்கள் போலீஸ். நீங்கள் கழுத்து நிறைய நகைகள் அணிந்துள்ளீர்கள். இங்கு வழிப்பறி கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

  நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி தாருங்கள். அதனை நாங்கள் பிளாஸ்டிக் பேப்பரில் மடித்து தருகிறோம்”என்று கூறினர்.

  இதனை நம்பிய பொற்செல்வி கழுத்து, காது மற்றும் கைகளில் அணிந்திருந்த 21 பவுன் தங்க நகைகளை கழற்றி கொடுத்தார். அதனை இருவரும் பிளாஸ்டிக் பேப்பரில் மடித்து கொடுத்துவிட்டுச் சென்றனர்.

  பொற்செல்வி வீட்டுக்கு சென்று அந்த பேப்பரை திறந்து பார்த்தார். அதில் நகைகள் இல்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் 2 வாலிபர்களும் நகைகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து பொற்செல்வி தெப்பக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூரில் அர்ச்சகர் வீட்டில் நகை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 21 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூர் எம்.ஜி.எம் நகர் ஐஸ்வர்ய லட்சுமி தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 28). இவர் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா தனது குழந்தையுடன் கோயம்புத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

  சத்தியநாராயணன் 29-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்குச் சென்றார். மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் தங்க நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. போலீஸ்விசாரணையில் திருட்டில் ஈடுப்பட்டது சென்னை கிண்டி பாலாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்த அரவிந்த் குமார் (37) மற்றும் சென்னை பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்த விஜயராஜ் (27) என்பது தெரியவந்தது.

  மேலும் விசாரணையில் இருவர் மீதும் சென்னை போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 21 பவுன் தங்க நகைகளை மீட்டு சத்தியநாராயணனிடம் ஒப்படைத்தனர்.