என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himanta Sarma"

    • பாஜக-வில் இணைய அட்டவணை உள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர்கள் பாஜக-வில் இணைவார்கள்.
    • சிலர் 2027-ல் இணைவார்கள். சிலர் 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இணைவார்கள்.

    அசாம் மாநிலத்தில் இந்த வருடத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் பாஜக-வில் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பூபென் போரா பாஜக-வில் இணைந்தார்.

    காங்கிரஸ் தலைவர்கள் பாஜக-வில் இணைவது குறித்த கேள்விக்கு பாஜக தலைவரும், அசாம் மாநில முதல்வருமான ஹிமாந்தா சர்மா கூறியதாவது:-

    பாஜக-வில் இணைய அட்டவணை உள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர்கள் பாஜக-வில் இணைவார்கள். சிலர் 2027-ல் இணைவார்கள். சிலர் 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இணைவார்கள். மற்றவர்கள் 2031 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக இணைவர்கள்.

    ஆனால் ஒரு விசயம். காங்கிரஸ் கட்சியில் எந்த இந்து தலைவர்களும் நீடிக்கமாட்டார்கள். தற்போது பாஜக-வில் காலியிடம் இல்லை. நாங்கள் எம்.எல்.ஏ.-க்களை இணைத்தால், எப்படி அவர்களுக்கு சட்டசபையில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியும்?.

    பாஜக-வின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமறை கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, டெல்லி சென்று இறுதி ஆலோசனை நடத்தி பட்டியல் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு ஹிமாந்தா சர்மா தெரிவித்தார்.

    • பிபூரியா தொகுதியிலிருந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • ராகுல் காந்தியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அசாம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா, இன்று பாஜகவில் அதன் மாநிலப் பிரிவுத் தலைவர் திலீப் சைகியா முன்னிலையில் இணைந்தார். அவருடன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சு போரா, ராஜேஷ் குமார் ஜோஷி, கங்கன் தாஸ், ககன் சந்திர போரா உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனர்.

    பிப்.16 அன்று காங்கிரஸில் இருந்து விலகுவதாக போரா அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் உயர்மட்டக் குழு அவர் ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராகுல் காந்தியும் அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து யோசிக்க நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மறுநாளே முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வீட்டிற்கு சென்று, பாஜகவில் சேரப்போவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்த இவர், அசாம் மாநிலத் தலைவராக 2021 முதல் 2024 வரை பணியாற்றினார். அதற்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பிபூரியா தொகுதியிலிருந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர் அரசியலில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். தருண் கோகோய் முதலமைச்சராக இருந்தபோது, அரசின் செய்தித் தொடர்பாளராகவும், நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    அசாமின் தற்போதைய முதலமைச்சராக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் காங்கிஸில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     


    • அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

    கவுகாத்தி:

    தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து அசாமுக்கும் வரும் ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் அசாம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூபேன் குமார் போராவுக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்திருக்கின்றன. பா.ஜ.க.வில் போரா சேர்ந்தால் உடனடியாக அவருக்கு சீட் தரப்படும். பிப்ரவரி 22ம் தேதி போரா பாஜகவில் சேர உள்ளார். இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் போராவிடம் பேசி வருகிறார் என தெரிவித்தார்.

    • SR-க்குப் பிறகு அசாம் மாநிலத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்திருந்த 2.43 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் (SR) பணியின்போது, பாஜக-வின் புகார் அடிப்படையில் லட்சக்கணக்கான சந்தேகத்திற்குரிய வாக்குகள் நீக்கப்பட்டுள்ள என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வார் சர்மா தெரிவித்துள்ளார்.

    அசாம் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டது. நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. வரை வாக்காளர் பட்டியில் இடம் பிடித்திருந்த 2.43 வாக்காளர்கள் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    இது தொடக்கம் மட்டும்தான். SIR நடத்தப்படும்போது அதிகமான பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அசாம் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு முதன்முறையாக இவ்வளவு மிகப்பெரிய அளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    சிலர் எங்களை அச்சுறுத்தவும், பயமுறுத்தவும் முயன்றனர். நாங்கள் அதை தாண்டி முன்னேறி வெற்றி பெற்றோம். எந்தெந்த வாக்காளர்களுக்கு வசிப்பிடம் இல்லையோ அதுகுறித்து புகார் கொடுத்து, எங்களுடைய பாஜக தொண்டர்கள் பூத் அளவிலான அதிகாரிகளை ஏற்க வைத்தனர்.

    சட்டவிரோத வங்கதேசத்தினருக்கு (குடிபெயர்ந்தவர்கள்) எதிராக எங்களுடைய போர் தொடரும்.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வார் சர்மா தெரிவித்தார்.

    முன்னதாக, SR நடவடிக்கையின்போது மியாஸ் முஸ்லிம்களை நெருக்கடிக்குள் வைக்க அவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சட்டவிரோத வங்கதேசத்தினருக்கு எதிராக பாஜக தொண்டர்களால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டன என்றும் ஹிமாந்தா தெரிவித்திருந்தார்.

    அசாமில் பெங்கால பேசும் முஸ்லிம்களை மியாஸ் என அழைப்பார்கள். இது இழிவான சொல்லாக பார்க்கப்படுகுிறது. பெங்கால் பேசாதவர்களால் இவர்களை வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகிறது.

    • இந்திய அரசியலமைப்பு யாருக்கும் தடை விதிக்கவில்லை. இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த ஒரு மகள் பிரதமராக வருவார் என்பது எனது கனவு
    • இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.

    இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நிகழ்வொன்றில் பேசிய ஓவைசி, "பாகிஸ்தான் அரசியலமைப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் உயர்பதவிக்கு வருவதைத் தடுக்கிறது.

    ஆனால், இந்திய அரசியலமைப்பு யாருக்கும் தடை விதிக்கவில்லை. இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த ஒரு மகள் பிரதமராக வருவார் என்பது எனது கனவு" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அரசியலமைப்பு ரீதியாக யாரும் பிரதமராகலாம், அதில் தடையில்லை.

    ஆனால் இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது. இந்தியாவின் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனாவாலா இதுபற்றி பேசுகையில், "பிரதமர் பதவி பற்றிப் பேசுவதற்கு முன்பு, ஓவைசி தனது சொந்தக் கட்சியில் ஒரு ஹிஜாப் அணிந்த பெண்ணையோ அல்லது இஸ்லாமியர்களில் பஸ்மாந்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையோ தலைவராக்கிக் காட்டட்டும்" என்று சவால் விடுத்தார்.   

    • அசாம் மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது.
    • தற்போது புதிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச வசதிகளுடன் கவுகாத்தியின் புறநகர் பகுதியான அமின்கானில் புதிய கிரிக்கெட் மைதானம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தயாராகும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    மேலும், விளையாட்டு மீது ஆர்வமுள்ளவர்களுக்கு அசாம் மநில அரசு கட்டமைப்புகள் மற்றும் போட்டிக்கான தளத்தை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தள்ளார்.

    கவுகாத்தியின் சருசாஜாய் மற்றும் பார்சபாரா ஆகிய இரண்டு இடங்களில் தலா ஒரு மிகப்பெரிய மைதானங்கள் உள்ளன. தற்போது புதிதாக அமையவிருக்கும் மைதானம் 20 ஆயிரம் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வகையில் வருகிற பிப்ரவரி மாதம் திறக்கப்படும்.

    இந்த மைதானம் அனைத்து நவீன வசதிகள் கொண்டதாக உருவாகி வருகிறது. பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இந்த மைதானத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடத்த முடியும்.

    சருசாஜாய் மைதானத்தில் தடகள டிராக், கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. பார்சபாரா மைதானம் கிரிக்கெட் மைதானமாகும். வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரேயொரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இதுவாகும்.

    • அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு அம்மாநில அரசு தடங்கல் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு.
    • மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கடைசி நாளாக நடைபயணம் மேற்கொள்கிறார்.

    நேற்று முன்தினம் கவுகாத்தியில் நுழைவதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தடைவிதித்திருந்தார். அதையும் மீறி ராகுல் காந்தி கவுகாத்தியில் நுழைய முயன்றார். இதனால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    மேலும், ஹிமாந்தா பிஸ்வா சர்மா உத்தரவின்பேரில் போலீசார் ராகுல் காந்தி மீது மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். நேற்றைய நடைபயணத்தின்போது, என் மீது இன்னும் அதிகமாக வழக்குகள் போட முடியும். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பகிரங்கமாக மிரட்டும் விதமாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவிக்கையில் "நாங்கள் சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம். இந்த குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள குறித்து விசாரணை நடத்தும். மக்களவை தேர்தலுக்கு பின்னர் நாங்கள் அவரை கைது செய்வோம். தற்போது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை எனக் கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. கவுகாத்தில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவதற்கு சமூகத்தை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டது.
    • இந்த தேர்தல் அறிக்கை இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கானது போன்றது இல்லை.

    காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்க பொருத்தமானது என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அதிகாரத்திற்கு வருவதற்காக சமூகத்தை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டது. இந்த திருப்திபடுத்தும் அரசியலைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். இந்த தேர்தல் அறிக்கை இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கானது போன்றது இல்லை. பாகிஸ்தானுக்கானது. சமூகத்தை பிளவுப்படுத்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் காங்கிரசின் மனநிலை" என்றார்.

    பிரதமர் மோடியும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, முஸ்லிம் லீக்கின் சிந்தனையை ஒத்திருப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×