search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amman Kovil"

    • உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
    • இன்று இரவு அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    விழாவின் 2-ம் நாளான இன்று காலை மயானக் கொள்ளைவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார். 11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.

    • சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
    • மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் மேலவாடியக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅமிர்த வள்ளியம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    இந்நிலையில் மீண்டும் கோவிலை திறக்க வந்தவர் அங்கு கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.இது குறித்து கோவில் நிர்வாகி குணசேகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பசீர், தலைமை காவலர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கொடை விழா முன்னிட்டு 108 திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது.
    • மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    ஏரல் அருகே உள்ள மொட்டத்தாதன் விளையில் உச்சிமாகாளி அம்மன் கோவில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா முன்னிட்டு 108 திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது. இதில் 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா தலைமை தாங்கினார். அம்மன் கலைக்குழு நற்பணி மன்ற இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ‌கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா செய்திருந்தார்.

    ×