என் மலர்
உலகம்

வங்கதேசத்தில் துணிகரம்: மேலும் ஒரு இந்து சுட்டுக் கொலை
- தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
- வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி, இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற இந்து இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கிக் கொன்றனர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
விசாரணையில், கொல்லப்பட்டவர் ஆடை தொழிற்சாலை காவலாளியான பிஜேந்திர பிஸ்வாஸ் என்பதும், இச்சம்பவம் மைமன்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்ததும் உறுதிசெய்யப்பட்டது. அவரை சுட்டுக் கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா என அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடம் இருந்து சிறிய ரக துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






