search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanmuganathan"

    • பத்திரப்பதிவு அலுவலகத்தை வேறு எங்கோ மாற்ற முயற்சி செய்கின்றனர்.
    • மாணவிகள் சிறுத்தொண்டநல்லூர் சென்று பயின்று வருகின்றனர்

    தென்திருப்பேரை:

    ஏரல் நகர அ.தி.மு.க. மற்றும் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் தி.மு.க அரசை கண்டித்து ஏரல் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஏரலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பத்திர பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய உள்ளனர். இது பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நான் ஏரலை தனி தாலுகாவாக்கி தாலுகா அலுவலகம் கட்ட 5 ஏக்கர் இடம் ஏற்பாடு செய்து அதில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த இடத்தில் அனைத்து அரசு துறை கட்டிடங்களையும் கட்ட போதுமான இட வசதி உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தை இங்கே கட்டினால் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் உள்ளதாக இருக்கும். இதை விடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தை வேறு எங்கோ மாற்ற முயற்சி செய்கின்றனர். இதை நிறுத்தாவிட்டால் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    மேலும், ஏரல் அரசு மகளிர் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து சுமார் 1½ ஆண்டுகளுக்கு மேலாகிறது. அங்கு பயின்று வந்த மாணவிகள் சிறுத்தொண்டநல்லூர் சென்று பயின்று வருகின்றனர். அங்கு போதிய இட வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அரசு பள்ளி கட்டிடத்தை உடனே கட்டாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது.

    எனவே ஏரல் அரசு மகளிர் பள்ளிக்கு புதிய கட்டிடத்தை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏரல் சந்தையை ஏரல் ஆற்றுப்பாலம் பக்கம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்ல நான் முயற்சி செய்தேன். ஆட்சி காலம் முடிவடைந்ததால் அதை செய்ய இயலாமல் போனது.

    தி.மு.க. அரசு ஏரல் சந்தையை ஆற்றுப்பாலம் அருகே மாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. திங்கட்கிழமை சந்தை கூடும் போது மக்களுக்கு ஏராளமான இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே ஏரல் சந்தையை ஆற்றுப்பாலம் அருகே உள்ள இடத்திற்கு மாற்ற பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க.வை தலைமை ஏற்று நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை, தெற்கு மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, அண்ணா தொழிற்சங்க தலைவர் சுதாகர், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், சாத்தான்குளம் சவுந்தர பாண்டியன், ஆழ்வை கிழக்கு விஜயகுமார், ஆழ்வை மேற்கு ராஜ் நாராயணன், ஏரல் கூட்டுறவு வங்கி தலைவர் தசரத பாண்டியன், நகர செயலாளர்கள் சாயர்புரம் துரைசாமி ராஜா, தென்திருப்பேரை ஆறுமுக நயினார், நாசரேத் கிங்ஸ்லி, பெருங்குளம் வேதமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், திருச்செந்தூர் மகேந்திரன், மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், ஏரல் நகர செயலாளர் அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×