search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu"

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
    • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது

    முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் இந்தி திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் அக்ஷய் குமார். அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் ஆரம்பிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று  அக்ஷய் குமார் கண்ணப்பாவின் இயக்குனர் மற்றும் விஷ்ணு மஞ்சு சந்தித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
    • விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்படுவதில்லை.

    குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் பௌத்தம், சீக்கியம் மற்றும் சமணம் ஆகியவை தனி மதங்கள் என்றும் இந்துவாக இருந்து இந்த மதங்களுக்கு மாற விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

    குஜராத் மத சுதந்திர சட்டத்தின் கீழ் மதம் மாறுவதற்கு அனுமதி அவசியம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக குஜராத் உள்துறை அமைச்சகம் சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறுவது தொடர்பான விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் பௌத்த மதத்திற்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் மதம் மாறுவது தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது குஜராத் மத சுதந்திர சட்டத்தில் ஆட்சியர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான விண்ணப்பங்களுக்கு சில மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், "சட்ட விதி 25 பிரிவு 2-இன் கீழ் சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இந்து மதத்திற்குள் இடம்பெற்று இருப்பதால் மதம் மாறுவதற்கான அனுமதி பெற தேவையில்லை," என கோரி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், குஜராத் மத சுதந்திர சட்டத்தின் படி இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களுக்கு மாறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது.
    • அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது

    நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பீகாரில் இதற்கு முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஜனதாதள கட்சி குடும்ப அரசியல் செய்கிறது என விமர்சித்திருந்தார்.

    இது தொடர்பாக அக்கூட்டத்தில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ், "நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் கிடையாது. ஆனால் எனக்கு நல்ல குடும்பம் உள்ளது. எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுது எனது மகள் ரோஷினி அவரது கிட்னியை எனக்கு தானமாக கொடுத்தார் என்று பேசினார்.

    பீகார் பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. இதே காந்தி மைதானத்தில், நாட்டின் பெரிய தலைவர்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தியுள்ளனர். பீகார் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். நாளை கூட அதுதான் நடக்கப்போகிறது

    மேலும், பிரதமர் மோடி இந்து கிடையாது. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்.

    பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்து வருகின்றனர்.

    • இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

    காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (எ) அன்வர் உசேன், மதம் மாறி சையத் அலி பாத்திமா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென மரணமடைய, அவரது உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்ய தன்னிடம் ஒப்படைக்கோரி முதல் மனைவி சாந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

    இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

    ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்ய போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் சென்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சையத்அலி பாத்திமா தரப்பினர் கூறுகையில், ஏற்கனவே சாந்தியை விவகாரத்து செய்து விட்டார். இதனால் நாங்கள் தான் அடக்கம் செய்வோம் என்று கூறினார்.

    ஆனால் சாந்தி தரப்பினர் கூறுகையில், விவகாரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இப்பிரச்சனையில் காவல் துறையினர் முடிவெடுக்க முடியாமல், உடலை கைப்பற்றி காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.

    கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்று கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இறந்த கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லீம் மதப்படி அடக்கம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவை பொறுத்தவரைக்கும், இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதத்திற்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது
    • இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல

    நாக்பூரில் ஒரு பள்ளியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

    அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. அந்த மதம் இந்து. இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை.

    எங்கு பார்த்தாலும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர், ஹமாஸ்- இஸ்ரேல் போர் குறித்து நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். இதுபோன்ற பிரச்சினை காரணமாக இந்தியாவில் ஒருபோதும் சண்டை நடைபெற்றதில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால் இந்த பிரச்சினையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்.

    இவ்வாறு மோகன் பகவத் குறிப்பிட்டார்.

    • முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர்.
    • 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்?

    இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர், இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்கள் தான் என்று குலாம் நபி ஆசாத் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான காஷ்மீர் பண்டிதர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதை பார்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

    அரசியல் லாபத்திற்காக மதத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருக்கும் குலாம் நபி ஆசாத், "சில பா.ஜ.க. தலைவர் முஸ்லீம்கள் வெளியில் இருந்து வந்துள்ளனர் என்று தெரிவித்தார். யாரும் வெளியில் இருந்து உள்ளே வரவில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இஸ்லாம் வந்துள்ளது. இந்து மதம் தான் மிகவும் பழைமை வாய்ந்தது. முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர், சிலர் முகலாய படையில் இருந்தவர்கள்," என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    "மற்ற முஸ்லீம்கள் அனைவரும் இந்துவாக இருந்து, முஸ்லீமாக மாறியுள்ளனர். இதற்கான எடுத்துக்காட்டை காஷ்மீரில் காணலாம். 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்? அனைவரும் காஷ்மீரி பண்டிட்களாகவே இருந்தனர். அவர்கள் இஸ்லாமிற்கு மாறிவிட்டனர். அவர்கள் பிறக்கும் போதே, இந்த மதத்தில் தான் இருந்தனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    • ஆன்மீக தலைவரான மொராரி பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை உபன்யாசம் செய்து வருகிறார்.
    • இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ல் தொடங்கியது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    லண்டன்:

    ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார்.

    இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

    நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்.

    என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது.

    பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம், ஆனால் அது எளிதான பணி அல்ல. எடுக்க கடினமான முடிவுகள் உள்ளன. நம் நம்பிக்கை எனக்கு தைரியத்தையும், வலிமையையும், நம் நாட்டிற்கு என்னால் முடிந்ததைச் செய்ய உறுதியையும் அளிக்கிறது.

    ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவு கூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன்.

    என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி உழைக்கவும் ராமர் எப்போதும் ஓர் உத்வேகமான நபராக இருப்பார் என தெரிவித்தார்.

    பிரதமர் ரிஷி சுனக் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ராம் என கூறியது குறிப்பிடத்தக்க்கது.

    • சுமார் 25 மாணவ -மாணவிகள் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகிலுள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தரம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடந்த 75 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    பயிற்சி வகுப்பு

    அதில் இடையர்காடு கிராமத்தின் பள்ளியில் படிக்கும் சுமார் 25 மாணவ -மாணவிகள் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

    இந்த வகுப்பில் மாணவர்களுக்கு இந்து சமயத்தின் ஸ்லோகம், மந்திரம், பஜனை பாடல்கள், யோகா மற்றும் செய்முறை பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது.

    கல்வி உபகரணம்

    பயிற்சி வகுப்பின் கடைசி நாளான நேற்று ஓய்வு பெற்ற வன இலாகா அதிகாரி ஏமராஜா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான புத்தகப்பை, குடிநீர்பாட்டில், நோட்டு, புத்தகம், ஸ்கெட்ச், பென்சில் பாக்ஸ் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கினார். மேலும் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகக்குழு செயலாளர் செல்லப்பாண்டி, ஊர் பொதுமக்கள் சின்னத்துரை, செந்தூர்பாண்டி, ராஜபாண்டி, தங்கராஜ், ராமர், அரிகிருஷ்ணன், ஜெயபால், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்ய–ப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா காலகட்டத்தில் இந்து முன்னணி பிரமுகர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ளதாக கருதப்படும் இந்து முன்னணி பிரமுகர்கள் 7 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி,

    ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, சேலம் கோட்ட செயலாளர் பழனிச்சாமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்ப–ட்டுள்ளது. இவர்களுக்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது போலீசார் உடன் செல்வார்கள். இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.

    • புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு குழு ஒன்றை அமைக்கவும், சங்கத்திற்கான நிரந்தர வங்கி கணக்கு தொடங்கவும், கடந்த ஆண்டு புளியங்குடியில் மரக்கடை தீ எரிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டர்களுக்கு இழப்பீடு வழங்க நகரின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களை சந்தித்து நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிடவும், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி சார்பில் இந்து சமய பண்பாடு வகுப்புகள் நடந்தது.
    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி ஆகியோர் இணைந்து நடத்தும் 7-ம் ஆண்டு கோடை கால இந்து சமய பண்பாடு வகுப்புகள் உடன்குடி ஒன்றிய கிராமப்புறங்களில் நடந்து வருகிறது. 

    இந்து அன்னையர் முன்னணி ஏற்பாட்டில் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாமில் ராமாயணம், மகாபாரதம் போன்ற பல்வேறு இந்து சமய புராணங்கள் பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், சுவாமி திருவள்ளுவர், கர்ணன் ஆகியோர்களின் வாழ்க்கையையும், தியானம், தினசரி இந்து கோவிலுக்கு செல்லும் அவசியம் ஆகியவற்றை சிறுவர்களுக்கு இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் கேசவன் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
    ×