search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Eral"

  • விழா நாட்களில் தினமும் காலை சுவாமி வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வருதல் நடைபெற்றது.
  • விழாவையொட்டி இன்று மதியம் சுவாமி உருகுப்பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

  ஏரல்:

  தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி கோவில் நூற்றாண்டு பழமைமிக்கது. இக்கோவிலில் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவார்கள்.

  இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை சுவாமி வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வருதல் நடைபெற்றது. கருத்தப்பாண்டியன் கலையரங்கத்தில் பொம்மலாட்டம், நாதஸ்வரம், தவில் வாசிப்பு நிகழ்ச்சி, சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமாவாசை திருவிழா நாளை வரை நடைபெறும். சிகர நிகழ்ச்சியான அமாவாசை ஆடி அமாவாசை இன்று சிறப்பாக நடைபெறுகிறது.

  இதனையொட்டி காலையில் தாமிரபரணியி நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர். மேலும் பெண்கள், பக்தர்கள் பால்குடம் சுமந்து சுவாமியை வழிபட்டனர்.

  விழாவையொட்டி நூற்றுக்கணக்கான சிறிய கடைகள் அமைக்கப்பட்டு கிராம திருவிழாவை நினைவூட்டியது. விழாவையொட்டி இன்று மதியம் சுவாமி உருகுப்பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

  மாலை இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோலம், இரவு 11 மணிக்கு முதற்கால கற்பகபொன் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். ஆடி அமாவாசை திருவிழா இன்று நடைபெறுவதை யொட்டி ஏராளமான கார், வேன் மற்றும் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஸ்ரீசேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தபாண்டியன் நாடார் செய்திருந்தார்.

  • இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது.
  • வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது.

  ஏரல்:

  தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்பது பெரு வணிக தலமாகும். இங்குள்ள நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை திருவிழா 11 நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

  இந்நிலையில் இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலையில் வேள்விகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கொடிப்பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சன்னதியை சுற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு சுவாமியே தரிசனம் செய்தனர்.

  வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிசேக ஆராதனை, மாலை இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 1-ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவிலின் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்த பாண்டியன் நாடார் செய்திருந்தார்.

  • திருவிழா கடந்த 9-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • ஏரல் சூசையப்பர் ஆலய முற்றத்தில் தொடங்கிய சப்பரபவனி மெயின் பஜார், காந்தி சிலை வழியாக திருவடிநாடார்விளையை சென்றடைந்தது.

  ஏரல்:

  ஏரல் புனித சூசையப்பர் ஆலயத்தில் கோவிலில் கிளைப் பங்கான திருவழுதிநாடார் விளை புனித கரிந்தகை அந்தோணியாரின் 101 -ம்ஆண்டு திருவிழா நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றோரம் அமர்ந்திருக்கும் இந்த அந்தோனியார் தன்னை தேடி வருவோருக்கு புதுமைகள் பல புரிந்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த ஆலய

  திருவிழா கடந்த 9-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது. நேற்று மாலை ஆராதனைக்கு ஆயர் இல்ல ரஞ்சித்குமார் கர்டோசா தலைமை தாங்கினார். திருவிழா திருப்பலிக்கு பணகுடி கிராஸ்மீலாபுரம் இசிதோர் தலைமை தாங்கி செய்தி வழங்கினார். ஏரல் சூசையப்பர் ஆலய முற்றத்தில் தொடங்கிய சப்பரபவனி மெயின் பஜார், காந்தி சிலை வழியாக திருவடிநாடார்விளையை சென்றடைந்தது. வெளியூர்களில் வியாபாரம் செய்து வரும் உறவுகள், ஏரல் சூசையப்பர் குடும்ப உறவுகள், பக்கத்து கிராமத்து பக்தர்கள் என ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

  இரவும், பகலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது. இன்று ஊர் பொது அசனம் நடைபெறுகிறது. விழாவில் ஜாதி, மத பேதமில்லாமல் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

  விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் மற்றும் பங்குத்தந்தை ரவீந்திரன், பர்னாந்து ஆகியோர் செய்திருந்தனர்.

  • சுமார் 25 மாணவ -மாணவிகள் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
  • மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

  தென்திருப்பேரை:

  ஏரல் அருகிலுள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தரம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடந்த 75 நாட்களாக நடைபெற்று வருகிறது.

  பயிற்சி வகுப்பு

  அதில் இடையர்காடு கிராமத்தின் பள்ளியில் படிக்கும் சுமார் 25 மாணவ -மாணவிகள் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

  இந்த வகுப்பில் மாணவர்களுக்கு இந்து சமயத்தின் ஸ்லோகம், மந்திரம், பஜனை பாடல்கள், யோகா மற்றும் செய்முறை பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது.

  கல்வி உபகரணம்

  பயிற்சி வகுப்பின் கடைசி நாளான நேற்று ஓய்வு பெற்ற வன இலாகா அதிகாரி ஏமராஜா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான புத்தகப்பை, குடிநீர்பாட்டில், நோட்டு, புத்தகம், ஸ்கெட்ச், பென்சில் பாக்ஸ் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கினார். மேலும் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகக்குழு செயலாளர் செல்லப்பாண்டி, ஊர் பொதுமக்கள் சின்னத்துரை, செந்தூர்பாண்டி, ராஜபாண்டி, தங்கராஜ், ராமர், அரிகிருஷ்ணன், ஜெயபால், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

  • பத்திரப்பதிவு அலுவலகத்தை வேறு எங்கோ மாற்ற முயற்சி செய்கின்றனர்.
  • மாணவிகள் சிறுத்தொண்டநல்லூர் சென்று பயின்று வருகின்றனர்

  தென்திருப்பேரை:

  ஏரல் நகர அ.தி.மு.க. மற்றும் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் தி.மு.க அரசை கண்டித்து ஏரல் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

  ஏரலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பத்திர பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய உள்ளனர். இது பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நான் ஏரலை தனி தாலுகாவாக்கி தாலுகா அலுவலகம் கட்ட 5 ஏக்கர் இடம் ஏற்பாடு செய்து அதில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

  இந்த இடத்தில் அனைத்து அரசு துறை கட்டிடங்களையும் கட்ட போதுமான இட வசதி உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தை இங்கே கட்டினால் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் உள்ளதாக இருக்கும். இதை விடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தை வேறு எங்கோ மாற்ற முயற்சி செய்கின்றனர். இதை நிறுத்தாவிட்டால் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

  மேலும், ஏரல் அரசு மகளிர் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து சுமார் 1½ ஆண்டுகளுக்கு மேலாகிறது. அங்கு பயின்று வந்த மாணவிகள் சிறுத்தொண்டநல்லூர் சென்று பயின்று வருகின்றனர். அங்கு போதிய இட வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அரசு பள்ளி கட்டிடத்தை உடனே கட்டாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது.

  எனவே ஏரல் அரசு மகளிர் பள்ளிக்கு புதிய கட்டிடத்தை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏரல் சந்தையை ஏரல் ஆற்றுப்பாலம் பக்கம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்ல நான் முயற்சி செய்தேன். ஆட்சி காலம் முடிவடைந்ததால் அதை செய்ய இயலாமல் போனது.

  தி.மு.க. அரசு ஏரல் சந்தையை ஆற்றுப்பாலம் அருகே மாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. திங்கட்கிழமை சந்தை கூடும் போது மக்களுக்கு ஏராளமான இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே ஏரல் சந்தையை ஆற்றுப்பாலம் அருகே உள்ள இடத்திற்கு மாற்ற பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க.வை தலைமை ஏற்று நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை, தெற்கு மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, அண்ணா தொழிற்சங்க தலைவர் சுதாகர், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், சாத்தான்குளம் சவுந்தர பாண்டியன், ஆழ்வை கிழக்கு விஜயகுமார், ஆழ்வை மேற்கு ராஜ் நாராயணன், ஏரல் கூட்டுறவு வங்கி தலைவர் தசரத பாண்டியன், நகர செயலாளர்கள் சாயர்புரம் துரைசாமி ராஜா, தென்திருப்பேரை ஆறுமுக நயினார், நாசரேத் கிங்ஸ்லி, பெருங்குளம் வேதமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், திருச்செந்தூர் மகேந்திரன், மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், ஏரல் நகர செயலாளர் அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

  • நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை பெருநாள் 11நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
  • தை அமாவாசை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலையில் வேள்விகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சன்னதியை சுற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.

  ஏரல்:

  நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை பெருநாள் 11நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

  தை அமாவாசை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலையில் வேள்விகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சன்னதியை சுற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.

  நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

  திருவிழா நாட்களில் சுவாமி இரவு வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் சப்பரத்தில் எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 21-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பகபொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 22-ந் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. 

  • ஏரல் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • முகாமில் 9 பேரை சிகிச்கைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  சாயர்புரம்:

  ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்ட நல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் ஏரலில் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது

  டி.எம்.பி. பவுன்டேசன் சவுந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். தெரசாள் ஆலய பங்கு தந்தை ராஜா முன்னிலை வகித்தார். முகாமில் 193 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 9 பேரை சிகிச்கைக்காக தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  டி.எம்.பி. வங்கி மேலாளர் பால்ராஜ் , பாக்கர் அலி, பேரூராட்சி தலைவர் சர்மிளா மணிவண்ணன், பள்ளி ஆசிரியர் வின்சென்ட் வெள்ளையா, ஏரல் உதவும் கரங்கள் தலைவர் அருணாசலம், அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டி.எம்.பி. வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் ‌கலந்து கொண்டனர்.

  • செம்பூர் பொதுமக்கள் தாசில்தார் கண்ணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
  • குழந்தைகள் பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

  தென்திருப்பேரை:

  ஆழ்வார்திருநகரியை அடுத்த செம்பூரில் மக்கள் பயன்பாட்டில் ரெயில்வே கேட் பாதை ஒன்று உள்ளது.இந்த பாதை வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர்.

  தற்போது நெல்லை-திருச்செந்தூர் மின்சார பாதையாக மாற்றுவதால் இந்த ரெயில்வே கேட்டை நிரந்தரமாக எடுத்துவிட்டு அதன் அருகில் மாற்று பாதை ஒன்று அமைத்து, அடுத்த எல்.சி. முப்பதாவது கேட்டில் இணைப்பதாக கேள்விப்பட்டதை அறிந்த செம்பூர் பொதுமக்கள் ஏரல் தாசில்தார் கண்ணனை அலுவலகத்தில் நேரில் சந்தித்து செம்பூர் கேட் எடுக்கப்படாமல் தொடர்ந்து அதே இடத்தில் இருக்க ஆவண செய்யும்படி கேட்டு கொண்டு மனு அளித்தனர்.

  இந்த ரெயில்வே கேட் மூடும் பட்சத்தில் இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்து செல்வ தற்கும், மருத்துவத்திற்காக ஆழ்வார் திருநகரி செல்வதற்கும், பள்ளிக்கு குழந்தைகள் செல்வதற்கு 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்று அவர்கள் மனுவில் கூறி இருந்தனர்.

  இம் மனுவை பெற்றுக்கொண்டு ஆவன செய்வதாக தாசில்தார் கூறினார்.

  • கொடை விழா முன்னிட்டு 108 திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது.
  • மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா தலைமை தாங்கினார்.

  சாயர்புரம்:

  ஏரல் அருகே உள்ள மொட்டத்தாதன் விளையில் உச்சிமாகாளி அம்மன் கோவில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா முன்னிட்டு 108 திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது. இதில் 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சிக்கு மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா தலைமை தாங்கினார். அம்மன் கலைக்குழு நற்பணி மன்ற இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ‌கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மொட்டத்தாதன் விளை ஊர் தலைவர் கருவேலராஜா செய்திருந்தார்.

  • சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா 30-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
  • 29-ந்தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது.

  ஏரல்:

  ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  தொடர்ந்து இரவு 8 மணிக்கு அருணாசல சுவாமி கோவிலை வலம் வருதல் நடைபெறுகிறது. திருவிழா 30-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

  வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு மேல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிசேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 11 மணிக்கு 1-ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.

  29-ந்தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், அதன்பின் ஏரல் நகர வீதி தரிசனம், ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு தாகசாந்தி, ஏரல் நகர் வீதிகளில் தரிசனம், 30-ந்தேதி 12-ம் திருவிழாவுடன் ஆடி அமாவாசை திருவிழா நிறைவுபெறுகிறது.

  இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.